குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 12, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 1

ஒவ்வொருவருக்கும் வீடு என்பதுதான் தாயின் கருவறைக்கு அடுத்த அறை. எத்தனையோ இன்னல்கள், துன்பங்களில் சிக்கி வீடு வருபவர்கள் நிம்மதியாய் தூங்கி துன்பங்களை மறந்து மறு நாள் காலை புத்துணர்ச்சியாய் எழுந்து கொள்ள, தாயின் மடிபோல் விளங்கும் இடம் தான் வீடு. வீட்டினை கோயில் என்று சொல்ல வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று வீடு. இந்த வீடு தான் மனிதனின் அனைத்துக்குமான இடம். ஒருவன் வாழ்வாங்கு வாழ இந்த வீடு தான் அடையாளம். இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் வீட்டினைப் பற்றி இனி நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கலாம். நாம் வசிக்கும் வீடு எப்படிப்பட்டது ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. 

முதலில் வீட்டு மனையின் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருந்தால் அது வீடு கட்ட தகுந்த நிலம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனையில் வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அடுத்து, அகலமான பக்கங்கள் சம அளவிலும், நீளப்பக்கங்கள் உள்ளடங்கி இருந்தாலும் அதுவும் சிறந்த மனைதான். அதுவுமன்று அகலமான பக்கங்கள் அகன்றிருந்தால் கூட பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மனைகளைத் தவிர வேறு வடிவம் கொண்ட மனைகளில் வீடு கட்டுவது அவ்வளவு நல்ல பலனைத் தராது என்றுச் சொல்கின்றார்கள்.

இன்றைக்கு மனையின் வடிவம் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்த்தோம். நாளை வீட்டு வாசல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரி, எங்களது ஃபார்சூன் பிரிக்ஸ் ( FORTUNE BRICKS) நிறுவனமும் மற்றொரு பில்டர் நிறுவனமும் இணைந்து கோவையில் இருக்கும் ஒண்டிப்புதூரில் 2.50 செண்ட்டில் மனையும், அதில் 1000 சதுர அடிக்கு இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், போர்டிகோ வைத்து 24 நான்கு தனித்தனி வீடுகளைக் கட்ட இருக்கிறோம். இதன் விலையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். ஒண்டிப்புதூர் திருச்சி சாலையில் நெசவாளர் காலனி அருகில் தான் மேற்படி வீடுகள் அமைய இருக்கின்றன. விரைவில் வீட்டின் வரைபடம் மற்றும் இதர விபரங்களை வலையேற்றுவோம். வீடு வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0422 4275976

- கோவை எம் தங்கவேல்
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்
www.fortunebricks.net

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.