குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மோடி அரசு. Show all posts
Showing posts with label மோடி அரசு. Show all posts

Friday, February 11, 2022

மறைக்கப்படும் இந்தியாவின் வீழ்ச்சி பட்ஜெட் 2022 சொல்லும் சாட்சி

தொண்ணூற்று நான்கு சதவீத இந்தியர்களின் வாழ்க்கையை மீள முடியா சிக்கலுக்குள் தள்ளி விட்டு ஆளும் மோடி அரசு வாய் ஜாலங்களில் அரசை நடத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

கத்தரி முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும் என்பதைப் போல இப்போதெல்லாம் பிரதமர் மோடி பேசி வரும் பேச்சுக்கள் அவரின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டி வருகின்றன.

உதாரணத்துக்கு ஒன்று:

உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி ஆட்சியில் இல்லை என்றால் கோவிட் ஊசியை மறைத்து, மக்களிடம் கொள்ளை அடித்திருப்பார்கள் காங்கிரஸ்ஸார் என்கிறார். ஊசிக்கு காசு கொடுங்கன்னு ஆர்டர் போட்டதும், உச்சகாவிமன்றம் மன்னிக்கவும் உச்சநீதிமன்றம் இலவசமாய் ஊசி கொடுக்கணும் என்ற உத்தரவு போட்டதும், மெய் வாய் பொத்தி இலவசமாய் ஊசி வழங்கியதை வசதியாக மறந்து போனார். என்ன பேசுவது என்று தெரியாமல் பிரச்சாரத்தில் எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களிடம் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க முடியும்? இனி இயலாது என்று எல்லோருக்கும் தெரிந்து போனது கண்டு உச்சிக்குடுமி வகையறாக்கள் பல வித கலவர வேலைகளைச் செய்ய மக்களைத் தூண்டி விடுகின்றன. 

கோவிட்டால் மூடிக் கிடந்த பள்ளிகள் திறந்ததும் எங்கே சூத்திரர்கள் படித்து நமக்கு போட்டியாக வந்து விட்டால் என்ன செய்வது என்ற குரூர சிந்தனையில் மதக்கலவரங்களை உருவாக்கி கர் நாடகத்தில் மக்களின் மீதான வன்முறையைத் திணிக்கிறது பாஜகவின் ஆளும் அரசும், ஒன்றிய மோடி அரசும். 

சூத்திரன் படித்தே விடக்கூடாது என்று கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள் உச்சிக் குடுமி வகையறாக்கள். சூத்திர முட்டாள்கள் தோளில் காவி போட்டுக் கொண்டு அலைகின்றார்கள்.  எத்தனை அம்பேத்கார், காந்திகள் வந்தாலும் சூத்திர முட்டாள்கள் உச்சிக்குடுமி ஆட்களுக்கு அடிமை வேலை செய்தே கிடப்பார்கள் போலும். தமிழகத்தில் மானமில்லா அதிமுக அடிமைகள்.

தலைப்புக்கு வந்து விடுவோம். 

சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர் ரோசக்காரர்களாக இருந்தால், வெட்கம், மானம் சூடு சுரணை இருந்தால் பிஜேபிக்கு வக்காலத்தோ அல்லது ஓட்டோ போடமாட்டார்கள். ஏன்? கீழே இருக்கும் படத்தினைப் பாருங்கள். 

படத்தில் உள்ள கேள்வியை நிர்மலா சீத்தாராமனிடம் கேளுங்கள். கேட்ட உடனே பதில் வருமா? அதெப்படி வரும். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பலவித ஜால்சாப்புகளை அவிழ்த்து விடுவார். 

சம்பளம் வாங்குபவர்கள் வரி மட்டுமே கட்ட வேண்டும். வரி வாங்கும் மோடி அரசு ஒன்றையும் செய்யாது. செய்யவும் மாட்டார்கள். ஏழைகளை உருவாக்குவதை விட மோடி அரசுக்கு வேறு என்ன கொள்கை இருக்க முடியும்?

2022 பட்ஜெட் பற்றிப் பார்க்கலாம்.

2022ன் மொத்த பட்ஜெட் 39.44 லட்சம் கோடி

இதில் 135 லட்சம் கோடி கடன் - 31.03.2022 வரை

அடுத்த ஆண்டில் 152 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்குமாம்.

பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா? 16.61 லட்சம் கோடி. 

பற்றாக்குறை பட்ஜெட்டில் இராணுவத்துக்கு பட்ஜெட் தொகையில் 5.21 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் மோடி அரசு.

பட்ஜெட்டில் சுமார் 35 சதவீதம் கடன் வாங்கி சமாளிக்கிறார் நிர்மலா சீத்தாராமன். அதுமட்டுமல்ல வாங்கும் கடனுக்கு பட்ஜெட்டில் சுமார் 20 சதவீதம் வட்டி கட்ட செலவழிக்கின்றார்கள்.

ஆனால் பாருங்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய போன் நிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய சுமார் 3 லட்சம் கோடி வரியை 15 வருடங்களுக்குள் கட்டலாம் என்று அரசு அனுமதி அளிக்கிறது. கார்பொரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்திருக்கிறது. 

மாதச் சம்பளம் வாங்கி ஒழுங்காக வரி கட்டுபவர்களுக்கு தண்டனை தருகிறார்கள். ஆனால் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு காலத்தில் சலுகை கொடுக்கிறார்கள். அந்த வரிப்பாக்கிக்கு வரி போடவும் இல்லை.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 ஆயிரம் கோடி குறைத்திருக்கின்றார்கள். 

மேற்கண்ட செய்திகள் பட்ஜெட் 2022 நிர்மலா அவர்கள் தந்தது. பொய் ஒன்றும் இல்லை. 

ஆனால் பாருங்கள் நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்கிறார் பிரதமர் மோடி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வாய்சவாடல் விட்ட பிரதமர் மோடி உரத்துறைக்கு 40 கோடி குறைத்து விட்டார்.

வ.நாகப்பன் என்ற பொருளாதார நிபுணர் விகடனில் சம்பளதாரர்களுக்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்கிறார். இவரையெல்லாம் பொருளாதார நிபுணர் என்கிறார்கள். 2014ம் 2022ம் ஒன்றா என்ற கேள்விக்கு என்ன பதில் தருவாரோ? 

வழக்கம் போல மோடி அரசை வார்த்தைகளால் நக்கி விடுவார் போல.

கவின்கேர் சி.கே. ரங்கநாதன் இது நீண்டகால அடிப்படையிலான பட்ஜெட் என்று சொரிகிறார். 

வருடம் தோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றாரே பிரதமர் மோடி அதைப் போலவா? 

பசிக்கும் போது சோறு கொடுக்கணுமா இல்லை அடுத்த ஆண்டு பசியாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லணுமா சி.கே.ரங்கநாதன் அவர்களே? உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருப்பது வேடிக்கை.

சாதாரண மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது ஒன்று தான் பொருளாதார மீட்சிக்கு வழி. வாங்கும் சக்தி அதிகரித்தால் ஜி.டி.பி உயரும் என்பது தெரியும். ஆனாலும் செய்யமாட்டார்கள். 

ஏனென்றால் ஏழைகளாக்கி அவர்களைப் பஞ்சைபராரி ஆக்கி விட்டால் கல்வி கற்பதில் இருந்து விலக்கி விரட்டி விடலாம். அதிகாரப் போட்டிக்கு சூத்திரர்கள் வரமாட்டார்கள் அல்லவா? பசியோடு வைத்திருந்தால் மக்கள் பசிக்கு வேலை செய்வார்கள் அல்லவா? 

இதுதான் சாநக்கிய திட்டம். குரூரத்தின் கொள்கை. அதைத்தான் மோடி அரசு இந்தியர்களுக்குச் செய்து வருகிறது.

இந்த பட்ஜெட் என்ன சொல்கிறது என்பதின் ஒரு சோற்றுப் பருக்கைப் பதத்தினை இங்கே எழுதி விட்டேன். 

புரிந்தவர்கள் புத்திசாலிகள். புரியாதவர்கள் என்றைக்கும் உச்சிக்குடுமிகளின் அடிமை என்பதில் மாற்றுக் கருத்தியல் இல்லை என்பது உண்மை.

Thursday, November 10, 2016

இந்தியாவில் மீண்டும் வெடிக்கப்பட்ட அணுகுண்டு

பிஜேபியினர் ஆட்சியிலிருந்த போது தான் பொக்ரானில் அமெரிக்க கழுகின் பார்வைக்குச் சிக்காமல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நடத்தினார்கள். நாடு முழுவதும் தங்க நாற்கரச் சாலைகளை போட்டனர். சாலைகள் எல்லாம் பட்டொளி வீசின. அதே போல மீண்டும் இந்தியாவில் பெரும் அணுகுண்டினை வெடித்திருக்கிறது பிஜேபி அரசாங்கம். இதற்கு என ஒரு தைரியம் வேண்டும். மிகச் சரியான அறிவிப்புதான் இது. 

பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்கின்றனர். கருப்புப்பணம் ஒழியாது என்கிறார்கள். அதையெல்லாம் யோசிக்காமலா அரசாங்கத்தினர் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிடுவார்கள்? ஒருவர் 10 கோடி ரூபாய் வைத்திருந்தால் வெறும் இருபத்தைந்து இலட்சம் செலவில் 10 கோடியை வெள்ளையாக மாற்றி விடலாம் என்று சொல்கின்றார்கள். பத்தாயிரம் ரூபாய் கொண்டு செல்கின்றார்கள் என்றாலே கொலை செய்கிறார்கள். கையிலிருந்து வெளியில் செல்லும் பணம் திரும்பவும் வருமா? அதுவும் கருப்புப் பணம்? என்றால் எவராவது மீண்டும் கொடுப்பார்களா? சாத்தியமே இல்லாதது.

500 பேரைத் திரட்டுவது அவர்கள் கையில் பணத்தைக் கொடுப்பது பின்னர் வாங்குவது எல்லாம் நடக்கும் காரியமா? பெரிய பணக்காரர்கள் வெளி நாட்டுக்கு பணத்தைக் கொண்டு சென்று விட்டார்கள் என்றால் திரும்பவும் இந்தியாவிற்கு அப்பணம் வெள்ளையாகத்தானே கொண்டு வரப்படும்? அவர்களுக்கு வேறு வழியே இல்லை. 

அதுமட்டுமல்ல இனி வங்கியில் வாரம் இரு முறை 10000 ரூபாய் எடுக்கலாம். ஆக மாதம் 80,000 ரூபாய் எடுக்கலாம் என்று அறிவித்திருக்கின்றார்கள். இந்த அறிவிப்பின் காரணமாக அனைத்து பரிவர்த்தனைகளும் கார்டுகள் மூலம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பணமாக எந்த பரிவர்த்தனையும் நடக்கக்கூடிய சாத்தியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டால் பெரும்பான்மையான கணக்கில் காட்டப்படாத பணம் வெளியில் வந்து விடும் என்று அரசு நினைக்கிறது. சரியான நினைப்புதான் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் வொயிட் பிளாக் டிரான்சாக்சனுக்கு டிரஸ்டுகளைப் பயன்படுத்தலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு ஆப்பினை செருகி விட்டார்கள். என்ன காரணத்திற்காக டிரஸ்டிலிருந்து பணம் வெளியில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இனி டிரஸ்டுகள் ஒழுக்கமாக கணக்குகளைக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெரும்பான்மையான டிரஸ்ட் பரிவர்த்தனைகள் பொது வெளியில் வெளியான சம்பவங்களை நாம் கண்டிருக்கின்றோம்.

உடனடியாக கள்ள நோட்டுக்களை பிரிண்ட் செய்வார்கள் என்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவே முடியாது. நடக்கத்தான் செய்யும். உடனடியாக எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்பதெல்லாம் நடக்காத விஷயம். மெல்ல மெல்ல மக்களை கட்டாயப்படுத்திட வேண்டிய வேலையை அரசாங்கம் செய்கிறது. பாரட்டத்தான் வேண்டும். அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளுக்கும் தான் பெரும் பிரச்சினை. இனி அக்கவுண்டில் பணம் கட்டினால் 200000 லட்சத்துக்கும் மேல் 200 சதவீதம் பெனால்டி போடுகின்றார்கள். 

ஒன்று பெனால்டி கட்டி, வரவு வந்தது எப்படி என்று கணக்குக் காட்ட வேண்டும். இல்லையென்றால் பணத்தை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும். இதைத்தவிர வேறு எதுவும் வழியே இல்லை. தங்கமாக மாற்றி விடலாம் என்றாலும் இனி அதற்கும் வழி இல்லை. தங்கம் ஒரு நாள் பணமாக மாற வேண்டும். அப்போது பிரச்சினை வரும். 

பணம் இருக்கின்றவர் பையன் டாக்டராகின்றான். இனி அதற்கு வழி இல்லாமல் போகும் என்று நம்பலாம். கோடிகளில் கணக்குக் காட்டாமல் வைத்திருப்பவன் தானே காசைக் கொடுத்து எல்லாவற்றையும் விலைக்கு வாங்கினான். இனி என்ன செய்வார்கள்?

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு எத்தனையோ மக்கள் தங்கள் இன்னுயிரையே இழந்தார்கள். அதைப் போல இன்றைக்கு சாதாரண மக்கள்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்தச் சாதாரண மக்களின் பணம் தான் அது. யாரோ ஒருவரிடம் கொட்டிக் கிடக்கிறது. இனி அது வெளியில் வந்தே ஆக வேண்டிய கட்டாயம். வந்தே தீர வேண்டும். 

தர்மம் நின்று கொல்லும். கொன்றே விடும்.