குரு வாழ்க ! குருவே துணை !!

Property Legal Consultation||Construction||Buy-Sale Property|| Phone : 9600577755 || Email :covaimthangavel@gmail.com

Click Banner to see Properties for Sale

Monday, August 22, 2011

பட்டா ஒரு முக்கிய ஆவணமா?


மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன அவர் எங்களிடம் வரும்வரை.

இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது. 

இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது. 

ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும். 

சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

மேற்கண்ட சொத்தின் டாக்குமென்டுகளை எங்களிடம் ஒப்படைத்த பிறகு, ”முடிந்த விலைக்கு விற்றுத்தாருங்கள்,பட்டா பிரச்சினை இருக்கிறது” என்று சோகத்துடன் சொன்னார் அவர். 

அதற்கடுத்த நாட்களில் மேற்படி விஷயத்தைச் சொல்லியதும் அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பிரச்சினையை எப்படி சரி செய்வது என்றுச் சொன்னோம். எங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு, கம்பீரமாய்ச் சென்றார் எங்களின் வாடிக்கையாளர்.

இது போன்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? தயங்க வேண்டாம். அழையுங்கள் எங்களை.

மொபைல் எண் : 096005 77755 


* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.