குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, January 31, 2023

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் குற்றம் - ரஜினியின் அறிக்கை

ரஜினிகாந்த் - பெயர் வைத்தது பாலச்சந்தர். சிகரெட் ஸ்டைலை படத்தில் பயன்படுத்தியது அவரே. ரஜினியின் ஒவ்வொரு ஸ்டலையும் யாரோ ஒரு இயக்குனர் உருவாக்கினார். அவருக்கான வசனத்தையும் யாரோ எழுதினர். எல்லாவற்றிலும் பலன் பெற்றது ஒரே ஒரு ஆள் - ரஜினிகாந்த். இறைவன் அவருக்கு கொடுத்திருக்கும் வரம் என்கிறார்கள். அது அப்படித்தான்  இருக்க வேண்டும். இறைவனின் செயலின் காரணத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

பார்ப்பான் ரங்கராஜ்பாண்டே (கோவிலில் பூசாரி வேலை செய்து வந்தவர்களுக்கு பாண்டே என்று பெயர் வைப்பார்களாம்) இது பற்றி ஆராய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பம் நான்கு தலைமுறையாக நாயனம் வாசித்த்தால் தான் முதலமைச்சராக இருக்கிறார் என தர்மத்தின் பாதையைக் கண்டுபிடித்த புத்திசாலி ரஜினியையும் ஆராய வேண்டும். அதே போல பிரதமர் மோடி எப்படி பிரதமர் ஆனார் என்று கண்டுபிடித்தால் பிபிசிக்கு பதில் அளிக்கலாம். ஆகவே பார்ப்பான் ரங்கராஜ் பான்டே பூசாரி அது பற்றியும் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினிக்காந்துக்காக ஒரு வக்கீல் பப்ளிக் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கீழே இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். 

ரஜினியின் ஃபேன் என்றுச் சொல்ல - இனி ரஜினிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்க. ஒரு டிவி நிகழ்ச்சியில் வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கமர்ஷியல் நிகழ்ச்சி அல்லவா? அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் ரசிகர் என்று கேள்வி கேட்கப்பட்டால் ரஜினிகாந்த் என்றுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது சட்டப்படி தவறு. அந்த நிகழ்ச்சி பணம் சம்பாதிக்கும் அல்லவா? கமர்ஷியல் நோக்கில் தன் பெயரைப் பயன்படுத்த ரஜினி காந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்கிறது அவர் வெளியிட்ட அறிக்கை.

ஆகவே நீங்கள் ரஜினி ரசிகர் என்று கூடச் சொல்லக்கூடாது. ரஜினி காந்த் அவர்கள் தன் ரசிகர்களுக்கு செய்யும் தொடர் நன்மைகளில் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

”என்னங்க ரஜினி இப்படியெல்லாம் செய்கிறார்? அவருக்கு உருவமும், வாழ்க்கையும் அளித்த தமிழர்கள் - சம்பாதிக்கவே கூடாதா? இப்படியும் ஒரு தற்குறி இருப்பாரா என்றெல்லாம் சொல்லி வருத்தப்பட்டார் ஒருவர். 

”கிராமப்புற மேடை நடிகர்கள், பாடகர்கள் இனி என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவருக்கு மாற்ற வேண்டியதுதான். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே குத்தகைக்கு எவரும் கொடுக்கவில்லை. ஆகவே இனி எவரையாவது சூப்பர் ஸ்டார் என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள். வக்கீல் கேஸ் போட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுச் சொல்லி வைத்தேன். சமாதானம் ஆகவில்லை அப்படியும் அவர்.

செய்நன்றி அற்றவர் என்று எவரும் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லி விடக்கூடாது. அவர் மிகவும் நல்லவர். வல்லவர், திறமைசாலி மற்றும் மாபெரும் தியாகி. 

ஆகவே அவரின் அடுத்தடுத்த படங்களையும் பிரமோட் செய்யுங்கள். ஆனால் ஒன்று ரஜினிகாந்த் என்று பெயரை எங்கும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள். 

டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், யூடிப்பிலும் பணம் சம்பாதிக்கிறீர்கள் அல்லவா? இனி ரஜினிகாந்த பெயரை மேற்கண்டவற்றில் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, இந்த அறிக்கையின் படி சட்டப்படி தவறு. ஆகவே வம்பு, வழக்கு என்று சிக்கிக் கொள்ள வேண்டாம்.ரஜினிகாந்த் எவ்ளோ பெரிய தியாகி என்பதைச் சொல்லும் அவர் கடிதம் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

தன் ரசிகர் மன்றத்தின் மூலமாக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார் அவர்? தமிழக மக்களுக்காக தமிழகமெங்கும் நடைபயணங்களை நடத்தி இருக்கிறாரா? குற்றம் எங்கு நடந்தாலும் ரசிகர் மன்றம் போராட்டம் செய்திருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது. 

தமிழ்நாடே அவர் எப்போது முதலமைச்சர் ஆவார் என்று காத்துக் கிடந்தது. ஆனாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவியே வேண்டாமென்று உதறி தள்ளி தானொரு ஆன்மீகவாதி என்று நிரூபித்து விட்டார். அவரின் ஆன்மீகம் உண்மையானது.

போலி ஆன்மீகம் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போலி ஆன்மீகம் என்றவுடன் ராசய்யா (அவரில்லை - இவர் வேற) நினைவுக்கு வந்து விடக்கூடாது உங்களுக்கு. அப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அது  தேச விரோதம். 

கீழே இருக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தானைத்தலைவர் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே மறந்தும் செய்து விடாத காரியம் என்னவென்றால் எங்கும் ரஜினிகாந்த் பெயரை உச்சரித்து விடக்கூடாது என்பதே. THANKS TO RAJINIKANTH TWITTER AND SRITHAR PILLAR TWITTER. 

தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை சென்று சேர வேண்டுமென்ற காரணத்தால் கடிதம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் விரும்பினால் நீக்கி விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.