குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, April 22, 2012

சித்திரை மாதத்தில் பிறந்தால் சாதிக்கலாமா?

சித்திரை மாதம் பிறந்தால் நல்லது அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் தான் சார்லி சாப்ளின், விக்டோரியா மகாராணி, சாமுவேல் ஜான்சன், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்ஸாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர்கள் சித்திரை மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர் என்று தினமணியில் எழுதி இருந்தார்கள்.

ராணிகளைத் தவிர மற்ற அனைவரும் சின்னஞ் சிறு வயதில் பட்ட துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் சித்திரையில் பிறந்து சாதித்தவர்கள் பட்ட துயரங்களை விட சாதித்தவை பெரிதாக இருக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை.

துன்பங்கள் தான் வாழ்க்கையைச் செம்மைப் படுத்த இயலும் என்பார்கள். எனக்குப் பிடித்த அப்துற் றஹீம் அவர்கள் “வாழ்க்கை ஒரு முள் செடி போன்றது, அதில் பூத்திருக்கும் பூவில் இருக்கும் தேனை முள் குத்தாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருக்கவே முடியாது” என்பார்.

வாழ்க்கை எல்லோருக்கும் இன்பமானதாய் இருந்ததாய் யாரும் சொல்லவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஏழைக்கு ஒரு பிரச்சினை,பணக்காரனுக்கு ஒரு பிரச்சினை என்று பிரச்சினை இல்லாதோரை இவ்வுலகத்தில் காணுவதே அரிதென்றாகி விட்டது.

எந்த மாதத்தில் பிறந்தாலும், பிறப்பவர்களுக்கு பிரச்சினை வரத்தான் செய்கிறது. மாதத்தில் எதுவும் இல்லை, மனதில் தான் வாழ்க்கையின் இன்பமே இருக்கிறது என்கிறார் எனது ஆன்மீகவாதி நண்பர் ஒருவர்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

Friday, April 20, 2012

குழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா?




உறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந்தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று.  பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.



இரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும்.  கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா? இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா? அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

வீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.

தாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் அழுகின்றன ! அம்மா கவனிக்கவில்லை என்று !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

சவக்கடை (அனைவரும் படியுங்கள் ப்ளீஸ்)




எனக்காக இன்றைக்கு மட்டும் ஒரு ஒரு தடவை என்று ஆரம்பிக்கப்படும் குடி, அடுத்து மாதமொருமுறை என்று மாறும். அடுத்து வாரம் ஒரு முறை என்றாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று மாறி, பின்னர் வீட்டிலேயே குடிக்கலாம் என்று (உபயம் : தமிழ் சினிமாக்கள்) மாறி, பின்னர் தினம் தோறும் ஒரு சுமால் பிறகு ஆஃப் என்று தொடர்ந்து புல் ஆகி விடும். பிறகு குடிக்காமல் இருந்தால் கைகள் நடுங்க ஆரம்பித்து, வேறு வழி இன்றி தினமும் உணவு போல குடி மாறி விடும். நோய்கள் உருவாகும். மருத்துவம் ஆரம்பிக்கும். குடிக்கான சிகிச்சை ஆரம்பிக்கும். 

முடிந்து வீடு வருபவருக்கு, ஒரு சொட்டு குடித்தால் என்ன என்று தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பிப்பார். நடுக்கமெடுத்த கைகள் குடியை நிறுத்தி மீண்டும் குடிக்க ஆரம்பித்த பிறகு தன்னை அறியாமலே உளற ஆரம்பிப்பார்கள். மனைவியை சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். உறவினர்களுடன் வம்புக்குச் செல்வார்கள். நண்பர்களுடன் சண்டைக்குப் போவார்கள். வெளியிடங்களில் குடித்து விட்டு விழுந்து கிடப்பார்கள். ஆல்கஹால் உடம்பை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் சூழலில் மனைவியை அல்லது நண்பர்களை கடித்து வைப்பார்கள். 

இந்த நிலை தான் ஆல்கஹால், தனக்கு அடிமையானவனை முடித்துக் கட்டக் கூடிய நிலை. அடுத்து திடீரென தற்கொலைக்கு முயல்வார்கள். ஆல்கஹால் இதைத்தான் செய்கிறது. குடிக்கும் மனிதனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சமூகத்தில் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி கொன்று போடும். 

மானம் போய், மரியாதை போய், காசு போய், முடிவில் உயிரும் போய் விடும். குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும். குடிகாரன் மனைவி, குடிகாரன் மகள், மகன் என்று சமூகத்தில் ஒரு அடையாளமும் இலவசமாய் கிடைக்கும். 

யார் யாரெல்லாம் பீர் குடிக்கின்றார்களோ (வெயிலுக்கு குடிக்கிறேன் பேர்வழி என்று அலப்பறை செய்யும் லூசுகள்) அவர்களுக்கும் இதே நிலைதான். ஆல்கஹாலை எவன் ஒருவன் விரும்புவானோ அவனை அது பேயாய் பிடித்துக் கொள்ளும். எனது நண்பனொருவரின் அண்ணன் குடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆல்கஹாலின் பிடியில் எப்படி விழுந்தார் என்பதைத்தான் மேலே எழுதி இருக்கிறேன். ஆல்கஹால் குடிப்பது என்பது ஃபேஷன் அல்ல அது கொஞ்சம் கொஞ்சமாய் உடலுக்குள் ஆக்ரமித்துக் கொல்லும் விஷம். குடிப்பவர்கள் உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

டாஸ்மாக் என்பது சவமாய் மாற மனிதர்களை ஊக்குவிக்கும் ஒரு சவக்கடை என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 8, 2012

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை



கோவை மசக்காளிபாளையத்திலிருக்கும் ஒரு பானி பூரி ஸ்டாலில் நானும், காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரும், இயக்குனர் ஒருவரும் ஒரு நாள் பானி பூரி சாப்பிட்டோம். 

ஒரு மணி நேரத்தில் அதிகாரியிடமிருந்து போன் வந்தது. “தங்கம் உங்களுக்கு வயிற்றில் ஏதாவது வலி தெரிகிறதா?” என்றார்.

அவரிடமிருந்து அழைப்பு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னால் தான் வயிற்றைக் கலக்கி ”ஓட்டு” போட்டு விட்டு வந்தேன். 

“அட ஆமாம் சார்! இப்பத்தான் ஓட்டு போட்டேன்” என்றேன்.

”என்னங்க தங்கம், அதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே, பின்னே என்ன ஓட்டு அது இதுன்னு ரகளை செய்றீங்க” என்றார்.

“அட ஓட்டுன்னா, இரண்டுக்கு போவுறதுங்க” என்றேன்.

ஒரு நிமிடம் ஆயிற்று சிரித்து முடிக்க. பானி பூரியில் பிரச்சினை இருக்கிறது என்று முடிவு கட்டி மசக்காளிபாளையம் ரெகுலர் விசிட்டை ரேஸ்கோர்ஸுக்கு மாற்றினோம். எதைக் கட்டினாலும் கட்டலாம், வாயைக் கட்ட முடியாது அல்லவா?

இன்று குமுதம் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அதிர்ந்தேன். பானி தண்ணீரை புளிக்க வைக்க கலக்கப்படும் கெமிக்கல்ஸ் நோயை உண்டாக்கி விடும் என்று எழுதி இருந்தார்கள்.

ஆகவே நண்பர்களே, இனி பானி பூரி ஸ்டாலைப் பார்த்தால் உங்களின் வயிற்றை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளுங்கள். நா உள்ளுக்குள் மடங்கி விடும்.

காசைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

பத்து மணி நேரம் பவர் கட் ஆகிறது. இரவுகளில் நான்கு மணி நேரம் கூசாமல் பவர் கட் செய்கின்றார்கள். எப்படித்தான் தூங்குவது என்றே புரியவில்லை. தமிழகம் குடிகார மயமாகி வருவது போதாது என்று மிச்சம் சொச்சம் இருப்போரையும் நோயாளியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, March 14, 2012

உண்மை வேண்டுமா மரணத்தைக் கொடு


உண்மை தன்னை நிலை நாட்டிக் கொள்ள மாபெரும் விலையைக் கொடுத்து வரும் பலப்பல நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். பதவிப் பித்துப் பிடித்த கொ(த)லைவர்களால் புதைக்கப்படும் உண்மைகள் வெளிவர பலர் தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள். இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

2010 வரையிலும் 12க்கும் மேற்பட்ட ஆர்டிஐ ஆர்வலர்கள் தகவல் கேட்டதற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு வெட்கக் கேடான விஷயத்தைப் படியுங்கள். சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் ரேஷன் கார்டு தொடர்பாக கேட்டிருந்த ஒரு கேள்விக்கு PIO எம் மணிமேகலை என்பவர் தகவல்  கொடுக்க ஆள் பற்றாக்குறை இருப்பதினாலே, நாள் ஒன்றுக்கு 1950 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி வந்தால் அவர்களுக்கு எப்போது தகவல் கிடைக்கிறதோ அப்போது கொடுப்பதாகவும், அதுவரைக்கும் ஆகும் செலவை திருமணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். என்ன ஒரு அயோக்கியத்தனமான பதில் இது என்று பாருங்கள். தகவல் கேட்டால் கொல்கின்றார்கள். இல்லையென்றால் இப்படி ஒரு அக்கிரமத்தைச் செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செய் நன்றி அற்ற மானிடர்கள் அரசு அலுவலர்களாய் இருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது பெயருக்குத்தான் இருக்கிறது என்கிற மாயையை தமிழக அரசு அலுவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதாவது பரவாயில்லை, தகவல் கேட்டதற்காக உயிரையே வாங்கிக் கொள்கின்றனர் சிலர். இப்படியும் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

நேற்று ஜெயா டிவியில் வெளியான இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய வீடியோவைப் பார்த்து, இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஆற்றாமையால் புழுங்கிக் கொண்டிருந்தேன். மனிதர்களில் இத்தனை அரக்கத்தனம் உடையவர்களும் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்ற போது எத்தனை மதங்களும், கடவுள்களும் வந்தாலும் மனிதர்கள் திருந்தவே போவதில்லை என்ற உண்மை சுட்டது. எதற்கும் ஒரு விலை உண்டு. சுவற்றில் வீசப்படும் பந்து திரும்பவும் எறிந்தவர் மீது விழும் என்பது உண்மையானால் இலங்கையில் ஒரு சிங்களவர் கூட உயிரோடு இருக்க அந்த உண்மை அனுமதிக்காது. அது நடக்கத்தான் போகின்றது. பாராட்டி, சீராட்டி, பொத்திப் பொத்தி வளர்த்த பெண்களை நிர்வாணப்படுத்தி, சேதப்படுத்தி, கற்பழித்து, கை கால்களை வெட்டி, உதைத்து, இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடூரங்களின் உச்சகட்டத்திற்குச் சென்ற இலங்கை சிங்கள ராணுவமும், அதை நடத்திக் காட்டிய கொலைஞர்களுக்கும் “உண்மை” என்ன விலை கொடுத்தும் தண்டனை பெற்றுக் கொடுக்கத்தான் போகின்றது. உலகின் சக்கரவர்த்தி என்று கொக்கரித்த ஹிட்லர் போன இடம் புல் முளைத்துப் போய் விட்டது. இவர்களெல்லாம் இயற்கைக்கு முன்னால் தூசியை விட கேவலமான பிறவிகள். 

இன்று ராஜ்ய சபாவைவிலும், நாடாளுமன்றத்திலும் கூக்குரலிட்டு சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும் எம்பிக்கள் கொத்துக் கொத்தாய் இலங்கையில் இலங்கை ராணுவம் மக்களைக் கொன்றுகொண்டிருக்கும்போது மொத்தமாய் பதவியைத் தூக்கி எறிந்து இந்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து எல்லாம் முடிந்த பிறகு இன்றைக்கு கூச்சல் இடுவது என்பது அரசியல் சுயநலம் என்று எவருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பதவி ஐந்து வருடம். ஆனால் உண்மையின் பதவியோ காலம் முடிவுக்கும் இருக்கும். அதுநேரம் பார்த்து அடிக்கும். அரசியல் என்றால் சுய நலத்திலும் கீழானது என்பதை நம் தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டே வருகின்றார்கள். உலகம் எத்தனையோ அரசியல்வாதிகளைக் கண்டு வருகிறது. அரசியல்வாதிகளின் வாழ்க்கையையும் பார்த்து வருகிறது. அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்து வந்த அரசியல்வாதிகளின் கதியையும் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம். அது சுய நலமே தன் நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வகை அரசியல்வாதிகளுக்கு எளிதானதாய் அமைந்து விடாது என்பது மட்டுமே உண்மை. 

கடவுள் நின்று கொல்வதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் அப்போதே தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கடவுள். அதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருகின்றோம். அவனவன் வினையின் பலனை விதைத்தவன் தான் அறுக்க வேண்டும். அறுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

இந்தியாவில் சர்க்கரை மாஃபியா கும்பலுக்கு துணை போகின்ற மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு, பல சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் இவருக்கு,  சர்க்கரை குறைவால் மயக்கம் ஏற்பட்டது என்ற செய்தியை இவ்விடத்தில் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது. சான்று இல்லாத எந்தச் செய்தியும் உண்மையாக இருக்க முடியாது என்று அல்லவா அறிவியல் சொல்கின்றது.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


Tuesday, March 13, 2012

இது பேச்சுலர்ஸ் மேட்டர்


தினத்தந்தியில் ஒரு பத்தியைப் படித்தேன். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் மாப்பிள்ளையின் அக்கா, அப்பா, அம்மா மூவரும் சர்க்கரை இல்லாமல் காஃபி கேட்டதற்காக தன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்றுச் சொல்லி இருக்கிறார் ஒரு தகப்பன். இவ்வளவுக்கும் என் பையனுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றுச் சொல்லியும் பெண் வீட்டார் மறுத்து விட்டாராம். எய்ட்ஸ் செக்கிங் ரிப்போர்ட் கேட்டுத்தான் திருமணம் செய்வோம் என்கிறார்கள் இக்காலப் பெண்கள். இனி ஃபுல் பாடி செக்கப் ரிப்போர்ட் அதுவும் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் செய்து தர வேண்டும் என்று கண்டிஷன் விரைவில் போடுவார்கள். 

ஆண்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தெருக்கள் தோறும் “டாஸ்மாக்” வைத்துக் கொண்டு, சினிமா தோறும் குடும்பத்தோடு குடிப்பதை நியாப்படுத்தும் காட்சிகளை வைத்துக் கொண்டும் சமுதாயத்தை நோயுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வரும் காலங்களில் ஆரோக்கியமானவர்களைப் பார்ப்பதே அரிதாகி விடும் போலத் தெரிகின்றது. எவருக்கும் தன் ஆரோக்கியத்தின் மீதான அக்கரை எள்ளளவும் இல்லை. அதே போல உணவுப் பொருட்களை விற்போரிடமும் வாடிக்கையாளர் நலன்களைப் பற்றிய அக்கரை சுத்தமாக இல்லை. அரசு சுகாதார அலுவலர்களுக்கு கடமை உணர்ச்சியும் துளிக்கூட இல்லை என்றே சொல்லலாம்.

ஆரோக்கியமற்றவர்களுக்கு இனி பெரும்பான்மை சமுதாயத்தில் பெண் கூட கொடுக்கமாட்டார்கள். பல பேர் “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்” போல சயிண்டிஸ்ட்டாக அலைய வேண்டியதுதான் பாக்கி.

திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது முக்கியமான ஒன்றாகும். 

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 9, 2012

மனச்சாட்சி எங்கே போனது? கிட்னி விற்கும் கிராமம்

தர்மம், நீதி, நியாயம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நிரூபிக்கும் அனேக சம்பவங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் வருகின்றன. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியைக் கொள்ளை அடிக்கிறது ஒரு கட்சி. பட்டினி தாங்காமல் வெறும் 30,000 ஆயிரத்திற்கு கிட்னியை விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு இந்தியக் கிராமம். 

பசி தாங்காமல், உழைக்கவும் வழி இல்லாமல் தன் கிட்னியை விற்று விட்டு, கிடைத்த பணம் தீர்ந்த உடன் நோயில் கிடந்து 60 வயதில் போக வேண்டியவர்கள் ஆபரேசன் செய்ததால் இரண்டு வருடங்களில் இறந்து போகும் அவலம் மேற்கு வங்காளத்தில் பிந்தோல் என்ற கிராமத்தில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

தனக்குப் புற்று நோய் என்றவுடன் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவி சோனியா இருக்கும் இந்தியாவில் தான் இந்த மேற்படி அவலமும் நடக்கிறது. மக்கள் தொண்டாற்ற வந்தவர்களுக்கு உச்சபட்ச கவனிப்பு, ஆனால் மக்களுக்கோ வாழவும் வழியில்லாமல், விற்க பொருள் இல்லாமல் தன் உடல் உறுப்பையே விற்க வேண்டிய நிலமை. இதைத்தான் ஜன நாயகம் என்றுச் சொல்லி வருகின்றார்கள்.

எத்தனை திட்டங்கள் இருக்கின்றன, எத்தனை சட்டங்கள் இருக்கின்றன, எத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? பட்டினியால் கிட்னியை விற்றுப் பின் அற்பாயுசில் செத்துப் போகின்றார்களே இந்தியர்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? ஜன நாயகம் அல்லவா காரணம்.

காசை வைத்துக் கொண்டு தின்று கொழுத்து தன் உடம்பைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டு, பசியால் வாடுபவனின் கிட்னியையையும் விலைக்கு வாங்கி உடம்பில் பொறுத்திக் கொண்டு, அவனை சாகவும் அடிக்கும் பணக்கார நாய்களையும், அதற்கு உறுதுணையாய் இருக்கும் மாஃபியா ஹாஸ்பிட்டல்களையும் யார் என்ன செய்ய முடியும்?

ஜன நாயக ஆட்சியில் ஏழைகள் சொல் அம்பலம் ஏறுமா? இல்லை ஏழைகள் வாழ இந்தியாவில் வழிதான் இருக்கின்றதா?

பிரதமர் மன்மோகன் சிங் வியாபாரிகளுக்கு என்று ஆட்சி நடத்துகிறார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, வியாபாரிகள் நலமாய் வாழ வேண்டுமென்று பருத்திப் பஞ்சை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க மீண்டும் அமைச்சரவை கூட்ட நடவடிக்கை எடுக்கிறார். விவசாயி வாயில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு, வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்க, அவர்களுக்கு வேண்டுவன செய்கிறார். இதைப் பற்றி அவர் எங்கே பேசப் போகின்றார். 

பக்கத்து நாட்டில் தமிழர்களைக் கொன்று குவித்த போது, தமிழகமே பொங்கிய போது, வாய் மூடி மவுனியாய் நின்று கொண்டிருந்த மனிதர் குல மாணிக்கம் அல்லவா நம் பாரதப் பிரதமர். 

இதோ அந்த கிட்னி வில்லேஜ் பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறது. படித்து விட்டு, நாமெல்லாம் மனிதர்கள் என்ற பெயரில் மிருகங்கள் வாழும்  உலகில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

People sell kidneys to beat starvation in West Bengal village
BINDOL (NORTH DIANJPUR): In these arid, impoverished parts, Bindol has another name - kidneyvillage. The wasted, skeletal men and women you would see slumped under the shade of trees are awaiting death with feeble breaths. This is the kidney sale capital of the state, perhaps of the country. Every second home here has someone who has sold his kidney to escape starvation. Many die within years. 

Now, the dying men have started forcing their wives to give up a kidney. 

Bindol's infamy has spread by word of mouth. Dusty tracks trail of the eastern highway to Bangladesh to take you to this village, barely 35km from the district headquarters of Raiganj. The greenery of Dinajpur changes into an arid landscape. Here and there in the dry, sandy waste there are patches of green maize plants. No trace of paddy or wheat. The villagers, mostly tribals, lie dozing off the effects of homemade liquor. 

But the name of Razzak perks them up. They lead you to his mansion in the Bajbindol area stands in sharp contrast to the hapless backdrop. Razzak is the 'dalal' (agent) you meet if you are desperate for a kidney. The price: Rs 3-4 lakh. Razzak has no problem finding donors. The villagers know they may be signing their death warrant if they accept Razzak's offer, but the payout - Rs 60,000 to Rs 1 lakh - is impossible to ignore. 

Lakshmiram Hansda sold his kidney - and his life - for Rs 80,000. On Wednesday, TOI saw him lying under a tree near his hut, gaunt, emaciated and hapless. He says he is 35 but looks 60. With no land of his own and a wife and daughter to feed, Lakshmiram had gone to Mumbai to work as labourer in 2000, like hundreds of local youths. But it brought him little money. When someone offered Rs 80,000 for a kidney, it seemed like a good deal. 

The money kept the family fed for only a few months. Soon after the surgery, Lakshmiram lost his strength to work. His starving wife and daughter deserted him. He now lives on an NGO's mercy, and is counting his days.

Not far from where Hansda lies, a group sits having drinks in a hut. Munshi Tudu, Jogen Hansda, Chhoto Murmu and Lapong Soren - all in thirties - are happy as only drunken men can be. They all survive on one kidney. Two years ago, Lapong had been to Kolkata where he had his kidney removed for Rs 1 lakh. What did he do with the money? "Bought a motorcycle, gave a part to my wife and... don't know what I did with the rest," he was not interested in recalling any more. They drink to forget that they don't have a future. 

The scourge has spread to nearby villages like Jalipara and Balia. Thirty-two-year-old Dulal Jali of Jalipara narrates his story, "It's next to impossible for a fisherman to make ends meet. So I accepted the offer of Kuddus (another agent) of Rs 1 lakh for a kidney. It was about four years ago. I got operated in Kolkata." Now with weakness a part of life, Dulal suffers along with his wife and daughter. "I cannot stay under the sun for long, I can hardly catch fish." 

There are those who complain that they were paid too little. Jatin Jali, who went with Razzak in 1998, still rues that he got only Rs 30,000. 

In the last couple of years, the tragedy has taken an ominous turn with the men forcing their wives to sell their kidneys. Astomi Malakar, who was married to Dilip Burman four years back when still in her teens, says: "My husband took me to Kolkata with another person two years ago. I already had a child by then. I was admitted to a hospital. I don't know what happened there but I have a surgery scar in my back." 

The Sripur Mahila O Khadi Unnayan Samity, an NGO, has been working with the victims but it's tough to create awareness when the villagers are willing to take the risk. "Every year these rural folk are forced to migrate to cities to feed their family. They often find themselves in the clutches of the beasts that run the racket." There have been cases when an unwilling victim was doped and operated upon and not paid a paisa. 

Bhattacharya said that they have repeatedly complained to police about agents like Razzak and Kuddus. "Razzak was arrested two years back but released in a few months. None dared to speak against him," said a local. 

The terrifying truth is that the hapless villagers see the Razzaks as messiahs. Thus, Anita Jali, a homemaker in Jalipara, finds nothing wrong in haggling for a better price. "We are three of us - me, my husband and father-in-law. They offered us Rs 6 lakh, but we demanded at least Rs 8 lakh," she said. 

Saturday, March 3, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - 2

அறம், பொருள், இன்பம் என்று வரிசைப்படுத்தி உலகப் பொதுமறையை எழுதினார் திருவள்ளுவர். முதலில் அறம், அதன் படி பொருள், பின்னர் காதலின்பம் என்று வாழ்வியலை வரிசைப்படுத்தினார். ஆனால் இன்றோ முதலில் காதல், பின்னர் கொடுஞ்செயல் செய்து பொருள் என்று வாழ்வியல் முறை தவறிக் கிடக்கிறது.

”ஒரு பெண்ணிடத்தில் நீக்க முடியாத காதல் கொண்டு, அவள் காதலைத் தான் பெறாது போய் விட்ட போது, அவன் பனையின் கருக்குமட்டைகளை எடுத்து அவற்றைக் கொண்டு குதிரை உருவம் ஒன்று செய்வான். அதில் மணிகளும் மயிலிறகுகளும் வைத்து ஒப்பனை செய்து, கடிவாளம் போல ஒரு கயிற்றை அதன் மீது மாட்டிக் கொண்டு, தெருவழியாக அதன் மீது ஊர்வான். ஊரும் போது தன் காதலி மீது காதற்பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்வான்.

இக்காட்சி கண்டு சில சமயம் காதலியே இரங்கி மனமாறுவதுண்டு. அல்லது அவள் உறவினர் அவனை மணம் செய்யும்படி அவளைத் தூண்டுவர். ஆனால் காதலை இந்த அளவு வெளிப்படுத்தியும் காதலி அவனிடம் கனிவு காட்டவில்லையானால், அவன் செங்குத்தான குன்றிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வான்.”

( நன்றி : ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு வி.கனகசபை (1962) )

பாரதி சொன்னான் “காதல் காதல் காதல், காதல் இல்லையென்றால் சாதல் சாதல் சாதல்”. இப்படியான கலாச்சாரத்தில் பிரேக் அப் என்கிற காதலைப் பற்றி சொல்கிறது. காதல் மணம் முறிந்து சென்றால் அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உயர்ந்த குன்றிலேறி தற்கொலை செய்து கொண்ட ஆணின் அறம் எங்கே, இப்படத்தில் அடுத்தவனைத் திருமணம் செய்து கொள்ள விழையும் பெண்ணின் அறம் எங்கே?

அடுத்து காதலைச் சொல்லும் வழி பற்றியது.

பார்வையிலே காதலை சொல்லுவது (காட்டுவது) பற்றி திருவள்ளுவர் காமத்துப்பாலில் விரிவாக எழுதி இருக்கிறார். மயிலாள் விழிகளை கொல்லும் கூற்றுவன் அம்புகளுக்கு இணையானது என்கிறார் அவர்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. - திருக்குறள் காமத்துப்பால் (1083)

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. - கலைஞர் உரை

முதற்பகுதியில் கன்னியொருத்தி காளையொறுவன் தன் மீது கொண்ட காதலை எப்படி நயத்தகு முறையில் உறுதிப் படுத்துகிறாள் என்பதைப் படித்தீர்கள். ஆனால் இன்றைய சினிமாவில் காதல் வயப்படுவது எப்படிக் காட்டப்படுகிறது?

ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தால் காதல் வந்து விடும் என்கிறார் ரஜினி. பெண்ணே தேடித் தேடித்தேடிப் போய் அலைந்து திரிய வேண்டுமென்கிறார்கள். போனால் போவுது உன்னைக் காதலிக்கிறேன் என்கிறார் அஜீத் குமார். பெரும்பான்மையான தமிழ் சினிமாக்காதல் காட்சிகளை ஒரு நிமிடம் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அபத்தங்கள் புரியும்.

கற்பு என்பது பெண்ணுறுப்பை சிதைப்பதால் சீரழிந்து விடுவது அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான அறத்தின் பெயர்தான் கற்பு. இயற்கை எப்படி ஒரு கட்டுக்குள் இயங்குகிறதோ மனிதனின் அக்கட்டுக்குள் இயங்கினால் அவன் வாழ்க்கை சீராக்கி அமைதியாய் வாழ்வான். அதில் சில கொடுமைகள் இருக்கின்றன. வாய் வழிச் சொல் எப்படி ஒரு மூலச் சொல்லை பாழ் படுத்தி விடுகிறதோ அது போல அந்தக் கொடுமைகள் தொடர்ந்து வந்து விடுகின்றன. அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல கேவலமான முறையில் காதல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் நடப்பதைத்தான் காட்டுகிறோம் என்பார்கள். அயோக்கியத்தனம் செய்வதற்கு தயரானவர்களுக்கு சமூகத்தின் மீதான பிடிப்பு இருப்பதில்லை. அமைதியான வாழ்க்கைத் தந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம் என்ற அக்கறையின்று இன்றைக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றார்கள்.

பெரும்பாலானோர் இப்படத்தை ஒரு நல்ல படம் என்கிறார்கள். கல்லூரிகள் காதற்களமாய் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றன. கோயிலாய் காட்ட வேண்டிய இடம் கேவலமானதாய், வாழ்க்கைச் சீரழிக்கும் இடமாய் காட்டப்படுகிறது. படிக்கின்ற வயதில் காதல் கொண்டால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை எல்லாம் சினிமா காட்டுவதில்லை. ஆரம்பத்தில் பதிவில் படித்த காதற் காட்சிகளையும் இப்படத்தினையும் ஒரு நிமிடம் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். உலகத்திற்கே உதாரணமாய் திகழ்ந்த நம் தமிழ்க் கலாச்சாரத்தை இப்படம் எந்தளவுக்கு தரம் தாழ்த்தி இருக்கிறது என்பது புரிய வரும். இதை ஒரு சிறந்த படம் என்று எப்படிக் கூற முடியும்?

மிட்டாய் கடையில் விற்கப்படும் பலப்பல பலப்பங்கள் போலத் தான் தற்போதையை திரைப்படங்கள் வெளியாகின்றன. அவைகளில் தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் உருவகப் படுத்துவது இல்லை. இப்பேர்ப்பட்ட கலாச்சார மேன்மையுடை சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லை.

யூதர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தங்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் காப்பாற்ற புலவர்களையும், கல்வியாளர்களையும் பெரும் துன்பத்திலும் கூட பிறர் அறியாவண்ணம் காப்பாற்றி தங்களின் வாழ்க்கையை, முறையை எழுத்தில் வடித்தும், ஆவணமாக்கியும் பாதுகாத்து வந்தார்களாம். அவர்கள் எங்கே, நாம் எங்கே?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 2, 2012

காதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1



( Art By Khalil Gibran )

ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னத கலாச்சாரமாய் மிளிர்ந்தது. இன்றைக்கு வெட்கம் என்றால் விலை என்ன என்று கேட்கும் பெண்களைப் பார்க்கிறோம். உடல் பிதுங்கி வெளித் தெரியும் உடைகள், சூழ் நிலைக்கு ஒவ்வாத உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றினால் நாங்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள் இன்றைய பெண்கள். தங்களின் பெண் குழந்தைகள் முலை தெரிய, குண்டிகள் பிதுங்கி வெளியில் தெரிய, பெண்ணுறுப்பு முட்டிக் கொண்டு தெரிய உடை அணிவதை பெற்றோர்கள் பெருமையாய் நினைக்கின்றார்கள். நேற்றையச் செய்திதாளில் வகுப்புத் தோழன் தன் தோழிக்கு லிக்கர் கொடுத்து மயக்கப்படுத்தி தானும் தன் நண்பர்களுமாய் சேர்ந்து காருக்குள் வைத்து உறவு கொண்டிருக்கின்றான் என்றும், அவனைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது என்றும் செய்தி வந்திருந்தது. ஏன் அப்பெண்ணுக்கு இந்த நிலை வந்தது? யோசிக்கணும்.

நாகரீக மோகத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழ்ச் சமூகம் பெண்கள் பலபேரோடு படுப்பதையும் இனி நாகரீகமாய் மாற்றி விடும். அல்லது மாதம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதும் நாகரீகம் என்றும் சொல்லக்கூடும். அது தான் சுதந்திரம் என்றும் பேசக்கூடும். கூடும் என்ன இப்போதே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுப்ரமண்யபுரம் என்ற படத்தில் கண்களால் பார்த்துக் கொண்டே நடைபயின்ற நடிகையைக் காட்டி இதைப் போன்றொதொரு பெண் எனக்கு திருமணம் செய்யக் கிடைப்பாளா என்று கேட்டவர்களும் உண்டு.

பண்டைய தமிழகத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் காதலைப் பற்றி பல நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில காட்சிகளை முதலில் காணலாம்.

இதோ ஒரு காதல் காட்சியை காதல் கொண்ட இளம் நங்கையாள் ஒருத்தி சொல்கிறாள். கேளுங்கள் !

“காயாம்பூ ஒத்த கருவிழி நங்காய், கேள் !”

“அழகிய மாலையணிந்து வில் ஏந்தியவனாய் ஏதோ வேட்டையைத் தொடர்ந்து வந்தவன் போல ஓர் இளைஞன் என் முன் வருவான். வந்து கனிவுடன் நீண்ட நேரம் என்னை நோக்குவான். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல் சென்று விடுவான். அவனைப் பற்றிய எண்ணம் என் உறக்கத்தையே கெடுத்தது. நான் உள்ளூரத் துயரடைந்தேன். அவன் தன் காதலைக் கண்ணினால் தெரிவித்தானே யன்றி, நாவால் உறைப்பதில்லை. நானும் பெண்ணாய் இருப்பதினால் நாணம் காரணமாக அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறமுடியவில்லை.”

“மறைவான என் காதலின் துன்பம் பொறுக்கமாட்டாமல் நான் செய்த ஒரு செயல் இப்போது நினைத்தால் கூட வெட்கப்படத் தக்கதாயிருக்கிறது. ஒரு நாள் நான் நம் பண்ணையருகில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். அவன் வழக்கம் போல என் முன்வந்து நின்றான். நான் அவனை அழைத்து, “ஐய என்னை ஊஞ்சலில் சிறிது ஆட்டி விடு” என்றேன். மகிழ்ச்சியுடன் “அப்படியே செய்கிறேன்” என்று கூறி அவன் ஊசலாட்டினான். அப்போது நான் ஊசலிலிருந்து நழுவி விழுபவள் போல நடித்து அவன் தோள்கள் மீது விழுந்தேன்.”

“அவன் என்னை உடனே தன் கைகளால் இறுகப் பிடித்தான். நானும் உணர்விழந்தவள் போல அவன் தோள் மீது கிடந்தேன். அவன் என்னை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். ஆனால் நான் கண் விழித்ததும் கனிவுடன் தடவிக் கொடுத்துப் போகும்படி விட்டு விட்டான். ஆனால் என்னை ஆர்வமாகத் தானும் காதலிப்பதை அவன் செயல் உறுதியாகக் காட்டி விட்டது”

அடுத்து இன்னும் ஒரு கொலைக்கார காதல் காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதை நாளை எழுதுகிறேன்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்