குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 31, 2018

பின் நவீனத்துவத்தின் சினனிம் – கொஞ்சம் செக்ஸ் கலந்தது

அந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? அல்லது இந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? என்ற தர்க்கம் எழுந்தது எனக்கும் எனது சக தோழன் ஒருவனுக்கும். அவன் டிவி விவாதங்களைப் போல பேசினான். நான் மறுதலித்தேன். இந்தக் கால வாழ்க்கை முறையின் சிக்கல்களுக்கு முதன்மையானது பின் நவீனத்துவத்தின் (நவீன யுகம்) சிந்தனை போக்கு மேலெழுந்தவாரியாக மனிதர்களிடம் பிரதிபலிப்பது என்ற காரணத்தை முன் வைத்தேன். அவனுக்குப் புரியவில்லை. அதைப் புரிய வைக்கும் விதமாக இந்தப் பதிவு.

சிறுகதை ஒன்று. சுவாரசியமாகத்தான் இருக்கும். கதையில் செக்ஸ் பற்றி வருகிறது. ராம்கோபால்வர்மாவின் கடவுள், செக்ஸ், உண்மை எனும் படத்தின் இணையதளம் பார்வையாளர்களால் திணறியதாம். அந்தளவுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மனிதர்களிடையே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அதிகமும், ஆர்வமும் அதிகம். தீரவே தீராத விளையாட்டு. முற்றிலும் மானுடத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விளையாட்டும் கூட.

அந்த நகரத்தில் மணமாகாத பெரும் பணக்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவள் எவரையும் நம்பமாட்டாள். அதனால் அவளை எவரும் ஏறெடுத்தும் பார்ப்பதும் இல்லை. அதுமட்டும் காரணமல்ல. அவள் அழகு குறைவானவள். அவளுக்கு எவரைப் பற்றியும் கவலையும் இல்லை. கோடீஸ்வரியானவளுக்கு பிறரைப் பற்றிய கவலை இருப்பதில் அர்த்தமும் இல்லை. திடீரென அவளுக்கு ஒரு மனப்பிரச்சினை எழுந்தது. இதுவரை என்னை ஏறெடுத்தும் பார்க்காத இந்த நகரை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

ஒரு வக்கீலை அழைத்தாள். அவரிடம், ”நான் இறந்த பிறகு என் இறுதிச் சடங்கின் போது இந்த நகரமே எழுந்து நிற்க வேண்டும். அதற்காக விழா போன்று என் இறுதி யாத்திரை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதை நிறைவேற்றிட என்னிடமிருக்கும் ஒரு கோடி ரூபாயில் 75 லட்சம் ரூபாயை அதற்கு ஒதுக்கி வைக்கிறேன் என்று உயில் எழுத வேண்டும்” என்றாள்.

”ஆஹா…! தன் உடலைப் புதைப்பதற்கு இது நாள் வரை செலவு செய்துள்ளதில் இது தான் மிக அதிகம். உங்கள் விருப்பம் போல எழுதி விடலாம் என்கிறார்” அந்த வக்கீல். தொடர்ந்து “மிச்ச பணத்தை என்ன செய்வதாக எழுத வேண்டும்?” என்று கேட்டார்.

அப்பெண், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன், இதுவரைக்கும் நான் எந்த ஆணுடனும் உறவு வைத்துக் கொள்ளவில்லை. நான் இறப்பதற்கு முன்பு அதை அனுபவிக்க விரும்புகிறேன். இளமையும், அழகும் உள்ள, என்னை போதுமான அளவுக்கு திருப்திப்படுத்த திறமை உள்ளவனைக் கண்டுபிடித்து  அனுபவிக்க விரும்புகிறேன். அவனுக்காக மீதமுள்ள 25 லட்சத்தையும் செலவழிக்கப் போகின்றேன்” என்றுச் சொன்னாள்.

அன்றிரவு பேச்சுவாக்கில் வக்கீல் இதனை தன் மனைவியிடம் தெரிவித்தார். மனைவியும் அவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ’அந்த 25 லட்சம் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே?’ என்றார் மனைவி. இருவரும் மீண்டும் கலந்துரையாடினார்கள். பின்னர் மனைவி காரை ஓட்டிக் கொண்டு போய் அந்த மணமாகாத பெண்ணின் வீட்டின் முன்பு நிறுத்தி தன் வக்கீல் கணவரை இறக்கி விட்டாள்.

வக்கீலும், ’இரண்டு மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்’ என்று சொல்லி வீட்டுக்குள் சென்று விட்டார்.

மிகச் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வக்கீலின் மனைவி காரின் ஒலிப்பானை ஒலிக்க விட்டாள். அந்த வீட்டிலிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. மீண்டும் நீள் சத்தத்தை ஒலித்தாள். சன்னலோரம் அந்தப் பெண் முகம் தோன்றியது. பின்னால் வக்கீல் தோன்றி இப்படிக் கத்திச் சொன்னார்.

“இந்தப் பெண், தான் இறந்த பிறகு முனிசிபல்காரர்களே புதைத்துக் கொள்ளட்டும் என்கிறாள். ஆகவே நீ நான்கு நாட்கள் கழித்து வா”

கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

பின் நவீனத்துவத்தின் கோட்பாடு எல்லாவற்றையும் தனித்தனியாக ஆராய்வது. நவீன கால தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு இயைந்த பின் நவீனத்துவக் கோட்பாடு மனித வாழ்க்கையின் மீது தற்கால தனது அடையாளங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளமாய் தமிழகத்தில் வெளியானது இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படம். தமிழர்களுக்கு திரைப்பட உதாரணம் தான் உடனடி காஃபி போல புரியும். ஆகவே இங்கு சினிமா வந்து விட்டது.

கற்பியல் கோட்பாடுகளைப் பொருளாதாரப் பின்னனியின் பாலும், தனி மனித பொருளாதார விடுதலையின் மீதும் கேள்வி கேட்கிறது பின் நவீனத்துவம். இயற்கை விதித்த வாழ்வியல் கோட்பாடுகளின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் உலகினை உருவாக்கி வருகிறது. முற்றிலுமான பாதுகாப்பற்ற தன்மை மிக்க பொருளாதாரத்தின் பின்னனியில் மனித ஒழுக்க நெறிகளை கேள்வி கேட்கிறது. அதன் வசீகரத்தன்மை சுய ஒழுங்கற்ற மானுடவியலாளர்களுக்கும், பொருளாதார பெரும்புள்ளிகளுக்கும் பெரும் லாபங்களை ஈட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. அந்த வசீகரத்தில் வீழ்ந்து விடுகிறது உணர்வுகளின் பால் கவர்ச்சியுற்ற மானுடர்களின் வாழ்க்கை. பொருளாதார வீழ்ச்சியின் போது நிறுவனங்களை மூடிவிடலாம். ஆனால் மனித உணர்வுகளை என்ன செய்வது என்பதற்கான தர்க்கங்களை அது வைத்திருக்கவில்லை என்பது நிதர்சனம்.

இன்றைய காலகட்டத்தின் நிலையை ஓஷோ ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ நூலில் சொல்லிய கதையின் வடிவம் தான் நீங்கள் மேலே வாசித்தது.

காசே தான் கடவுளடா (பின் நவீனத்துவத்தின் சினனிம்)

Tuesday, January 30, 2018

டிசைன் அப்படி

யாரோ ஒருவர் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் சினிமாவில் இருக்கிறார். பி.ஆர்.ஓவாக பணி. அதுமட்டும் வேலையல்ல. ஃபைனான்ஸ், வெளியீடு, கடன் வாங்கிக் கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏதோ ஒரு தேவைக்காக நண்பரை அணுகினால் முடிந்தது காரியம் என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்கள் இருக்கும்.

ஆனால் நண்பர் அவரை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு வசூலிக்க ஆரம்பித்து விடுவார். அது அவருக்குத் தெரியாது. தினமும் குறைந்தது 500 ரூபாய் அவரின் குறிக்கோள். அத்துடன் சாப்பாடு. சிக்கியிருப்பவரின் தகுதிக்கு ஏற்ப சில பல கதைகளை அவிழ்த்து விடுவார். சினிமா பிரபலங்களை கனெக்ட் செய்வார். போனில் பேச வைப்பார். பிரபலங்களிடம் பெரிய பைனான்சியர் என்றுச் சொல்லி வைப்பார். இது சிக்கி இருப்பவருக்குத் தெரியாது. இவ்வளவு பெரிய ஆளா என்று சிக்கி இருப்பவர் மலைத்தே போய் விடுவார். ஜொள்ளு விடுபவர் என்றுத் தெரிந்தால் பல்வேறு நடிகைகளை போனில் பேச வைத்து கிறுகிறுக்க வைத்து விடுவார். அவ்வளவு திறமைசாலி.

என்னிடம் பல முறை சிக்கிக் கொள்வார். ”அதெயெல்லாம் கேக்காதீங்கண்ணே” என்று நழுவி விடுவார். ”ஏதோ பிழைச்சுப் போறேன், விட்டுடுங்களேன்” என்பார். சென்னை சென்றால் பொழுது போக்க அவரை வரவழைத்து விடுவேன். செமையா ரீல்களை விடுவார். இயக்குனர்கள் எல்லாம் தோற்றுப் போய் விடுவார்கள். பிரியாணியும், கைச்செலவுக்கு 500 கொடுத்து விடுவதுண்டு.  சிக்கன் பிரியாணி என்றால் உயிர் அவருக்கு. இடையில் என்னைப் பார்க்க எவராவது வந்து விட்டால் அவர் பாடு திண்டாட்டம் தான். நம்ம நண்பர் தானே என்ற வகையில் என்னைப் பார்க்க வருபவரிடம் எப்படியெல்லாம் சொன்னால் ஆள் பயப்படுவாரோ அப்படிச் சொல்லி, சகஜமாக வந்தவரை அட்டென்சனில் நிற்க வைத்து விடுவார்.

“ஏம்பா, நீ இவ்ளோ பெரிய ஆளா? ஒன்னுமே சொல்ல மாட்டேன் என்கிறாயே?” என்று கோபித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு என்னை உயரத்தில் ஏற்றி விடுவார். வாங்கிக் கொடுக்கும் பிரியாணிக்கும், 500 ரூபாய்க்கும் மேலே, அதுக்கும் மேலே காரியத்தை கன கச்சிதமாகச் செய்து விடுவார். அந்த நண்பரை இவர் எங்காவது பார்த்தார் என்றால், என் பிள்ளைக்கு காய்ச்சல் என்று கதை சொல்லி 500 ரூபாயை ஆட்டயப் போட்டு விடுவார்.

அவரிடம் சிக்கினார்கள் என்றால் மெதுவாக வறுபடும் கிரில் சிக்கனாகி விடுவார்கள். இவரைப் பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிந்து விடும். பெருமூச்சோடு கடந்து போய் விடுவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவரின் ரீல்கள் பலம் வாய்ந்தவை.

இப்படியான ஆட்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். இன்றைக்கு என்ன கிடைக்கும் என நினைக்கும் ஆட்களே நம்மைச் சுற்றி அதிகமிருக்கின்றார்கள். அவர்களின் செயல்கள் இப்படித்தானிருக்கும்.

அப்படி இவரிடம் சிக்கிய ஒருவர் என்னிடம் பேசினார். மனசு வெறுத்துப் போய் பேசினார். ஒரு லட்சமாவது செலவழித்திருப்பார் என நினைத்தேன். புலம்பிக் கொண்டிருந்தார் அரை மணி நேரமாக. பொறுமையாகக் கேட்டு விட்டு அவரிடம் சொன்னேன் இப்படி.

”அது அவரின் டிசைன், அதாவது அவர் அப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறார். புரிகிறதா?” என்றேன். எதிர்முனையில் சத்தமே இல்லை.

ஐந்து லட்ச ரூபாய் காரின் டிசைனும், ஒரு கோடி ரூபாய் காரின் டிசைனும் வெவ்வேறு அல்லவா? டிசைனுக்குத் தகுந்தவாறு தான் கார்களின் செயல்பாடுகளும் இருக்கும். அதே தான் மனிதனுக்கும். உண்மையை மட்டும் பேசும் டிசைன், பொய் மட்டுமே பேசும் டிசைன், சுயநல டிசைன், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் டிசைன், ஏதும் அறியாது எல்லாம் அறிந்த டிசைன் இப்படி ஒவ்வொரு மனிதனும் டிசைன் செய்யப்பட்டிருப்பான். தொழில்களில் இருப்போரின் டிசைன்கள் வேறு வகையானவை. அரசியல் டிசைனும் வேறு வகையானது.

யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும்,அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் அலசுங்கள். ஒவ்வொருவரின் டிசைன் உங்களுக்குள் தெள்ளத் தெளிவாக விரியும். அவர்கள் பேசுவதை உற்றுக் கவனியுங்கள். அவர்களின் மொத்த டிசைனும் புரிந்து விடும். பின்னே என்ன? நமக்கேற்ற டிசைனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த டிசைன் அருகில் இருக்க வேண்டும், எந்த டிசைன் தூரத்தில் இருக்க வேண்டும், எந்த டிசைனுக்கு எப்படி பேசினால் புரியும், எந்த டிசைனை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என்பதெல்லாம் பட்டவர்த்தமாக தெரிந்து விடும். கோபம் வராது. டென்சனாகாது. வாழ்க்கை சுவாரசியமிக்கதாக மாறி விடும்.

முயற்சித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!



Thursday, January 18, 2018

அறத்தின் மீது அடி விழுகிறதா?

”மனிதன் எப்போதுமே மனிதன் தான். எத்தனை கடவுள்கள் வந்தாலும் மனிதனால் மாறவே முடியாது” என அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வகையில் பிறருக்குப் பிரச்சினை கொடுப்பவனாகவே இருக்கிறான். சூழ்நிலைக் கைதியான மனிதனிடம் மனிதம் அவ்வப்போது எட்டிப் பார்க்குமே ஒழிய எப்போதுமே தன் வயிற்றுப் பசிக்கும், இடுப்புப் பசிக்கும் தான் அவன் வேலை செய்வான்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியைக் கண்டவுடன் இந்தியாவின் இறையான்மாவின் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது புரிந்தது. யார் எதை நம்புகின்றார்களோ அந்த நம்பிக்கைக்கும் மேலே உலகினை இயக்கி வரும் “அறம்” (தர்மம்) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. 

இந்திய ஜனநாயகத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளும் மனிதர்கள் என்கிற வகையில் எல்லை மீறிய அதிகாரம், எப்பேர்பட்ட மனிதனையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைத்து விடும். நல்ல நீதிபதியாகவே இருந்தாலும் எல்லையற்ற அதிகாரம் தவறு செய்யத் தூண்டி விட்டு விடும். குடும்பம் இருந்தாலே அவர்களும் ஒரு சில சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நிதர்சனமானது.

இதற்கு யார் என்ன செய்ய முடியும்? என்பது தான் இந்திய மக்களின் மனதில் இப்போதைக்கு எழுந்திருக்கும் விடை தெரியா கேள்வி. அந்தக் கேள்விக்கு ஒரே பதிலாக என் முன்னே இருப்பது, இந்தியாவின் இறையான்மா மட்டுமே.

இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. எத்தனையோ ஆதிக்கஜாதிகளைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? 

ஒரு காலத்தில் உலகிற்கே மறை சொன்ன தமிழ்சாதி(சாதிதான்) மக்களின் இன்றைய நிலைமை - அய்யோ பாவமாக இருக்கிறது அல்லவா? அதே போலத்தான். தமிழ்சாதி மக்களைச் சுற்றிச் சுற்றி அடி விழுகிறது. தமிழ்சாதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. போனவன் வந்தவன் எல்லாம் அடிக்கிறான். அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் ஆடும் இடுப்பாட்டக்காரிகளின் தொடைகளில் அல்லவா தமிழ் சாதியின் உயிர் இருக்கிறது. ஆடும் அந்தச் சதைகளின் மீது அல்லவா தமிழ்சாதி தினமும் துயில் கொண்டு துயிலெழுகிறது. அந்தச் சதைகளைத் தடவி உசுப்பேத்தும் ஹீரோக்களை அல்லவா தலைவர்கள் என்று நம்புகிறது. தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தமிழ்சாதிக்கு நிகரேது இந்த உலகில்.

காலையில் உதித்தெழுந்து மாலையில் மறையும் படி சூரியனைச் சுற்றி இயங்கி வரும் பூமியை எது அந்தரத்தில் நிற்க வைத்ததோ அது என்னைப் பொறுத்த வரை “அறம்” 

உலகில் இந்தியா மட்டுமே மனிதன் வாழக்கூடிய தர்ம பூமியாக இருக்கிறது. அதர்மம் ஓங்குகிற போதெல்லாம் தன்னைத் தானே சிலிர்த்து எழுந்து சுத்தப்படுத்திக் கொள்ளும் இந்த பூமியைப் பாதுகாக்கும் அந்த அறம் நீதி என்கிற பெயராலே அழைக்கப்படுகிறது. அந்த நீதி அரசியலின் பேரால் தாக்கப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார்கள் அந்த நீதிபதிகள். அந்தத் தாக்குதலுக்குக் காரணமான யாரானாலும் சரி. அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள். அது கொடூரத்தை மிஞ்சிய கொடூரத்தின் தாக்குதலாகவே இருக்கும். ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கிய கதைகள் வரலாற்றிலே நிறைந்திருக்கிறது. ஆடட்டும். அடக்கப்படுவார்கள் என்று கடந்த காலம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

கீழே ஒரு சில நீதிபதிகளின் வரலாறு இருக்கிறது. படித்துப் பயனடையுங்கள்.



ஆண்டாள் பாவம். தன்னால் தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை உண்டாகும் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார். மொத்தத்தில் இங்கு யாரும் அவரவர் வேலையைப் பார்ப்பது கிடையாது என்பது மட்டும் புரிகிறது. கட உள்ளே என்பதை கடவுள் என மாற்றி வியாபாரம் செய்யும் உலகமல்லவா இது.

Thursday, January 4, 2018

பெண்களை நம்பினால் நம்புங்கள்

பாரதியின் ”பீரங்கி சிப்பாய்” படித்ததும் எனக்குள் எழுந்திருந்த தேசிய கவியின் பிம்பம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முறுக்கிய மீசைக்குள்ளும் முண்டாசுக்குள்ளும் ஈரும் பேனும் இருந்திருக்குமோ என சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. காலச்சுவடு பத்திரிக்கையில் பல பின் குறிப்புகளுடன் வெளியான அந்தக்கட்டுரை எனக்குத் தலைவலியை உண்டாக்கியது. சரியான எரிச்சல். இதோ கீழே இருக்கும் இணைப்பில் இருக்கும் அந்தக் கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/article19659327.ece

இதில் வாஸந்தி வேறு. ”தைரியம்னா என்னான்னா பயம் இல்லாம நடிக்கிறதுன்னு” ஏதோ ஒரு படத்தில் கேட்டேன். 

அம்மா இருக்கிறவரை வாயையும், பேனாவையும், சூ....யும் மூடிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அவர் இறந்ததும் வீறு கொண்டு அம்மா பற்றிய புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். அந்தப் புத்தகத்தின் தலைப்பு மறந்து விட்டது. அறிமுக உரையில் ”எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம்” என்ற வரியோடு முடிந்திருக்கிறது. என்ன ஒரு வன்மம்? அம்மாவை விமர்சிக்கின்றேன் பேர்வழி என தன் வன்மத்தை வழித்து எழுதியிருக்கிறார் போல. அம்மா உயிரோடா இருக்கிறார்கள்? அதையெல்லாம் மறுக்க? பாவம். அவரால் எனக்கொன்றும் ஆகவில்லை. ஆனால் மனசுன்னு ஒன்னு இருக்கே? வாஸந்தியின் மீது எரிச்சல் தான் மண்டியது. எழுத எவ்வளவோ இருக்கிறது. வாழ்க்கையில் தனக்கென வாழாமல் வாழ்ந்து மறைந்த பெண்மையைப் பற்றி எழுத எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.

இந்த எரிச்சலில் யூடியூப்பை தோண்டிக் கொண்டிருந்தேன். ரஜினி அலப்பறை வீடியோக்கள் வரிசை கட்டி நின்றன. ஒரு எழவும் தெரியாமல் என்னத்துக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆளாளுக்கு வச்சு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனை ஜெயித்தது மாதிரி ஜெயித்து விடலாம் என்று நினைத்திருப்பார் போல. குஷ்பூவோ அல்லது ஷ்ரேயாவோ நாளை தமிழகத்தின் துணை முதல்வராகி பின்னர் நயன்தாரா முதலமைச்சராகி விடுவார் என நம்புவோமாக. நம்புங்கள் நயன்தாரா முதலமைச்சர் கேண்டிடேட் என்றால் அடியேன் பிரச்சாரம் செய்வேன். என் கலாச்சாரம் அப்படி இருக்கிறது.

அரசியல் பெண்களின் உடலின் மீது கட்டமைக்கப்படுகிறது. ரஜினி தன் படங்களில் அழகிய ஹீரோயின்களை தடவி படம் பார்க்கும் தன் ரசிகர்களின் சா....... உசுப்பி விடுகிறார். ரஜினி மட்டும் நடித்தால் ஒரு தெரு (வேண்டாம் நாய் என்றால் நன்றி இருக்கும்) சினிமா பார்க்கப் போகாது. தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட்டம் சேர்க்க நடிகைகளை இறக்குவார் என நம்புவோம். நடிகைகளின் தொப்பூல்களைப் பார்த்து, அதே மூடில் போய் எச்சில் ஒழுக ஓட்டுப் போடுவோமாக. 

நாம் தடவினால் என்ன ரஜினி தடவினால் என்ன? எல்லாம் ஒன்று தானே என மனசு சமாதானம் சொல்லும். கிக்கு தடவலில் அல்லவா இருக்கிறது. சிவாஜியில் ஒரு பாடலில் ஷ்ரேயாவின் கவட்டியை விரித்துக் காண்பிப்பார் பாருங்கள் அந்த ஒரு காட்சிக்காக நூறு தடவை அந்தப் பாட்டைப் பார்த்திருப்பேன். எம்.ஜி.ஆர் ஹீரோயின்களைத் தடவி பிசைந்த போது பார்த்து ரசித்து ரசித்து ஓட்டாய் குத்துக்குத்துன்னு குத்திய வரலாறு நமக்கு இருக்கிறது அல்லவா? 

சரி! போகட்டும் சொந்தக் கதைகள். அதை எழுதினால் ரொம்பவும் செக்ஸியாகப் போய் விடும். சாருவாக இருந்தால் ஹமீது புக்குப் போடுவார். 1000 புக்குகள் விற்கும். அந்த லாபத்தில் நானும் 1000 ரூபாய் ஜெட்டி போடுவேன். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் ஏது? இப்படி ஏதாவது எழுதி சொரிந்து கொண்டால்தான் உண்டு. 

அடச்சே, எங்கேயோ போய் விட்டேன்.

எனக்குப் பிடித்த ஒரு பாடலை அவ்வப்போது கேட்பதுண்டு. எரிச்சலோ கோபமோ வந்தால் சினிமா பாடல்களுக்குள் மூழ்கி விடுவேன். அப்படி என் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல் இது. மோகனும் மஜா ராதாவும் நடித்திருப்பார்கள். மோகன் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மாதிரி நடித்திருப்பார். மஜா ராதா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி இருப்பார் இடுப்பை. 

இதோ அந்தப் பாடல் கீழே. முதலில் உள்ள பாடலைப் பார்த்து விட்டு கீழே இருக்கும் அடுத்தப் பாடலைப் பாருங்கள். 

மஜா ராதாவும் மோஹனும் நடித்த பாடல் இது.


உய்யலா ஜம்பாலா எனும் தெலுங்குப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியோடு மிக்சிங் ஆன பாடலில் நடித்தவர் அவிகா கவுர் மற்றும் ராஜ் தருன். இந்தப் பாடலையும் பார்த்து விடுங்கள். (இந்த அம்மணி இப்போது செம குண்டு கத்திரிக்காய் போல இருக்கிறார்)


இந்தப் படத்தில் பாலைக் குடித்தவர் நிலையினை நினைத்து எனக்குள் பச்சாதாபமே எழுந்து விட்டது. அந்தப் பையன் என்ன செய்தான்? பாவம் அல்லவா? 

ஆகவே பெண்களை நம்பினால் நம்புங்கள்! அது அவரவர் விருப்பம்.

Tuesday, January 2, 2018

ரஜினிக்கு காலம் தரப்போவது முட்களா? பூக்களா?

குழந்தைகள் இரண்டும் லீவில் இருக்கின்றார்கள். 5 மணிக்கு எழுந்து எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு நேரம் மிகச் சரியாக இருக்கும். பரபரப்பான அந்த நாட்களில் இருந்து இருவருக்கும் கொஞ்சம் விடுதலை. 

இந்த வருடம் கோவையில் குளிர் மிக அதிகம்.  வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தால்  உடல் சில்லிட்டுப் போகிறது. சுற்றிலும் தென்னை மரங்களும், வேப்பமரமும் இருந்தாலும் கதகதப்பு இல்லை. ரூடோஸ் எப்படி குளிரைத் தாங்குகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது ரூடோஸை ஆஸ்ரமத்தில் விட்டுச் சென்றோம். வீட்டுக்கு வந்தவுடன் ரூடோஸ் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்காமல் ஏதோ இழந்தது போல இருந்தது. டென்சனில் உடனே ஆஸ்ரமத்திற்குச் சென்று அழைத்து வந்து விட்டோம். ”ரித்திக்கிட்டே தான்பா பாசமா இருக்கு. அவன் வந்தா அவனுடன் ஈச ஆரம்பித்து விடுகிறாள் ரூடோஸ்” என்று நிவேதிதா குறைபட்டுக் கொள்வாள். ரூடோஸ் பெயரைப் போலவே முரட்டுத்தனமானவள். வாயைத் திறந்தால் பார்ப்பவருக்கு குலை நடுங்கி விடும். குரைக்கும் போது முடிகள் சிலிர்த்து சிங்கம் போல சீறுவாள். என் மீது வந்து மோதினால் நான் அம்பேல். மல்லாக்க விழுந்து விடுவேன். ஆகையால் அருகில் விடுவது இல்லை. காலையில் தலையில் கொஞ்சம் தடவிக் கொடுப்பதோடு சரி. தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடு என்று தலையை அசைத்துக் கொண்டிருப்பாள் ரூடோஸ். 

கடந்த வெள்ளியன்று அம்பாள் சினிபார்க்குக்கு “வேலைக்காரன்” படம் பார்க்க மனைவியுடன் இருவரும் சென்றிருந்தனர். எனக்கு சிவகார்த்திகேயனின் லூசுத்தனமான பேச்சு பிடிக்காது. ஆகவே வர இயலாது என்றுச் சொல்லி மறுத்து விட்டேன். வீட்டுக்குள் நுழையும் போதே, “ஏங்க, நல்ல டிவிடிக்கடை இருக்கான்னு தேடனும்ங்க” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார் மனையாள். பசங்க,”அப்பா, லைட்டைப் போடுங்கடா, வீட்டுக்கு போறோம்னு, தியேட்டரில் கத்துறாங்கப்பா, சரியான மொக்கைப்படம்பா, நல்லவேளைக்கு நீங்க வரவில்லை, அம்மா, நெட்டில் பாத்துக்கலாம்மா இனிமேல், காசு தான் வேஸ்டா போச்சு” என்றார்கள் இருவரும் கோரசாக. நான் ஏற்கனவே ப்ளூசட்டை விமர்சனம் பார்த்து விட்டேன் என்பது மூவருக்கும் தெரியாது. பசங்க இனி சினிமாப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நமக்கு அதுதானே வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி !

ப்ளூசட்டை என்றவுடன் மாமா டிவி புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று தாங்களே தங்களைக் கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொள்ளும் லூசுப்பயல்கள் செய்யும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸில் ப்ளூசட்டை போலவே காமெடி பண்ணினான் ஒருவன். எரிச்சலில் அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றியது. இவனுங்க காமெடியும், நக்கலும் சகிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தங்களைப் பெற்ற அம்மாவையும் பிறரோடு சேர்த்து வைத்துப் பேசி காமெடி பண்ணுவான்கள் கிறுக்கன்கள். 

அடுத்த வாரம் ஐபிஎஃப்பில் கம்ப்ளைண்டு செய்ய வேண்டும். அழிச்சாட்டியத்துக்கு ஆப்பு அடிக்கணும். நாடகத்துக்கு எல்லாம் சென்ஸார் இருப்பது போல டிவி நாடகங்களுக்கு சென்சார் வைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இது பற்றி விபரமாக எழுதிப் போட்டால் அவர் ஏதாவது ஆவண செய்வார் என்று நினைக்கிறேன். 

ஈரோடு மகேஸ் என்றொரு திமிர் பிடித்த ஒருவரை நான் இது நாள் வரை பார்க்கவில்லை. ஆனானப்பட்ட டிடி இப்போது மாமா டிவியில் இல்லை. இவனெல்லாம் சும்மா பச்சா? என்னா பேச்சு பேசுறான் தெரியுமா இவன்? அகங்காரமும், ஆணவமும் நிரம்பிய ஒருவன் இருக்கிறான் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். மகேஷ் பிறரை மதிக்கக் கற்றுக் கொள். இல்லையென்றால் காலம் உன்னை அடக்கி விடும்.

நேற்று குருநாதரிடம் ஆசீர்வாதம் வாங்க வெள்ளிங்கிரி சென்றிருந்தேன். கடந்த வாரம் பசங்க இருவரும் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். லீவு விட்டால் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம். யானையை மிக அருகில் பார்த்ததாகச் சொன்னார்கள். எனக்குத்தான் திக்கென்றது. பூண்டி கோவிலில் கூட்டம் அள்ளியது.  கோவில்கள் தோறும் மக்கள் பெருக்கம். 

ஜோதி ஸ்வாமியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ”சாமி அந்தக் காலத்தில் தினம் தோறும் தர்மம் போடுங்க என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் யாரையும் அப்படிப் பார்க்க முடியவில்லை” என்றேன்.

”வீடுகளில் இருந்து தர்மம் நீங்கிப் போய் விட்டது. தர்மம் இப்போது அதர்மமாக மாறிப் போனது. தர்மத்தை வாங்க இன்று யாருமில்லாது போயினர்” என்றார் ஸ்வாமி.

தர்மம் அதர்மமாக மாறியதன் காரணமாகவோ என்னவோ, இப்போதெல்லாம் மொத்தம் மொத்தமாக மனிதர்கள் இயற்கையால் கொல்லப்படுகின்றார்கள். ஏழை என்று பார்ப்பதும் இல்லை பணக்காரன் என்றும் பார்ப்பதும் இல்லை. கொத்துக் கொத்தாக அழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழர்கள் அதிகம் இயற்கையால் அழிக்கப்படுகின்றனர். இதெல்லாம் அதர்மம் அதிகரிக்கும் போது பாரத்தைக் குறைப்பதற்காக தர்மம் செய்யும் வேலை என்றார் ஸ்வாமி.

ரஜினி காலக்கெடு வைத்த போதே தெரிந்திருக்கும். அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிக்குத் தெரியாத ஒன்று உள்ளது. தன் படத்தையே ஜெயிக்க வைக்க முடியாத ரஜினி, தமிழக அரசியலில் எப்படி ஜெயிப்பார்? என்பது தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் பலரும் பல கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள். மாறிப்போன அரசியல் களத்தில் ரஜினிக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. பிஜேபியின் மிஸ்டுகால் போலத்தான் ரஜினியின் இணையதளமும், ஆப்பும் இருக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. கமல் பாவம். ரஜினி வழக்கம் போல முந்திக் கொண்டார். கமலுக்கு இப்போது டிவிட்டர் பக்கம் வேலை இருக்காது என நினைக்கிறேன்.





அறுபது வயதில் கிட்னி கெட்டுப்போய் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தன் ரசிகனின் கையைக் கூட குலுக்க முடியாத நிலையில் ரஜினிக்கு இந்த வேலை தேவையா என்று தோன்றுகிறது. கிட்னி பத்திரமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அதுதான் பிரச்சினையானது. ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியும், புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியையும் மறக்க முடியாது. அவரின் உண்மையான நடிப்பில் மிளிர்ந்த அந்த வேடங்களுக்கு சமமாக அரசியல் வேடம் எடுபடாது என்றே தோன்றுகிறது.

மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல்  இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.

அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.

இருப்பினும் காலத்தின் கையில் இருக்கும் அவரின் நூல்கண்டு என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழகத்தினை வழி நடத்தும் தர்மத்தின் பாதையில் முட்களும் இருக்கும். பூக்களும் இருக்கும். ரஜினிக்கு முட்களா இல்லை பூக்களா என்று காலம் பதில் சொல்லும்.