நம்பூதிரி சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். ஆட்களின் நடமாட்டத்தால் வீடே பரபரப்பாய் இருந்தது. இன்றைக்கு கடைசி மகன் யூகேவிலிருந்து உயர்ந்த வக்கீல் பட்டம் பெற்ற பிறகு நேராக இங்கே தான் வருகிறான்.
பாகீரதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னென்னவோ பதார்த்தங்களால் அடுக்களையில் கலவை மணம் வீசுகிறது. எல்லாவற்றிலும் நெய் தூக்கல் போல. நெய்வாசமும், பதார்த்த வாசமும் வாசல் புறத்தையும் தாண்டி தெருவில் செல்பவர்களின் நரம்புகளைத் தூண்டி விடுகிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் பாகீரதியின் வீட்டினை திரும்பிப் பார்க்காமல் போவதில்லை.
வாசலில் ஆங்கிலேயத்துரை நம்பூதிரிக்குக் கொடுத்த கார் பளபளப்பாய் நின்று கொண்டிருக்கிறது.
“அவனுக்கென்ன, தொரையின் ஆசீர்வாதம், நம்பூதிரி சொன்ன வார்த்தைக்கு மறுபேச்சு இல்லையாம்” என்று ஊர் ஆட்கள் பேசிக் கொள்வார்கள்.
கார்கள் வாசலில் வந்து நின்றன. பாகீரதி வாசலுக்கு ஓடினாள். கடைசி மகன் பாரிஸ்டராகி வீட்டின் வாசலுக்கு வந்து நிற்கிறான் ஆனால் நம்பூதிரி வரவில்லை. பெற்ற மகனைப் பார்க்காமல் அப்படி என்ன நம்பூதிரிக்கு உடம்பில் நோவோ தெரியவில்லை.
உச்சி முகர்ந்து தன் மகனை வரவேற்று உள்ளே அழைத்து வந்தாள் பாகீரதி. பையன் வந்ததும் நம்பூதிரியின் அருகில் வந்து நின்று,”அப்பா” என்றழைத்தான்.
நம்பூதிரிக்கு திடுக்கென்று தூக்கிப் போட்டது. மலங்க மலங்க விழித்து விட்டு அவனைப் பார்த்தார். புன்னகைத்தார்.
“எப்போ வந்தாய்?”
”சத்தே மிந்திப்பா”
“உள்ளே போய் குளிச்சிட்டு சாப்பிடு” என்றுச் சொல்லி விட்டு திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். பாகீரதி அவரைச் சட்டை செய்யவே இல்லை. அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
* * *
திரை விலகியது.
ஐ நாடக மேடையில் தோன்றினார்.
கை தட்டுகள் கொட்டகையை உசுப்பி விட்டது. விசில் சத்தமோ விண்ணைப் பிளந்தது.
இந்தியர்களே! நாம் தேசப்பற்று மிக்கவர்கள். தேசமே உயர்ந்தது. எவரை விடவும் தேசத்தின் மீதான அன்பே மகத்துவமானது. முந்தைய ஆட்சியாளார்களால் தான் இந்தியா கல்வி கற்றது. கல்வி என்பது அறிவு. அறிவு என்பது கலகம். ஆகவே தான் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் கலகங்கள் நடந்து கொண்டே இருந்தன. இப்போதெல்லாம் ரவுடிகள் தானாகவே ஜெயிலுக்குள் சென்று விடுகிறார்கள். ஏனென்றால் நாங்களே ரவுடிகளாக மாறி விட்டோம். ஒரே ஊரில் இரண்டு ரவுடிகள் இருக்கலாமா? இருக்க கூடாது அல்லவா? ஆகவே தான் அவர்கள் ஜெயிலுக்குள் சென்று விடுகின்றார்கள்.
பெண்கள் வீட்டுக்குள் இருந்து விட்டால் கற்பழிப்புகள் நடக்காது அல்லவா? அதுவும் ஒரு சில பெண்கள் உடம்பை மூடி விடுவதால் கற்பழிப்புகள் குறைந்து விடுகின்றன. கற்பழிப்புகள் அதிகரித்தால் தானே பெண்களை வீட்டுக்குள்ளே பாதுகாப்பாய் இருங்கள் என்றுச் சொல்ல முடியும்?
பெண்களுக்கு கல்வி எதற்கு? ஏன் அவர்கள் வீட்டினை விட்டு வெளியில் வர வேண்டும்? வீட்டுக்குள்ளே இருந்தால் தான் அவர்கள் சிவப்பு நிறமாகி அழகிகளாக ஜொலிக்க முடியும். அதை விடுத்து வெளியில் வந்தால் தமிழகத்தில் சுட்டு எரிக்கும் சூரியனை பெண்கள் மீது இரக்கம் கொள்வதில்லை. உடலைக் கருமையாக்கி விடும்.
இதன் காரணமாகத்தான் சூரியக் கட்சித் தலைவர் பெண்களுக்கு எதிரானவர் என்று சொல்கிறேன்.
அது மட்டுமா, நம் கட்சியின் தலைவரொருவர் பூஜை அறையில் பெண் சாமி படத்தினைப் பார்த்து சுயமைதுனம் செய்து கொண்ட அவலத்தை நாமெல்லாம் வீடியோவில் பார்த்தோம் அல்லவா?
ஒரு ஆண் அதுவும் பூநூல் போட்ட ஒருவர் கைமைதுனம் அதுவும் படத்தினைப் பார்த்து செய்வது எவ்வளவு பெரிய தேச விரோதம்?
பெண்கள் எல்லோரும் தேச விரோதிகளாய் போய் விட்டார்கள் என்று வரலாறு சொல்லி விடக்கூடாது அல்லவா? பெண்களுக்குப் படிப்பு எதற்கு? வீட்டுக்குள் இருந்து கொண்டு புருஷனை எப்போதும் புணருவதுதான் நம் பாரம்பரியம் அல்லவா?
நாமெல்லாம் பாரம்பரியத்தை மீட்கப் போராட வேண்டும். பாரம்பரியத்தை சிதைத்த எதிர்கட்சிகளை எச்சரிக்க வேண்டும்.
இனி ஒரு பூநூல் உச்சிக்குடுமியன் கைமைதுனம் செய்தால் அது நம் தேசத்துக்கு தலைகுனிவு ஆகும். ஆகவே இந்தியர்கள் அனைவரும் சபதம் மேற்கொள்வோம். பெண்கள் அடுக்களைக்குள்ளே இருத்தல் தான் தேசப்பற்று ஆகும்.
சீதை வீட்டை விட்டு வெளியே வந்ததால் தானே இராமாயணம் வந்தது. இனிமேலும் இன்னொரு இராமாயணம் தேவையா? ஆகவே பெண்களுக்கு நாம் தேசப்பற்றினை பூஜை அறையில் ஊட்டி வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
ஜெய் ஹிந்த். ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்.
திரை மூடியது.
அரங்கமே கை தட்டினால் பெரும் புயலடிக்கும் சத்தம் போல ஒலியினால் நிரம்பியது.
தொடரும் விரைவில்....