குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 4, 2017

சசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா?

சட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 

சசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.

பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.

ஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.

வேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.

அரசியலும்  சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும். 

பார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று? 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.