எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மீன் குழம்பு பற்றிய பேச்சு வந்தது.
“ என்னதான் சொல்லுங்க தங்கம், என் மனைவி வைக்கும் மீன் குழம்பை சாப்பிட்ட பிறகு வேறு எங்கும் மீன் குழம்பே சாப்பிட பிடிக்காது. மட்டன் குழம்பும், மட்டன் வறுவலும் இவள் கை பட்டால் போதும். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். நானும் ஊர் உலகமெல்லாம் சுற்றி வந்து விட்டேன் தங்கம். என்னவள் சமையல் செய்து சாப்பிட்டால் தான் சாப்பிடவே தோன்றும்” என்றார்.
ஆமோதித்தேன்.
நண்பரின் மனைவி தன் சமையல் பக்குவத்தால் கணவனை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் என்பது புரிந்தது. எவ்விடத்திற்குச் சென்றாலும் மனைவியின் நினைப்பு வருவது என்பது பெரிய விஷயம். நண்பரின் மனைவிக்கு தாம்பத்தியம் பற்றிய சரியான அர்த்தம் தெரிந்திருக்கிறது.
யாருக்காக சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனைவியின் முகம் அவனுக்குள் புரளும். மனைவியின் முகமும், அவளின் சுவையான சமையலும் அவனுக்குள் மனைவி மீதான அன்பினை ஊழிக்காற்றாய் ஊதிப் பெருக்கும். அவனுக்காக அவனுடன் இசைந்து பெற்றுத் தரும் குழந்தைகளையும், குடும்பம் நடத்தும் அழகினையும் எண்ணி அவன் மாய்ந்து போவான். அவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலோங்க ஓடி ஓடி சம்பாதிப்பான். இது தான் வாழ்க்கை. இது தான் தாம்பத்தியம். பிறருக்காக வாழ்வது தான் வாழ்க்கை.
கிராமப்புறங்களில் இந்த வாழ்வினைத் தான் முந்தானை முடிச்சு என்பார்கள். வாழ்வியல் கல்வியில் சமையல் கலை என்பது ஒரு முக்கியமான பகுதி. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் சமையல் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். விளைவு தாம்பத்திய வாழ்வு முறிவு.
மனிதன் வாழ்வது எதற்கு ? சிருஷ்டிக்காக. அதை மறந்து விட்டார்கள் இன்றைய மாந்தர்கள். புலனின்பமே வாழ்வின் அர்த்தமென்றெண்ணி வாழ்வினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கின்றார்கள்.
தாம்பத்திய வாழ்வின் இன்றியமையா பகுதி உணவு. இன்றைய ஸ்பெஷல் தென்னிந்திய மீன் குழம்பு வைப்பது எப்படி என்ற விளக்கப் படம். இப்படத்தைப் பார்த்து முயற்சிக்கவும்.
குறிப்பு : மீன் குழம்பில் கவுச்சி வாடை அடிக்க கூடாது. அப்படி கவுச்சி வாடை வந்தால் மீன் குழம்பு சரியில்லை என்று அர்த்தம். மீனை நன்கு கழுவி சற்று லெமன் சாறு சேர்த்து மீண்டும் கழுவினால் கவுச்சி வாடை போய் விடும். சங்கரா, வஜ்ஜிரம், பாறை, மஞ்சக்கிளி, உளி, தட்டக்காரா, செம்மீன், வெள மீன் போன்றவை மீன் குழம்புக்கு ஏற்றது. காரமும், புளிப்பும் சேர்ந்தால் தான் மீன் குழம்பு சுவையாக இருக்கும். ஆற்றிலிருந்து பிடித்து வரும் மீனுக்கும், கடல் மீனுக்கும் சுவை மாறுபடும்.
2 comments:
கணவன், மனைவியின் ஒற்றுமை, நல்ல குடும்பத்தை உருவாக்கும். நல்ல குடும்பம் நல்ல சந்ததியை உருவாக்கும். நல்ல சந்ததி உண்டாணால் நாடு வளம் பெரும். நல்ல தொரு குடும்பம் பல்கலைகழகம்.
வள்ளுவர் இரண்டே வரிகளில் எவ்வளவு அழகாக உரைத்துள்ளார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
மிக நல்ல பதிவு, வாழ்க்கையின் பிடிப்பில் உள்ள அர்த்தம் புரிகிறது, உங்களின் எழுத்துக்களெல்லாம் படிக்க ஆவல்
நன்றி
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.