குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, August 31, 2011

பின்னூட்டம் தேவையா?


(மகள் நிவேதிதா தம்பி மகன் ஜெய குருதேவ் உடன்)

ஒருவரின் மனதுக்குள் தோன்றிய உணர்வானது, எழுத்தாய் கைகளின் வழியே பதிவாய் மாறுகிறது. பதிவர்களின் பதிவுகளை படிப்பது என்பது பலரின் நினைவுகளில் மிதப்பது போல. பலரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் பதிவுகள் இருக்கின்றன. அதில் நல்லது எது, கெட்டது எது என்பதை பகுத்தறிவதெல்லாம் படிக்கும் வாசகனின் மன நிலையைப் பொறுத்தது.

ஒவ்வொரு பதிவர்களும் காலத்திற்கேற்ப, அவ்வப்போது உருவாகும் மன நிலைக்கேற்ப, உணர்வுகளுக்கேற்றவாறு எழுதுவார்கள். சிலர் தவமாய் எழுதுவார்கள். சிலர் உண்மையை மட்டும் எழுதுவார்கள். சிலர் நகைச்சுவையாய் எழுதுவார்கள். சில கோபமாய் எழுதுவார்கள். சிலர் ஆற்றாமையால் எழுதுவார்கள். சில குஷி மூடில் எழுதுவார்கள். இது போன்ற எண்ணற்ற வகைகளில் பதிவுகள் வெளிவரும். ஒவ்வொரு பதிவுகளையும் படித்து விட முயல்வேன். 

வாசகனுக்கு படிப்பதில் இருக்கும் இன்பம் தான் முக்கியம் என்று கருதுகிறேன். பின்னூட்டம் போடுவதில் கவனம் செலுத்தினால், பல வகைப்பட்ட பிற பதிவர்களின் பதிவுகளை இருக்கக்கூடிய காலத்துக்குள் படிக்க இயலாமல் தவறவிட நேரிடும். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட ஆரம்பித்தால் காலம் ஓடிப் போய் விடும்.சில முக்கிய பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தே ஆக வேண்டும். அது வேறு விஷயம். 

ஒரு சகோதரர் நீங்களும் பிறர் தளத்தில் பின்னூட்டம் போடுங்கள் என்று எழுதி இருந்தார். நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கருத்துக்கள் சொல்வதில் நான் கவனம் செலுத்துவதில்லை. 

பின்னூட்டம் என்பது ஆரோக்கியமான வகையில் இருக்க வேண்டுமென்றும், அவசியமென்றால் மட்டுமே எழுத வேண்டுமென்றும் நினைப்பவன் நான். 

ஆகவே நான் படிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “ நீங்கள் என்ன எழுதினாலும் படிக்கும் வாசகனாய் கோவை எம் தங்கவேல் என்ற ஒருவர் இருப்பார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களின் உணர்வுகளை படித்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும்.

எனக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் நான் பதிவர்களிடமிருந்தே பெறுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

* * *

3 comments:

துளசி கோபால் said...

//ஆகவே நான் படிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “ நீங்கள் என்ன எழுதினாலும் படிக்கும் வாசகனாய் கோவை எம் தங்கவேல் என்ற ஒருவர் இருப்பார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களின் உணர்வுகளை படித்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும்.//

ரைட்டு!!!!!!!

Thangavel Manickam said...

துளசி உங்களின் சத்துள்ள தானியங்கள் பட்டியல் பதிவினைப் படித்த நினைவு. எனக்குப் பிடித்த பொழுது போக்கு வித விதமான சமையல் செய்வது. அப்படி ஒரு நாள் சமையல் குறிப்பொன்றினைத் தேடிக் கொண்டிருந்த போது அந்தப் பதிவொன்றினைப் படித்தேன். நிறைய எழுதுங்களேன்...

Anonymous said...

சகோதரர் வித்தியாசமான சிந்தனை யோசிக்க வைக்கிறது. என்னுள் வாங்கி சிந்திப்பேன் பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.