குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 28, 2023

கீழ்தரமான பத்திரிக்கை தினமணி - ஆதாரம் இதோ

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோஷியல் மீடியாக்களில் திமுக பற்றிய போலிச் செய்திகள், மீம்ஸ்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என பச்சைப் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில ஈனத்தனமாக அரசியல் செய்யும், இன்ஸ்டண்ட் அரசியல்வியாதிகள் பொறுப்பிற்கு வந்தால், தனது புத்தி எதுவோ அதே போலத்தான் அவர்களும் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் உப்பைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியரும், அவர் குடும்பத்தாரும், கொஞ்சம் கூட வெட்கமின்றி செய்திகளை போலியாகப் புகுத்தி தற்போது வெளியிட்டு வருவதைப் பாருங்கள். ஏற்கனவே தினமணியின் கதி அதோகதியாகக் கிடக்கிறது.

சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, அங்கு தினமலர் பத்திரிக்கை படிக்க கிடைக்கிறது. இதர பத்திரிக்கைகளைக் காணவில்லை. ஒவ்வொரு ஏர்போர்ட்டுக்கும் தமிழ் பத்திரிக்கைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதோ தினமணி செய்தியின் அயோக்கியத்தனத்தைப் பாரீர். 

மஞ்சள் வண்ணம் இட்டிருக்கும் பகுதியினையும், தலைப்பையும் படித்துப் பாருங்கள். தலைப்புக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனப்பாருங்கள். எவ்வளவு கீழ்தரமான செய்தியை வெளியிடுகிறது என்று பாருங்கள்.திமுக மீது இவ்வளவு வன்மம் கொண்டு, தமிழர்கள் ஆட்சியில் இருக்கவே கூடாது என்பதறகாக தினமலரும், தினமணியும் இப்படியான கேவலமான செய்திகளை வெளியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தினமலரையும், தினமணி பத்திரிக்கையும் படிப்பதைத் தவிருங்கள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.