இன்று காலையில் வழக்கம் போல வினாயகரை தரிசனம் செய்து விட்டு, வயதான அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரயில்வேயில் டிரைவராக இருந்தவர். 32 வருடம் சர்வீஸ். ஒரு முறை கூட ஆக்சிடெண்ட் செய்யாதவர். அதற்காக பத்தாயிரம் ரூபாய் அவார்டும், ஹெச் எம் டி வாட்ச்சும் பரிசு பெற்றவர்.
”சார், ரேஷன் கார்டு முகவரி மாற்றத்திற்காக கோவை ஆர்டிஓ ஆபிசில் அருகில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.கணிணியில் ஒரு சீட்டுக் கொடுத்தார் அங்கிருந்த பெண்மணி” என்றார்.
ஒரு வாரம் கழித்து முகவரி மாற்றம் செய்து வாங்கி வரலாம் என்று சென்றேன். ”நாளை வாருங்கள். தாசில்தார் வெளியே சென்று விட்டார் என்றுச் சொல்ல நானும் வந்து விட்டேன். இப்படியே மூன்று மாதமாய் என்னை படாதபாடு படுத்தினார் அப்பெண்மணி" என்றார்.
ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் அமைதியாக இருக்க வேண்டிய வயதுள்ள கிழவரை, ரேசன் கார்டில் முகவரி மாற்றத்திற்காக அவரை மூன்று மாதம் அழைக்கழித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. என்ன ஒரு மனசோ அவருக்கு தெரியவில்லை.
மூன்றாவது மாதம் ஒரு நாள் காலையில் சென்றவர் அந்தப் பெண்மணியுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அப்பெண்மணி ”உஷ் இது அலுவலகம்” என்று மிரட்டி இருக்கிறார்.
”இன்றைக்கு ரேஷன் கார்டு தரவில்லை என்றால் கலெக்டரிடம் போவேன்” என்றுச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் பிராமணர்.
அதன் பிறகு அவரின் கைப்பையில் இருந்து முகவரி மாற்றப்பட்ட ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார் அவர். "இது போல கட்டாக பல ரேஷன் கார்டுகளை அவர் கைப்பையில் வைத்திருந்தார்" என்றார் பெரியவர்.
"கடவுளாகப் பார்த்துக் கொடுத்த வேலைக்காவது அவர் நியாயமாக இருக்கவில்லை அந்தப் பெண்மணி" என்றார் அவர்.
வயதானவர்களிடம் சாபம் பெற்று அவர் என்ன சாதித்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.
கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் கைகளைக் கட்டிக் கொண்டு கோவில் கோவிலாய் ஏறி இறங்குகின்றார்கள். தான் செய்த பாபம் கழிக்க வெளியில் தெரியாமல் அனேக காரியங்களைச் செய்கிறார்கள்.
பெண்களுக்கு இரக்க உள்ளம் என்கிறார்கள். இந்தப் பெண்மணிக்கு என்ன மாதிரியான உள்ளமோ தெரியவில்லை.
ஏழை அர்ச்சகரின் சாபம் பலித்து விடக்கூடாது என நினைத்தேன்.
1 comments:
இவர் செய்திருக்க வேண்டியது அந்த தனது அட்டையை பெற்றவுடன் அந்த பெண்ணை பற்றி புகார் செய்திருக்க வேண்டியது......அது செய்யாமல் எப்படி இது மாறும்?
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.