குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 5, 2012

இந்தியா என்றால் என்ன?


நம் நாட்டில் விவசாயத்​துக்கும் விவசாயி​களுக்கும் மதிப்பு இல்லையே? (க.சங்கீத், மேல்அருங்குணம்.)

கழுகார் பதில்:விவசாயத்துக்கு மரியாதை தராத மனோபாவத்தைத்​தான் இங்கே உருவாக்கி விட்டார்களே!

இந்திய சமூகத்தின் கல்வி முறையை அறிமுகப்படுத்திய மெக்காலே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு உங்களது கேள்விக்கான பதிலாக அமையும்.

'நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்தபோது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகைய நாடு அது. செல்வ வளமும், உயர் நியாய உணர்வுகளும், அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயம் மற்றும் கலாசாரப் பாரம்பர்யத்தை உடைத்து எறியாத வரை அந்த நாட்டை நாம் ஒருபோதும் வெல்ல முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே தன்னுடையதை விட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் நாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளை, பாரம்பரியக் கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று பேசினார் மெக்காலே. இந்த மனோபாவம்கொண்ட நாம் எப்படி விவசாயத்தை மதிப்போம்? 

இந்த வார ஜூனியர் விகடனில் வெளியானது மேலே இருப்பது. 

இந்தியாவில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையும், ஏழைகளின் எண்ணிக்கையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எப்படி இருந்த இந்தியா, எப்படி சீரழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு காரணம் பேராசைப்பட்ட, தகுதியற்ற அரசியல் தலைவர்கள் தானே? என்ன செய்யப்போகின்றோம் நாம்? 

மெக்காலே கண்ட இந்தியாவை எப்போது நாம் பார்ப்போம் இனி? 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

நன்றி : ஜூனியர் விகடன்


2 comments:

சிவக்குமார் said...

நல்ல செய்தி இதன் மூலம் தெரிகிறது இந்தியா யாருக்காக் ஆளப்படுகிறதென

சேகர் said...

தற்போது உள்ள இந்தியா முழுவதுமாக அரசியல் வாதிகளால் சுரண்ட பட்ட நிலையில், இன்னும் நம்மை போன்ற மக்கள் விடியலுக்காக காத்துகொண்டிருபது முட்டாள் தனம்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.