குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, September 27, 2024

மணிப்பூரில் நடப்பது என்ன? குழப்பும் செய்திகள்

இந்தியா தீவிரவாதத்தால் பல இழப்புகளைச் சந்தித்து இருக்கிறது. காஷ்மீரில் நடத்தப்பட்ட படுகொலைகள், புல்வாமா தீவிரவாத தாக்குதல், தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல்கள், மும்மையில் வெடிகுண்டு தாக்குதல்கள், பெஸ்ட் பேக்கரி வெடிகுண்டு தாக்குதல்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

பாஜக அரசு பதவியேற்ற உடன் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது வரலாறு. இரண்டொரு நாட்களாக தினசரிகளில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

அந்தச் செய்திகளை இதோ கீழே இருக்கும் படங்களில் படித்துக் கொள்ளுங்கள். இந்தியா - இலங்கை போல மாறி விடக்கூடாது என்ற பதட்டம் ஏற்படுகிறது.

இது செப்டெம்பர் 24ம் தேதியன்று தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான செய்தி. சுருக்கச் செய்தி கீழே இணைப்பும் கீழே உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 17 மாதங்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், வன்முறையை தடுக்க மணிப்பூர் காவல்துறையைத் தவிர ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய ஆயுதப் போலீஸ் படை கள் மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புப் படைகளின் இயக்கத்தை மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். இந்நிலையில், மணிப்பூர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு பொறுப்பை பைரன் சிங்கிடம் இருந்து பறித்த மோடி அரசு, முன்னாள் சிஆர்பிஎப் இயக்குனர் (டிஜி) குல்தீப் சிங் தலைமையில் 12 மூத்த அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. (நன்றி தீக்கதிர்)

மேலும் செய்திகளுக்கு கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.

https://theekkathir.in/News/states/manipur/manipur-bjp-chief-minister-byron-singh-was-made-a-dummy-by-the-modi-government

செப்டம்பர் 22ம் தேதி ஹிந்து தமிழ் திசை இணையதளத்தில் கீழே உள்ள செய்தி வெளியாகி உள்ளது.

இம்பால்: மியான்மரில் பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் நுழைந்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததை தொடர்ந்து மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டை நாடான மியான்மரில் 900 குகி தீவிரவாதிகள் டிரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது மற்றும் வனப் போர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியானது.

இத்தகவலை மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வனப் போர் பயிற்சி மற்றும் டிரோன் தாக்குதல் பயிற்சி பெற்று 900 குகி தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக வந்த எச்சரிக்கையை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது தவறு என்று நிரூபிக்கப்படாத வரை அது 100 சதவீதம் சரி என்றே நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இதுகுறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்தஉளவுத் தகவல் குறித்து இந்திய - மியான்மர் எல்லை மாவட்டங்களின் அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குகி தீவிரவாதிகள் 30 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பரவலாக நுழைந்திருப்பதாக நம்புகிறோம். மேலும்இவர்கள் மைதேயி சமூகத்தினரின் கிராமங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தன. ( நன்றி : இந்து தமிழ் திசை)

https://www.hindutamil.in/news/india/1315047-900-terrorists-tries-to-enter-from-myanmar-security-forces-alert-in-manipur.html

இனி கீழே இருக்கும் செய்திகளைப் படித்துப் பார்க்கவும்.


மேலே உள்ளது 27.09.2024 தீக்கதிர் செய்திதாளில் வெளியானது.


இந்தச் செய்தி 27.09.2024 தினகரன் செய்திதாளில் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் முதல்வரிடமிருந்த அதிகாரத்தைப் பறித்து உள்ளது ஒன்றிய அரசு. அடுத்து தொடர்ந்து வரக்கூடிய குழப்பமான செய்திகள். மணிப்பூரில் ஒன்றிய அரசு அமைதியை நிலை நாட்டி விடும் என நம்பலாம்.

ஏற்கனவே மணிப்பூரில் மெய்தெய் - குக்கி இனத்தவரிடம் கலவரத்தை உண்டாக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்டு இந்திய தாயின் மீது சேற்றினை இறைத்தார்கள். இன்னும் கலவரம் முடியவில்லை.

இரோம் ஷர்மா - உங்களுக்கு நினைவில் இருக்கலாம் என நினைக்கிறேன். மணிப்பூரில் ஆயுதப்படை சட்டத்திற்கு எதிராக நீண்ட காலம் வரலாற்றில் - உண்ணாவிரதம் இருந்த பெண்மணி.  

மணிப்பூர் இந்தியாவின் மாநிலம். நம் சகோதரர்கள். அவர்கள் நிம்மதியாக, அமைதியாக, மணிப்பூர் மா நிலத்தினை மேம்படுத்தி, நல் வாழ்க்கை வாழ வேண்டுமென வேண்டுகிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.