நிமிடத்தில் கண்டம் விட்டு கண்டம் தகவல்கள் பரிமாறவும், இருந்த இடத்திலிருந்தே விரும்பக்கூடிய தகவல்களைப் பெறவும், மற்ற இன்னபிற வசதிகளையும் இன்டர்நெட் மூலம் இன்றைய உலக மாந்தர்கள் அனுபவித்து வருகிறார்கள். வளர்ந்த நகரங்களில் எளிதாக பிராட்பேண்ட் அகலக்கற்றை, டயலப் மூலம் இண்டர் நெட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் டெலிபோனோ அல்லது செல்போனோ வயர்களோ செல்லாத ரூரல் ஏரியாக்களில் எப்படி இணையத்தை பயன்படுத்துவது ? காட்டுக்குள் செல்ல வேண்டுமென்ற சூழ் நிலையில் அங்கிருந்து எப்படி இணைய உலகில் தொடர்பு பெற முடியும் ? அதற்கும் வழி இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பைப் பெறுவதன் பெயர் தான் சாட்டிலைட் இன்டர்நெட். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். லேப்டாப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருப்பார்கள். எங்கோ ஒரு அத்துவானக் காட்டிலிருந்து கொண்டு இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா ? எப்படி செயல்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்துப் பாருங்கள்.
இணைப்புக்கு தேவையானவை : இரண்டு அல்லது மூன்றடி அகலமுள்ள டிஷ் ஆண்டனா, சிக்னல் ரிசீவர், மோடம் மற்றும் கோயாக்சில் கேபிள். இவை தான் சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறத் தேவையானவை.
கருவிகளைப் பொறுத்துவது எப்படி : டிஷ் ஆண்டனாவை (சரியான திசையில் பொறுத்த வேண்டும்) சர்வீஸ் புரவைடரின் சாட்டிலைட்டின் சிக்னல் பெறும் வகையில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கோயாக்ஸில் கேபிள் மூலம் சர்வீஸ் புரவைடர் தரும் மோடத்தை டிஸ் ஆண்டனாவில் பொருத்தப்பட்ட ரிசீவருடன் இணைக்க வேண்டும். மோடத்திலிருந்து ஈதர்னெட் மூலம் கணிப்பொறியில் இணைக்க வேண்டும். கணிப்பொறியில் டிசிபிஐபி வசதி இருக்க வேண்டும். விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இருந்தால் போதும்.
எப்படிச் செயல்படுகிறது : கணிப்பொறியிலிருந்து வரும் சிக்னல் ஆண்டனாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்டுக்கு அனுப்பப்படும். சாட்டிலைட் சர்வீஸ் புரவைடரின் ஹப் செண்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த ஹப் செண்டர் இண்டர்னெட்டுடன் தொடர்பில் இருப்பதால் பயன்படுத்துவோரிடமிருந்து வரும் வேண்டுகோளுக்கேற்ப தேவைப்படும் தகவல்களை பெற்று சாட்டிலைட்டுக்கு அனுப்பி வைக்கும். சாட்டிலைட்டிலிருந்து கணிப்பொறிக்கு தகவல்கள் அளிக்கப்படும். இங்கு சாட்டிலைட், ஹப் செண்டர்கள் கேட்வேயாகச் செயல்படும்.
அமெரிக்காவில் இந்த சர்வீசைத் தருவதற்கு கம்பெனிகள் இருக்கின்றன. மாதமொன்றுக்கு நான்காயிரம் ரூபாயும், மேற்படி பொருட்களை நிறுவவும் வருடத்திற்குமாக மொத்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் செலவாகும். தற்பொழுது ஒரு எம்பி அளவுக்கு டவுன்லோட் ஸ்பீட் வசதியும், 126 கேபி அளவுக்கு அப்லோடு வசதியும் தருகிறார்கள். இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் படிக்கும் வாசகர்கள் தகவல்கள் தரலாம்.
5 comments:
VSAT வசதி இந்தியாவில் உள்ளதே ?
நல்லது, ஆனால் ரியல் டைம் தொலைத் தொடர்புகளுக்கு இவை சரிப்பட்டு வரா.
Hi Gold,
Sattelite Internet is very popular in Myanmar. One of my colleuge who works with me from Myanamar(Burma) shares his news about sattelite internet.
அனானிமஸ் !
எந்த நிறுவனம் இத்தகைய வசதியினைத் தருகிறது என்று தெரியுமா ? தெரிந்தால் கொஞ்சம் அதை விபரமாக எழுதுங்களேன்.
//எந்த நிறுவனம் இத்தகைய வசதியினைத் தருகிறது என்று தெரியுமா ? தெரிந்தால் கொஞ்சம் அதை விபரமாக எழுதுங்களேன்.//
ஏர்டெல் - பாரதி வி சாட் வசதிகள் தருகிறது
http://www.airtel.in/wps/wcm/connect/airtel.in/Airtel.In/Home/ForYourBusiness/Satellite+Services/VSAT+Connectivity/
பரதன்
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.