குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, February 6, 2022

நரலீலைகள் - சொம்புத் தண்ணீர் (18+) (11)

ஊரே அடங்கி விட்டது. சில் வண்டுகளின் ரீங்காரமும் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் உல்லாசமாய் கிடக்கும் தவளைகளின் ‘கடங்குடான்’ சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. 

வாசலுக்கும் வீட்டுக்குள்ளுமாக அலைந்து கொண்டிருந்தாள் பாகீரதி மாமி. வேலைக்குப் போன ஆத்துக்காரர் இன்னும் வரவில்லையே என்ற பதட்டத்தில் குட்டி போட்ட பூனையாட்டம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள் மாமி.

நான்காவது குழந்தை. அச்சு அசல் ஆத்துக்கார நம்பூதிரியைப் போலவே உரித்துக் கொண்டு வந்திருந்தான். ஊரே கண்போட்டது. இன்னும் பாகீரதி ரதி போலவே இருந்தாள். அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. கட்டான உடலில் ஆங்காங்கே செதுக்கியது போல உடலமைப்பு அவளுக்கு. எல்லாம் குடுப்பினை என்று ஊரில் பிற உடம்பு வீங்கிப் போன மாமிக்கள் பேசிக் கொள்வார்கள்.

நம்பூதிரிக்கு சந்தோசம் பொங்கும். பாகீரதி அவருக்கு ஏற்ற ஆத்துக்காரி என்பதில் அவருக்குப் பெருமையும் கூட. 

பின்னே, எள் என்றால் எண்ணையாக அல்லவா நிற்கிறாள். அவளின் நெளிவு என்ன? சுழிவு என்ன? பந்துக்களை (பந்துக்கள் என்றால் உறவினர்கள் என்று அர்த்தம் வரும், புரிகிறதோண்ணா உங்களுக்கு) அவள் கையாளும் விதமென்ன? அவற்றையெல்லாம் சொல்லி முடிக்கத்தான் முடியுமா? அத்தனை நறுவிசு. அத்தனை சமத்து. 

பாகீரதியைப் பற்றி நம்பூதிரியின் அம்மா சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார். நான் பார்த்த சம்பந்தமாக்கும் என்று முடிவில் ஒரு சிரிப்பால் சொல்லி முடிப்பாள். 

பாகீரதியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் நம்பூதிரி. பாகீரதியும் பார்க்க கொழுந்து வெற்றிலை மாதிரி இருப்பாள். காதோரம் வளைந்து கிடக்கும் முடிக்கற்றை புரள, பூனை முடியுடன் மஞ்சள் தேய்த்துக் குளித்து விட்டு வந்தாளென்றால் சாட்சாத் ரதி தோற்றுப் போவாள். மடிசாரில் ஒயிலாக நின்றுக் கொண்டு நம்பூதிரியைப் பார்த்தாளென்றால் உலைக் களமாகும் அவருக்கு.

(எதுவென்று கேட்டு விடாதீரும். சொல்லக் கூடாது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலையாக்கும்)

நம்பூதிரிக்கு நெய்யும் பாலுமாய் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போடுவாள். கையொழுக வழித்து வழித்து இலையை நக்கிக் கொண்டே பாகீரதியை பார்த்துச் சிரிப்பார். பாகீரதிக்கு வெட்கம் வந்து விடும். 

(ஏன் வெட்கம் வருகிறது என்று சொல்லக் கூடாது. அது சரியாவும் படாது. புரிகிறதோண்ணா உங்களுக்கு?)

பாகீரதியிடம் இருக்கும் ஒரே ஒரு சின்ன பிரச்சினை மாராப்பை சரி செய்யமாட்டாள். அதில் மட்டும் அவள் கொஞ்சம் அஜமஞ்சம். நம்பூதிரியும் அவ்வப்போதும் சரி, பள்ளியறையிலும் அவளிடம் சொல்வதுண்டு. 

அதற்குப் பாகீரதி, “போங்கண்ணா, நீங்க இங்கே இருக்கறச்சே எனக்கு எல்லாமும் மறந்து போய்டுதுண்ணா? நான் உங்களைப் பாக்கிறதா? இல்லே மாராப்பை இழுத்து விடுகிறதான்னு குழம்பிட்றேண்ணா” என்பாள்.

கேட்டவுடன் நம்பூதிரிக்கு உள்ளமெல்லாம் பூரித்துப் போய் விடும். இருந்தாலும் நம்பூதிரிக்கு உள்ளுக்குள்ளே ஒரு சின்ன நெருடல் அவ்வப்போது வரும்.

பாகீரதிக்கு அது கொஞ்சம் எடுப்பாயிருக்கும். எடுப்பாயிருக்குமென்றால் பெரிசு என்று நினைத்து விடாதீரும். கோவில் சிலைகளைப் பார்த்திருப்பீர்களே. 

வடிவாக கைக்கு கொஞ்சம் மீறியும் மீறாமலும் இருக்குமே அதைப் போல. ஈட்டி கூர்மையெல்லாம் தோத்துப்போகுங்கானும். அப்படி ஒரு கூர்மைங்கானும். இருக்கிக் காட்டிய மார்ப்புக் கச்சைக்குள் மாரப்பு விலகிய அந்த தருணத்தில் வெளிப்படும் அழகுக்கு ஈடு இணையை எங்கும் காணமுடியாது. 

நம்பூதிரிக்கு ஒரு சில நாட்களில் அவரைப் பார்க்க வரும் பந்துக்களும், அலுலலக ஆட்களும் அவ்வப்போது அந்தக் கோலத்தில் பாகீரதியைப் பார்ப்பதில் அவ்வளவு சிலாக்கியமாய் படவில்லை.

ஆனால் அது அவளின் சுபாவமாய் போய் விட்டதால் அவருக்கு அதில் நெருடல் இருந்தாலும் கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் பாருங்கள்.

கடவுள் இருக்கின்றானே அவன் செய்யும் லீலா வினோதங்களில் ஒரு சில சம்பவங்கள் மிகப் பெரும் காரியங்களுக்கு விதை போட்டு விடுவது போல அமைந்து விடும்.

வாசலில் யாரோ வருவது போல அரவம் கேட்க, பாகீரதி அரக்கப்பரக்க வெளியே வந்து பார்த்தாள். தெரு நாயொன்று வாசலோரம் சென்றதினை மாட விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாள்.

ஒதுங்கி இருந்து இன்றோடு பன்னெண்டு நாளாயிடுத்து. குளித்து முடித்து புஷ்பம் சூடி சூரிய பகவான் மறைவான நேரத்திலிருந்து காத்திருந்தாள். அவ்வப்போது நம்பூதிரி கையொழுக இலையை வழித்து வழித்து சாப்பிடுவது கண் முன்னே வந்து நின்று அவளுக்குள் மோகத்தை உண்டாக்கியது.

நாயைக் கண்டு விட்ட பின்னாலே சோகமுடன் வீட்டுக்குள் வந்தாள். உடல் சோர்வுற அங்கிருந்த நாழியிலே அமர்ந்தாள்.

பாகீரதியின் அசட்டையான மாரப்பு விலகிக் கிடக்கும் அந்த வேளையில் அவளைப் பார்க்கும் நம்பூதிரிக்கு மட்டும் அது வந்திருந்தால் பரவாயில்லை. 

மன்மதனும் பார்த்து விட்டான் அக்கோலத்தில் அவளை.

மன்மதன் பாயக்கூடாத இடத்தில் தன் காம அம்பினை வீசி விட்டான்.

பிரச்சினையில் சிக்கி விட்டனர் பாகீரதியும் அவள் ஆத்துக்காரர் நம்பூதிரியும்.

தொடரும்....

====== >>>>>> பாகீரதி <<<<<< =====

”மாயா, மாயா...!” என்று அலறினான் சந்து.

மாயனுக்கு சந்து அலறிய சத்தமெல்லாம் கேட்கவில்லை. 

மேலே இருப்பதைப் படித்து விட்டு தேன் குடித்த நரி போல அடுத்த பாகம் எப்போது வருமென்று துடிப்புடன் காத்திருந்தான்.

”தங்கவேலுக்கு என்னவாயிற்று? செக்ஸ் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே?” என்று புலம்ப ஆரம்பித்தான் சந்து.

பாகீரதிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதிலும், நம்பூதிரிக்கு எப்போதும் வழக்கம் போல வாழை இலையில் விருந்து படைத்து அதை நம்பூதிரி ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் படிக்க வேண்டுமென்று மாயன் கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தான்.

* * *

படுதா நீக்கி மேடையின் நடுவில் வந்து நின்றார் ஐ. 

ராமானுஜ பாவத்தில் பட்டாடை உடுத்து, நெற்றில் திருமண் இட்டு தெய்வக் கோலத்தில் வந்து நின்றவரைப் பார்த்து சின்னக்குட்டி வகையறா ரசிகர்கள் அடித்த விசிலில் நாடகக் கொட்டகையில் தூசி பறந்தது. அவர் கையை உயர்த்தினார். கொட்டகையே நிசப்தமாகியது.

சமந்தனும், நரயானும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். ஐயின் விரிஞ்ச மார்பில் பட்டாடை அவ்வப்போது விலக, மேடையின் நடுவில் உட்கார்ந்திருந்த இட்லிக்கு இடுப்பின் நடுவில் வியர்த்தது. சும்மாவா பின்னே பதினெட்டு கோடி இல்லை இல்லை பதினெட்டுப் பட்டியிலும் இல்லாத அழகனன்றோ ஐ. வியர்வை பொங்கிப் பிரவாகம் எடுக்குமே எடுக்காதா பின்னே?

அனைவரையும் பார்த்தார். ரசிகர்கள் அவர் பேசுவதைக் கேட்க சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் காதினை விரைப்பாய் வைத்துக் கொண்டிருந்தனர்.

”நாடு ஒரு புதிய சித்தாந்தத்தில் நுழைய இருக்கிறது. நாமெல்லாம் மறந்து போன அந்த நாட்களை  நம் நாடு மீண்டும் கொண்டு வரப்போகிறது. மிகப் பெரிய புரட்சியை, இதுவரை இல்லாத ஒரு திட்டத்தினை உங்களின் சேவகனான நான் கொண்டு வர உள்ளேன். இன்றிலிருந்து பெண்கள் ஆண்கள் சுதந்திரக்காற்றினைச் சுவாசிக்கலாம். சுதந்திரப் போரில் வாரிசுக்கட்சி வாங்கிக் கொடுத்தது சுதந்திரம் இல்லை. அது விடுதலை. அதனால் என்ன பிரயோஜனம். பெண்களும் ஆண்களும் இன்னும் விடுதலை பெறவில்லையே? அந்த வருத்தம் உங்களுக்கெல்லாம் 60 ஆண்டுகளாக உண்டு என்று எங்களுக்குத் தெரியும். அதை நான் நீக்கப் போகிறேன்.”

”நாளையிலிருந்து இந்த நாட்டில் கணவன் மனைவி என்ற உறவு தடை செய்யப்படுகிறது நம் நாட்டிலே”

விரிஞ்ச மார்பழக ஐ ஹீரோவின் இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் இட்லி குஷியுடன் இரண்டு கைகளிலும் இரத்தம் தெறிக்கும்படி கைகொட்டி கண்ணில் நீர் வழிய குதித்தது.

சமந்தனும்,  நரயாணும், குப்பைவாந்தியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

* * *
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. நாவல் கதாபாத்திரங்கள் கற்பனையானவை. அங்கணம் எவருக்கேனும் வருத்தமெற்பட்டால் நாவலில் வோட்டிங்க் மெசின் போல எடிட்டிங்க் செய்யப்படும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.