போகின்ற போக்கினைப் பார்த்தால் சைனா இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள் போல. பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மா நிலமான அருணாசலத்திற்குள் சென்ற உடன், அது திபெத்தின் பகுதி என்று சைனா அறிக்கை விடுகிறது. அமைதியின் மறு உருவமான பாரதப் பிரதமர் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்ற போது கூட இதே போல லொள்ளு செய்தார்கள். இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கிறதென்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள். இல்லையென்றால் இந்த நேரம் இந்தியாவை அப்படியே விழுங்கி விட்டிருப்பார்கள் போல. உடனே நமது வெளியுறவுத்துறை அமைச்சர் (ஆச்சரியத்திலும் ஆச்சரியம்) சைனாவின் எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். யாருக்காவது பயன்படும் என்பதால் இப்பதிவு மலர்கிறது.
சைனாவும் இந்தியாவும் இணைந்து வழங்கும் ஸ்காலர்ஷிப் படிப்புகள் பற்றிய விபரம் கீழே.
எவ்வளவு ஸ்காலர்ஷிப் ?
சைனா டியூசன் காஸ்ட், போர்டிங், லாட்ஜிங் மற்றும் மெடிக்கல் செலவுகளை இலவசமாய் ஏற்றுக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் 15,000, 10,000, 8,500 ரூபாய்கள் ரிசர்ச், முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்பவர்களுக்கு மாதம் தோறும் செலவுகளுக்கு வழங்குகிறது. இந்தியா 9,000 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவுகளை ஏற்கிறது. (ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா?)
என்னென்ன படிப்புகள் ?
Chinese Langugage and Litereature, Business Management(MBA), Plant Breeding and Geneticts, Environmental Science, Fine Arts (Painting and Sculputre), Agronomy, Sericulture and Botany. Application made in other fields will not be considered.
என்ன தகுதி ?
இளங்கலை, முதுகலை படித்தவர்கள் அப்ளை செய்யலாம். சைனீஸ் மொழி புரிந்து கொள்ள வேண்டியது முக்கிய விதி. வேலை செய்பவர்கள் கூட அப்ளை செய்யலாம்.
எப்படி அப்ளை செய்வது?
தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அப்ளை செய்யலாம்.
இணையதளம் : www.education.nic.in/scho_announcements/
ஆன்லைன் அப்ளிகேஷன்ஸ் - www.sakshat.ac.in
என்னென்ன டாக்குமென்ட்டுகள் தேவை?
அப்ளிகேஷன் பார்முடன் கல்விப் படிப்புச் சான்றிதழ்கள், பிறந்த நாள் சான்றிதழ், 500 வார்த்தைகளில் உங்களைப் பற்றிய குறிப்புகள்
வயது வரம்பு ?
40 வயதுக்குள் இருக்க வேண்டும்
கடைசி தேதி : மார்ச் 30க்குள்.
படிக்க விரும்புவோர் அப்ளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
2 comments:
நல்ல பயனுள்ள பதிவு.
நல்லா சொன்னீங்க ! சிறப்பான பதிவு ! நன்றி நண்பரே !
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.