குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 6, 2012

ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம்




(சூரியனைச் சுற்றி ஏற்பட்ட அற்புத வளையம் )

என்றைக்கும் இளமை, மரணமில்லா வாழ்க்கைதான் அறிவியல் உலகின் முன்னால் இருக்கும் மிகப் பெரும் சவால். 

சிதம்பரம் நடராஜரின் சிலையின் உதவியால், சாதாரண மனிதரால் உணர்ந்த, பலரால் உணர முடியாத ஹிக்ஸ் போசான் அணுவைக் கண்டுபிடித்து விட்டாலும் மனிதன் என்றைக்கும் இளமையாய் வாழவும், மரணமே இல்லாத நிலையை அடையவும் இன்றைக்கும் எந்த அறிவியல் அறிஞராலும் எந்த வித கண்டு பிடிப்பையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சித்தர்களின் நூல்களில் மரணமே இல்லாத வாழ்க்கை வாழ குறிப்புகள் இருக்கின்றன என பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைக் கண்டுபிடிக்கக் கூட ஏதாவது ஒரு வெளி நாட்டுக்காரன் வர வேண்டும் போல. 

மருத்துவ உலகில் அபார வளர்ச்சி அடைந்தாலும் இயற்கை புதுப் புது நோய்களை உருவாக்கி மனித குலத்தை ஒட்டு மொத்தமாய் மேலுலகம் அனுப்பிக் கொண்டு வருகின்றது. இயற்கையை வெல்ல மனிதனால் என்றைக்குமே இயலாது என்பதுதான் இதுவரை மாற்ற முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

ஆனாலும் மனித குலம் என்றும் இளமையாய் வாழ பல்வேறு வழிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் டிராகுலா. இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் என்றும் சொல்லலாம்.

இளமையான உடல்களின் ரத்தத்தைக் குடித்தால் என்றும் இளமையோடு வாழலாம் என்று இரவில் இளமையானவர்களைத் தேடிப் பிடித்து கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன ரத்தக்காட்டேறிகள் ஹாலிவுட்டின் பல படங்களில். இக்கருத்தில் உண்மை இருக்கிறதா என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.

இளம் வயதுடையவர்களின் இரத்தத்தில் “டெல்டா” என்று புரோட்டின் அதிக அளவில் உருவாகி காயங்கள், இரத்த அணுக்களை புதுப்பித்து, சரி செய்து உடம்பை மேலாண்மை செய்து பொலிவுடன் திகழ உதவுகின்றன என்று கண்டுபிடித்தார்கள். இந்த “டெல்டா” முதியவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு காணப்படுவதையும் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

முதிய வயதுடைய எலி ஒன்றையும், இளமையான எலி ஒன்றையும் பிடித்து இரத்தங்களை மாற்றி மாற்றிச் செலுத்தியதில் முதிய எலியின் செயல்பாடுகள் அதிகரித்து இருந்ததையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி சொல்லும் விஷயம் என்னவென்றால் இளமையான ரத்த அணுக்கள் முதியவர்களின் உடம்பில் மாற்றங்களைச் செய்கின்றன என்பதுதான். 

அதாவது ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.



உதவி : ஹிஸ்டரி டிவி சானல்

-




1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல் நண்பரே...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...



என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.