யுவராணியுடன் கபடி விளையாடி, மறைந்து போன ஸ்ரீ வித்யா முதுகைத் தடவி தமிழ் திரைப்படக் காவியங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த விஜய், அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு தமிழக வெற்றிக் கழகம்.
வெளியான படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. மார்க்கெட்டிங்க் செலவு செய்து போலி ஹைப்பில் எத்தனை நாள் ஓட்ட முடியும்? இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை. சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தினைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம்.
மோடியின் பரிவாரங்கள் - அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மேலும் கவர்னர் பதவிப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நீதி கோலமான்கள் வரிசைகளின் பயமுறுத்தல்.
ஜோசப் விஜய் என்று நூலிபானின் கூவல்.
இந்த ஆபத்தெல்லாம் வந்து விட்டால் என்ன செய்வது?
தூத்துக்குடியில் கொஞ்சம் உதவினார் போலும். அங்கே எவனோ ஒரு குசும்புக்காரன் வருங்கால முதல்வரேன்னு கூவியிருப்பான் போல.
ஒரே ஒரு அறிக்கை. கட்சி துவங்கியாச்சு.
இப்படியெல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.
ஊடக விபச்சாரகர்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நாதாரி விஜய் முதலமைச்சராவாராம் என்று பேட்டி. யூ டியூப்புகளில் பொய்கள் மட்டுமில்லை பல்லுப் படாமல் பேசுவதும் பெருகி வழிகின்றன.
ஆனானப் பட்ட சிவாஜி அரசியல் கதையே கந்தலானது.
காமராஜருக்கே இலையே இல்லை என்று அனுப்பி விட்டது தமிழ் நாடு.
கமல்ஹாசனுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.
சிரஞ்சீவி காரு தொழிலைப் பார்க்கப் போயிட்டாரு.
இப்போது இவரு கடை விரிக்க வந்துட்டாரு.
பெயரைப் பாரு... !
தமிழக வெற்றிக் கழகம் - அது எங்கே இருக்குன்னுவாது தெரியுமா இவருக்கு?
மக்களுக்கு நல்லது பண்ணுன்னு இவரை எல்லாம் எவன் அழைச்சான்னு தெரியலை.
அவல அரசியல் நகைச்சுவை.