குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கணிப்பொறி. Show all posts
Showing posts with label கணிப்பொறி. Show all posts

Sunday, December 6, 2009

Manashosting, Consumer Court, Karnataka Chief Minister

மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். ஏகப்பட்ட அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.

கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.

மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையத்தில் ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.

விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.

அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.

ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு என்ன சொல்லப் போகிறது சட்டம்? எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் தரப்போகும் விடை தான் என்ன? தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம். கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?

என்றைக்கு சட்டம் இதைப் போன்ற சட்டத்தின் கொடுமைகளை நீக்குகிறதோ அன்று தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டது. அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.

Monday, December 8, 2008

மொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா ?



டெக்ஸ்டாப் மாடல் கம்ப்யூட்டர் இன்று லேப்டாப்பாக மாறி விட்டது. இன்னும் சிறிது காலத்தில் ”மொபைல்டாப்” கம்ப்யூட்டராக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் எதிர்கால மொபைல்டாப் எப்படி உருவாக்கலாம் என்ற யோசனைதான் இந்தப் பதிவு.

தற்போது இருக்கும் மொபைல் போனில் சிறு மாறுபாடுகளைச் செய்தால் போதும், மொபைல் போனை முழுக் கணிணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான வசதிகள் : இன்பில்ட் இண்டகிரேட்டட் புரஜெக்டர் (INBUILD INTEGRATED PROJECTOR), கீபோர்ட் (KEY BOARD), மெளஸ்(MOUSE), மொபைல் போனுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் (OPERATING SYSTEM). இந்த வசதிகளை மொபைல் போனில் கொண்டு வந்தால் போதும். அட்டகாசமான கம்ப்யூட்டர் தயார். தற்பொழுது ரேடியோ, டிவி, இணையம் மூன்றினையும் மொபைலில் பயன்படுத்துகிறோம். மொபைலை மொபைடாப் ஆக மாற்றி விட்டால் உள்ளங்கைக்குள் உலகம். அகன்ற திரையில் டிவி பார்க்கலாம். சாட்டிங்க் செய்யலாம். இன்னும் என்னென்னவோ செய்து தூள் கிளப்பலாம். ஆளுக்கொரு கணிணி. ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டால் போதும். ஆளாளுக்கு தனி உலகம். திரை தேவையில்லை. ஸ்கிரீன் தேவையில்லை. செல்போனிலிருந்து சுவரிலோ அல்லது தரையிலோ செல்போனின் உள்ளிணைந்த இண்டகிரேட்டட் புரஜெக்டர் மூலமாக ஸ்கீரினைக் கொண்டு வரலாம். மொபைல் போனுடன் (தேவையென்றால் இணைத்துக் கொள்ளும் வசதி) இணைந்த கீபோர்ட், மெளஸ் மூலம் கணிணியில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்யலாம். பேப்பர் வடிவில் சுருட்டி வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீபோர்டுகள் வந்து விட்டன. மெளஸ்ஸும் சிறிய சைஸ்சில் கிடைக்கின்றன. இணைய இணைப்புக்கு 3ஜி டெக்னாலஜி பயன்படுத்தலாம். இதற்கு என்று பெரிய அளவில் செலவு ஏதும் பிடிக்காது. பிரச்சினை என்னவாக இருக்குமென்றால் ஸ்டோரேஜ். இதற்கும் வழி இருக்கிறது. அதிவேக பிராசஸர், மற்றும் ரேம் மெமரியுடன், எஸ்டி கார்ட் மூலம் இப்பிரச்சினையையும் எளிதில் தீர்த்து விடலாம். 3ஜி வந்து விட்டால் இணைய வேகமும் உயரும். ஆக, மொபைல் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இவ்வகைக் மொபைல் கம்ய்யூட்டரை உருவாக்கியே தீர வேண்டும். இதற்கான விலையினைக் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்குள் அடக்கி விடலாம். பவர் பிரச்சினை இருக்காது. யூபிஸ் தேவையில்லை. இப்படி எவ்வளவோ வசதிகள் தரப்போகும் மொபைல்டாப் எப்போது வரும் ??????

Monday, November 24, 2008

சாட்டிலைட் இன்டர்நெட்

நிமிடத்தில் கண்டம் விட்டு கண்டம் தகவல்கள் பரிமாறவும், இருந்த இடத்திலிருந்தே விரும்பக்கூடிய தகவல்களைப் பெறவும், மற்ற இன்னபிற வசதிகளையும் இன்டர்நெட் மூலம் இன்றைய உலக மாந்தர்கள் அனுபவித்து வருகிறார்கள். வளர்ந்த நகரங்களில் எளிதாக பிராட்பேண்ட் அகலக்கற்றை, டயலப் மூலம் இண்டர் நெட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் டெலிபோனோ அல்லது செல்போனோ வயர்களோ செல்லாத ரூரல் ஏரியாக்களில் எப்படி இணையத்தை பயன்படுத்துவது ? காட்டுக்குள் செல்ல வேண்டுமென்ற சூழ் நிலையில் அங்கிருந்து எப்படி இணைய உலகில் தொடர்பு பெற முடியும் ? அதற்கும் வழி இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பைப் பெறுவதன் பெயர் தான் சாட்டிலைட் இன்டர்நெட். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். லேப்டாப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருப்பார்கள். எங்கோ ஒரு அத்துவானக் காட்டிலிருந்து கொண்டு இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா ? எப்படி செயல்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்துப் பாருங்கள்.

இணைப்புக்கு தேவையானவை : இரண்டு அல்லது மூன்றடி அகலமுள்ள டிஷ் ஆண்டனா, சிக்னல் ரிசீவர், மோடம் மற்றும் கோயாக்சில் கேபிள். இவை தான் சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறத் தேவையானவை.

கருவிகளைப் பொறுத்துவது எப்படி : டிஷ் ஆண்டனாவை (சரியான திசையில் பொறுத்த வேண்டும்) சர்வீஸ் புரவைடரின் சாட்டிலைட்டின் சிக்னல் பெறும் வகையில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கோயாக்ஸில் கேபிள் மூலம் சர்வீஸ் புரவைடர் தரும் மோடத்தை டிஸ் ஆண்டனாவில் பொருத்தப்பட்ட ரிசீவருடன் இணைக்க வேண்டும். மோடத்திலிருந்து ஈதர்னெட் மூலம் கணிப்பொறியில் இணைக்க வேண்டும். கணிப்பொறியில் டிசிபிஐபி வசதி இருக்க வேண்டும். விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இருந்தால் போதும்.

எப்படிச் செயல்படுகிறது : கணிப்பொறியிலிருந்து வரும் சிக்னல் ஆண்டனாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்டுக்கு அனுப்பப்படும். சாட்டிலைட் சர்வீஸ் புரவைடரின் ஹப் செண்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த ஹப் செண்டர் இண்டர்னெட்டுடன் தொடர்பில் இருப்பதால் பயன்படுத்துவோரிடமிருந்து வரும் வேண்டுகோளுக்கேற்ப தேவைப்படும் தகவல்களை பெற்று சாட்டிலைட்டுக்கு அனுப்பி வைக்கும். சாட்டிலைட்டிலிருந்து கணிப்பொறிக்கு தகவல்கள் அளிக்கப்படும். இங்கு சாட்டிலைட், ஹப் செண்டர்கள் கேட்வேயாகச் செயல்படும்.

அமெரிக்காவில் இந்த சர்வீசைத் தருவதற்கு கம்பெனிகள் இருக்கின்றன. மாதமொன்றுக்கு நான்காயிரம் ரூபாயும், மேற்படி பொருட்களை நிறுவவும் வருடத்திற்குமாக மொத்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் செலவாகும். தற்பொழுது ஒரு எம்பி அளவுக்கு டவுன்லோட் ஸ்பீட் வசதியும், 126 கேபி அளவுக்கு அப்லோடு வசதியும் தருகிறார்கள். இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் படிக்கும் வாசகர்கள் தகவல்கள் தரலாம்.

Monday, May 26, 2008

ஹாக்கர்ஸால் தாக்கப்படும் செல்போன்கள்

எஸ் எம் எஸ் மூலம் ஹாக்கர்ஸ் செல்போன் பயன்படுத்துபவர்களின் தகவலை திருடி விடுகிறார்கள். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் என்று வரும் எஸ் எம் எஸ்க்களை உடனே அழித்து விடவும். இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் செல்போனின் தகவல்கள் அனைத்தையும் அந்த மெசேஜ் அனுப்பியவரை சென்று சேரும். இன்கமிங், அவுட்கோயிங் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். இல்லையெனில் ஐடிடெண்டியினை அழித்து விடுவார்கள்.

உங்கள் புருஷனுக்கு ஆக்ஸிடென்ட், இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம். ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் எடுத்துக் கொண்டு இந்த முகவரிக்கு உடனே வரவும் என்ற மெசேஜ் கிடைத்து அரக்க பரக்கச் சென்று அந்தப் பெண்ணை வழிமறித்து பணத்தை சுவாகா செய்த நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது.

ஜாக்கிரதை...

Saturday, April 26, 2008

படித்துக்காட்டும் பிடிஎப் டாக்குமெண்ட்

--------------------------------------------------------------------------------
அனைவருக்கும் பிடிஎப் டாக்குமென்டுகள் பற்றி தெரியும் என்று நினைக்கின்றேன். ஆங்கில மொழியில் இருக்கும் பிடிஎப் டாக்குமெண்டை திறந்து கொள்ளவும். கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + வி சேர்த்து அழுத்தினால் திறந்து இருக்கும் பக்கத்தை அழகாக படித்து காட்டுகின்றது. கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + இ அழுத்தினால் நின்று விடும். முழு டாக்குமெண்டையும் படிக்க கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + பி அழுத்த வேண்டும். அடோப் அக்ரோபேட் ரீடர் 6 அல்லது 7ம் பதிப்பில் வேலை செய்கின்றது. ஜாலியா கேளுங்க, கேளுங்க , கேட்டுக்கிட்டே இருங்க.....

அப்புறம் ஸ்பீக்கர் வேணுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாய்க்க கூடாது.

அதிகப் பிரசிங்கத்தனமா தமிழைக் கேட்கலாம் என்று டாக்குமெண்டுகளை திறந்து மேற்படி கீகளை அழுத்தினால் ஒன்றும் வராது. பேக் சிலாஷ் அது இதுவென்று அழகிய தமிழ் பாடல்களாக கேட்கும்.

இசை அமைப்பாளர்கள் இதனை உபயோகப்படுத்தலாம். அடியேனும் முயற்சி செய்து கதிகலங்கிப் போனேன்...