குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3

அந்த ஊர் முக்கியஸ்தரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஊரின் இன்னொரு முக்கியஸ்தரின் மகளோடு காதல். கவிதை மழை பொழிவான் காதலன். உலக அறிவின்றி இருக்கும் காதலியோ அவனெழுதும் கவிதைக்கு அர்த்தம் புரியாமல் என்ன இப்படியெல்லாம் எழுதுகிறாய் என்று கடிந்து கொள்வாள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனது கவிதையில் இதயமென்ற வார்த்தை தான் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

தினமும் சந்திப்பு நடக்கும். பார்வையோடு சரி. சாப்பாடு ஆச்சா? அம்மா எப்படி இருக்கிறார், அப்பா எப்படி இருக்கிறார்? இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். காதலன் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்தான். இவர்களின் காதல் ஊர் பெண்டுகளுக்குத் தெரிய கண் காது மூக்கு சேர்த்து பேச ஆரம்பித்தார்கள். காதலனின் அம்மாவிடமே அது பற்றி விசாரிக்க, காதலனின் வீடே பற்றி எரிந்தது. காதலிக்கு அவள் அப்பாவால் கும்மாங்குத்துகள் பரிசாகக் கிடைத்தன. காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன் ஊரை விட்டு வெளியேறினான்.

காலங்கள் கடந்தன. ஊருக்குத் திரும்பினான். காதலியைச் சந்தித்தான். திருமணம் பற்றிப் பேசினான்.காதலி மழுப்பினாள்.கடமை அழைக்க பிறிதொரு நாளில் சந்திக்கலாமென்று வேலைக்கு திரும்பவும் சென்றான். காலங்கள் கடந்தன. மீண்டும் ஊருக்குத் திரும்பினான் காதலியைப் பார்ப்பதற்கு.

காதலியைப் பார்க்க முடியவில்லை. காரணம் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. காதலி அவனிதயத்தில் குத்தி விட்டுச் சென்றாள். வலிக்கும் இதயத்தோடு மீண்டும் வேலைக்குத் திரும்பினான்.

காலங்கள் உருண்டோடின.

காதலன் ஏதோ விஷயமாக ஊருக்குத் திரும்பினான். காதலனின் நண்பன் காதலியைப் பற்றிச் சொன்னான். காதலிக்குப் பிறந்த மகனின் இதயத்தில் ஓட்டையாம்.

தர்மம் சூட்சுமமானது தானே ??????

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.