மனிதனின் சில துன்பங்களுக்கு காரணம் பிறரின் கண் பார்வை. நான் அதை இது நாள் வரையிலும் அனுபவித்து வருகிறேன். எனக்கு திருமணமான புதிது. நானும் மனைவியும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தோம். அன்றொரு நாள் மதியம் மனைவி சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது அடிக்கடி வியாபாரம் தொடர்பாய் யூபிஎஸ் விற்கும் விற்பனை பிரதிநிதி வந்தார். ஆஃபீஸ் அறையின் கதவு மூடியிருந்தும், தட்டினார். யாரென்று பார்க்க கதவைத் திறந்த போது உள்ளே வந்து விட்டார். உள்ளே வந்தவரை வெளியேவா போகச் சொல்ல முடியும். அப்போது தட்டில் சாப்பாடு பரிமாறி இருந்தது. தட்டைப் பார்த்தார், என்னைப் பார்த்தார், “வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் சார் !” என்றார். சாப்பிடுங்கள் என்றுச் சொல்லியும் கேட்கவில்லை.
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியவில்லை, அன்றிலிருந்து சாப்பாடு கொண்டு வரமுடியவில்லை. நேரத்திற்குச் சாப்பிடவும் முடியவில்ல நீண்ட காலத்திற்கு.
நானும் குழந்தைகளோடு மனைவியும் எங்காவது சென்று வந்தால் சரியாக ஒரு மாதம் எங்களுக்கு காய்ச்சல் வந்து விடும். படாத பாடு படுவோம். சிங்காநல்லூரிலிருக்கு மசூதிக்குச் சென்று கயிறு போட்டுக் கொண்டு வந்தால் உடனடியாக காய்ச்சல் நிற்கும். அதே போல வீறு வீறு என்று அழுதுகொண்டு காய்ச்சலில் அவதிப்படுவர்களை மந்திரித்து தாயத்துக்கட்டுபவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு குழந்தை அது பாட்டுக்கு சிரித்துக் கொண்டு, ,காய்ச்சல் நின்று போய் இருக்கும். இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் மேற்கண்ட சம்பவங்கள் உண்மையாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.
என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டால், வரக்கூடிய திருஷ்டிகளை வேற்றுப்பக்கமாய் திருப்புவது தான் பரிகாரம் என்கிறார்கள். வீடென்றால் வாழை வைக்கலாம். அல்லது திருஷ்டிப் பூசணிக்காய் கட்டலாம். மனிதனென்றால் கருப்புக் கயிறு கட்டலாம், இல்லை தாயத்து அணியலாம்.
கண் திருஷ்டி என்பது மனிதனைத் தாக்கும் கொடிய ஒரு வகை பார்வை நோய். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது என்பது முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
4 comments:
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு முதுமொழி இருக்கே!
அனுபவப் பதிவு ! நிறையப் பேர் கண்ணு போடங்க சார்! எனக்கும் சில நேரங்களில் இது போல் நடப்பதுண்டு ! ஆனால் கண்டுக்கிறது கிடையாது!
sir,
what you said is true and we have to be very careful about such persons in the future. i have also got lot of experiences like this.
sir, why don't you ask your friend Mr. M R Anandha Vel for a solution or for a protection. He is one of the GEMS in Coimbatore. He is gentle, true and honest man with lots of powers!
i too had good contact with him till last year, now he is busy and could not go and meet him just like that. so, he is now far away from my reach!
sir, u can ask Mr. M R AnadhaVel for a solution or for a protection as he is honest man with lot of powers!
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.