மாலை நேரம், கணிணியில் திரு.சாவியின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். போன் அழைத்தது. புது நெம்பர்.
வழமைபோல ‘வசியமை’ அழைப்பாக இருக்கும் போல இருக்குமென்று நினைத்தேன்.
”திண்டுக்கல்லில் இருந்து தண்டபாணி” என்றது மறுமுனை.
“சொல்லுங்க சார், என்ன வேணும்?” என்றேன்.
“சார் உங்க பிளாக்கைப் படித்தேன். நல்லா இருந்தது. எங்கள் ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசி பேசினார்கள். நீங்கள் வந்து பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.
இது என்ன புதுமாதிரியாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டு, “சார், ஏதோ எழுதுகிறேன். பேசவெல்லாம் சரியாக வராது. நீங்கள் எனது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடம் பேசி, அவரிடம் தேதி பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் அழையுங்கள், நிச்சயம் வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, நண்பர் திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்தேன்.
இப்படி ஒரு அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏதோ எனது அனுபவத்தை எழுதுகிறேன். அதற்காக இப்படி ஒரு அழைப்பா என வியக்கும்படி ஆனது. இனி தொடர்ந்து எழுதலாமா என யோசிக்க வைத்தது. எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
தேடலுடைய யாருக்கோ எது சேர வேண்டுமோ அது சென்று சேர்ந்தால் நல்லது தானே.
இனி எழுத முயல்கிறேன்.
அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை !
-
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்
1 comments:
வாழ்த்துக்கள்--> திண்டுக்கல் தண்டபாணி சாருக்கு நன்றி...
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.