குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 10, 2011

சமையல் செய்வது பெண்களுக்கு அவசியமா?


நானும் நண்பரும் சைட்டுக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, மனைவியை போனில் அழைத்து நண்பரும் சாப்பிட வருகிறார் என்று சொன்னேன். 

சாப்பிட்டுக் கொண்டிருந்த போது “சமையல் எப்படி அண்ணா இருக்கிறது?” என்று நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மனைவி.

“ நன்றாக இருக்கிறதம்மா “ என்றுச் சொன்னவர் தொடர்ந்து சொல்லிய விஷயம் அற்புதம்.

ஒரு கணவனுக்கு மனைவியின் சமையல் நன்றாக இருக்க வேண்டுமே என்று எப்போது கவலை வரும் தெரியுமா? மகள் திருமணமாகிய பிறகு மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வரும் போதுதான் மனைவி நன்றாகச் சமைக்க வேண்டுமே என்று கவலைப்படுவார்களாம். 

மாமியார் வீட்டுக்குச் செல்லும் மருமகன்கள் நன்றாகச் சாப்பிட விரும்புவார்களாம்.மனசுக்குப் பிடித்தச் சாப்பாடு மாமியார் வீட்டுச் சாப்பாடு என்றுச் சொல்லுவார்களாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேறு எங்கும் கிடைக்காத மரியாதை, அன்பு கலந்ந உபசரிப்பு மாமியார் வீட்டில் மட்டுமே கிடைக்குமாம். மருமகனுக்குப் பிடித்தவற்றை வாங்க மாமனார் செல்லுவதும், மச்சான்கள் செல்வதும், பார்த்துப் பார்த்து மாமியார் சமைப்பதும் என்று ஒரு குடும்பமே “மருமகனுக்காக” வேலை செய்யுமாம்.

மருமகனுக்கு பிடித்த உணவை அதிகம் சமைத்து ஸ்பெஷலாக எடுத்து வைத்து விடுவார்களாம். அதுவுமன்றி மருமகன் சாப்பிட்ட பிறகுதான் பிறர் சாப்பிடுவார்களாம்.  மாமியார் வீட்டில் கிடைக்கும் ஸ்பெஷல் மரியாதை, அன்பு கலந்த உணவுகள் என்று தாயாரின் கவனிப்பில் இருந்து வந்தவர்களுக்கு, இன்னொரு தாயாரின் அன்பான உணவினை உண்ணும் பாக்கியத்தினை மருமகன்கள் விரும்புவார்களாம்.

ஒரு மனைவி நன்றாகச் சமைக்கவில்லை என்பது இந்த இடத்தில் தான் பிரச்சினையாகும் என்றுச் சொன்னார் அவர். மருமகனுக்கு மாமியார் வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல் போனால் மாமியார் வீட்டின் மீதான பற்றுதல் குறையுமாம். மனைவி ஏதாவது தவறு செய்தால் கூட, மாமியாரின் வீட்டின் உபசரிப்பை சுட்டிக் காட்டி மனைவியை சீண்டுவார்களாம். இல்லையென்றால் என் அம்மா சமைப்பது போல சமைக்கத் தெரியுதா என்று பேச ஆரம்பித்தால் போச்சு. வினை ஆரம்பித்து விடும்.

ஒரு மனிதனுக்கு கோடி கோடியாய் பணத்தினைக் கொட்டிக் கொடுத்தால் போதாது என்றே சொல்வான். ஆனால் சாப்பாடு விஷயத்தில் அவனால் முடிந்த அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. போதும் என்றே சொல்லுவான். 

சமையல் என்பதில் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன என்பதைப் பாருங்கள். 

வாழ்க்கை வெகு சுவாரசியமானது அதை நேசிப்பவர்களுக்கு அல்லவா?

* * *

2 comments:

Appaji said...

நிஜம் தான் சார்....அனுபவித்து சொன்னது போல் உள்ளது ..

தமிழ்த்தோட்டம் said...

அனுபவம் தான்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.