நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.
அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.
“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.
வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.
“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.
“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.
”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.
அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.
அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.
கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது?
ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.
எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.
பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.
வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.
ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.
தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ
காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ
மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி
விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி
சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி
கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி
- குதம்பைச் சித்தர்