குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 12, 2011

உணவு பற்றிய கேள்விகள்


(பாப்பம்பட்டி பிரிவு தாண்டி கலைஞர் கல்லூரி அருகில், மெயின் சாலையில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் வசதியுடன், லோன் வசதியுடன்,  1000 சதுர அடியில் தனி வீடு விற்பனைக்கு இருக்கிறது. தேவைப்படுவோர் உடனடியாக அணுகவும். புத்தம் புதிய வீடு இது. அழகான ஏரிக்கரையோரம், நல்ல காற்று வசதியுடன் அமைதி தழுவும் இடத்தில் இவ்வீடு இருக்கிறது. ஒரே விலை 20 லட்சம் மட்டுமே. ஃபார்ச்சூன் பிரிக்ஸ் சர்வீஸ் சார்ஜ் தனி )


(திராட்சைக் குலைகள் ரசாயன பூச்சிக்கொல்லி கலவையில் பதினான்கு வாரம் முக்கி எடுக்கப்படுகிறது - நம்மாழ்வார் )(கொத்தவரங்காய்)

சில சகோதரர்கள் பிளாக்கைப் படித்து விட்டு கடந்த ஒரு மாதமாக உணவுப் பழக்கங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இப்பதிவு.

உணவால்தான் உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்பதை முதலில் உணர வேண்டும். உணவு சரியானால் உடல் சரியாகும். மனம் சரியாக அதற்கென்று பல முறைகள் இருக்கின்றன. அது பற்றித் தெரிந்து கொள்ள “அறிவே தெய்வம்” என்ற பிளாக்கினைப் படித்துப் பார்க்கவும்.

சாப்பிடும் உணவில் எது நன்மை தரும் எது இன்பம் தரும் என்பதை அறிந்து கொண்டால் நோய்த் துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

பால் நமக்குத் தேவையற்ற உணவு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு மாதம் தொடர்ந்து காலையில், மாலையில் ஒரு கப் டீயும், சாப்பிடும் போது தயிரும் சேர்த்து வந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ எடை கூடி இருந்தது. ஒரு மாதம் பால் சேர்க்காமல் சாப்பிட்டேன். இரண்டு கிலோ குறைந்து இருந்தது. பால் வயிற்றுக்குள் சென்று புளித்து, பின் தயிராகி அதன் பிறகு செரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல சாதாரண பாலில் தானே அதிக ”நெய்” உருவாகிறது. உடம்பு சரியில்லாமல் இருப்போருக்கு பால் திரவ உணவு, தேவையான கலோரிகளைக் கொடுக்கவல்ல. ஆரோக்கிய உடம்பிற்கு எதற்குப் பால்?

புதிய தலைமுறை டிவியில் நேற்று நம்மாழ்வார் பேசிக் கொண்டிருந்தார். “திராட்சைப் பழங்கள்” ரசாயன பூச்சிக் கொல்லிகளால் பதினான்கு வாரம் பழக்குலைகள் முக்கி எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனவாம். கேட்ட எனக்கு கிர்ரென்று ஆகி விட்டது. ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியமான உணவு பழங்கள் என்றுச் சொல்வார்கள். இன்றைய காலத்தில் பழங்கள் ரசாயனக் கலவையால் உருவாக்கப்படுகிறது என்று கேட்டவுடன் மனிதன் வேறு என்னதான் சாப்பிடுவது என்று தெரியவில்லை. (புதிய தலைமுறை டிவி செய்தி வடிவாக்கம் எரிச்சலைத் தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்)

சாப்பிடும் உணவு பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்தாலே ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

சிலருக்கு கொத்தவரங்காய் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். கொத்தவரங்காய் கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது. பொறியலாகவோ, கூட்டு, உசிலியாக வாரம் ஒரு முறைச் சாப்பிட்டு வந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்புக் குறையும். 

சில பிளாக்கர்ஸ் மூலிகை, தாவர உணவுகளின் பயன்கள், அடங்கி இருக்கும் சத்துக்கள் பற்றி எழுதி இருக்கின்றார்கள். தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். பல பிளாக்குகளை படித்துப் பார்த்து கடைசியில் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆகா இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறதே என்பதற்காக நம்ப வேண்டியதில்லை. ஒவ்வொரு உடம்பும் வெவ்வேறானவை. எந்த உணவு உங்கள் உடம்புக்குத் தேவை, எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை ஆராய்ந்து உண்ண வேண்டும். 

இந்த பிளாக்கைப் படித்து பாருங்கள். சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். டாக்டர் ஜி.சிவராமன் உடலுக்கு நன்மை தரும் அரிசி பற்றிய எழுதி இருக்கும் பதிவை கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம்.
http://siddhavaithiyan.blogspot.com/2011/06/blog-post_23.html

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.