குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 18, 2009

எந்தக் காது கேக்காது !

மாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.

அம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.

சென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு சாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ?”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.

2 comments:

இராகவன் நைஜிரியா said...

வாஸ்தவம் தங்கவேல் அவர்களே. சில சமயம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல இயலுவதில்லை. உங்கள் வீட்டில் பொறுமைசாலி என்று நினைக்கின்றேன். பொறுமையாக பதில் சொல்லி உள்ளார்கள்.

Thangavel Manickam said...

அம்முவின் அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ளும் அவள் நிச்சயம் பொறுமைசாலிதான் சார். நான் எங்காவது வெளியே போகப்போகிறேன் என்று தெரிந்து விட்டால் போதும், அம்மா அம்முவின் எதிரியாகி விடுவார். என் மேலே வந்து விழுந்து முத்தம் கொடுப்பது என்ன, ஐஸ் பேச்சு பேசுவது என்ன ? அடிக்கடி நானும் மனைவியும் அம்முவைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்போம். சுவாரசியம் தான் வாழ்க்கை.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.