குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, June 25, 2012

என்ன சொல்ல ஒன்றும் புரியவில்லை

பாஸ்போர்ட் ரினீவல் வந்து விட்டது. முதன் முதலில் பாஸ்போர்ட் எடுக்க ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து ஒரு வருடம் ஏமாந்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இனி என்ன பாடோ தெரியவில்லையே என்று திகிலடித்தது பாஸ்போர்ட் ரினீவல்.

அவினாசி சாலையில் இருக்கும் புதிய இடத்து பாஸ்போர்ட் ஆஃபீசுக்குச் சென்றால் அங்கு ஆன்லைனில் பதிவு செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வர வேண்டுமென்று சொன்னார்கள். ஆஹா வேலை எளிதாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட் தளத்திற்குள் நுழைந்தால் ஆரம்பித்தது வினை.

இரண்டு நிமிடம் கழித்து தான் திரை வரும். ஒரு வழியாக முதன் முதலாய் பதிவு செய்து, எல்லா விபரங்களையும் பதிவு செய்து, மீண்டும் அப்லோட் செய்தால் மாலை நான்கு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் பெறுங்கள் என்ற செய்தி கிடைக்க, மூன்று மணிக்கே இணையதளத்தை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தால் “அடேய் பயலே என்னிடமா? “ என்று எதுவுமே கிடைக்க வில்லை. இப்படியே நான்கு நாட்கள் சென்றன. எரிச்சலில் கஸ்டமர் கேருக்கு போன் செய்து விசாரித்தால் நேரிடையாகச் செல்லுங்கள் என்றார்கள்.

அப்ளை செய்த அடுத்த நாள் பாஸ்போர்ட் கையில் வந்து விட்டது. மத்திய அரசின் அலுவலகமான பாஸ்போர்ட் ஆஃபீஸ் அசத்தலாய் இருக்கிறது. அட்டகாசமான சர்வீஸ் வழங்குகிறார்கள். எல்லாமே கணிணி மயம்.

வாசலில் செக்யூரிட்டி ஒரு பெண். சுடிதாரில் மிரட்டிக் கொண்டிருந்தார். பார்க்க படு ரகளையாய் இருந்தது. அலுவலகத்தின் உள்ளே போன் சனியன் தான் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்காத சில மனிதர்களுடன் அங்கு சிலர் போராடினார்கள். அரை மணி நேரம் கூட செல் போனை அணைத்து வைக்க முடியாத அற்பங்களை அங்குதான் பார்த்தேன்.

பாஸ்போர்ட் ரினீவல் செய்ய சில டிப்ஸுகள்.

1) இருப்பிட அடையாளத்திற்கு இரண்டு ஆவணங்கள்
2) ஐடெண்டிக்கு இரண்டு ஆவணங்கள்
3) திருமணமானால் கண்டிப்பாக அஃபிடவிட்
4) கல்விச் சான்றிதழ்கள் 
5) முந்தைய பாஸ்போர்ட்

போட்டோ தேவையில்லை. அவர்களே விரல் ரேகை, போட்டோவெல்லாம் எடுத்து விடுகின்றார்கள்.

பாஸ்போர்ட் அலுவலகம் போல மா நில அரசு அலுவலகங்களும் இருந்து விட்டால் மக்கள் சிரமம் இன்றி தங்கள் வேலைகளை முடித்துக் கொள்வார்கள். அரசு செய்ய வேண்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

7 comments:

Venkat said...

I too struggled for almost 4-5 days to book the appointment at '4 pm'. I am not sure whether the agents block the slots! Anyway, inside the office, the work goes well! I received the passport in 3 days.

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கு பயன் தரும் அனுபவ தகவல்கள் சார் ! நன்றி !

கோவை நேரம் said...

நல்ல அனுபவம்...எந்த நாடு போக போறீங்க...

Thangavel Manickam said...

மேட்டர் முடிவதற்குள் சொன்னால் கிக் இருக்காது கோவை நேரம். நேரம் வரட்டும். பகிர்ந்து கொள்வேன்.


உங்கள் பிளாக்கை படித்து விட்டு ஹரிபவனம் ஹோட்டலுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஒன்றும் சரியில்லை சார். அதை அந்த கேபடனிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன். அவரின் முகம் பேயறைந்தது போலானது. உண்மை கசக்கத்தான் செய்யும்.

கோவை நேரம் said...

எந்த ஹரி பவன் சென்றீர்கள்..?காந்தி புரத்தில் இருக்கிற ஹரிபவன் சென்றால் நாட்டு கோழி குழம்பு சுவை நன்றாக இருக்கும்.சாப்பாடு மட்டுமே அனைத்து வகை குழம்புகளுடன் நன்றாக இருக்கும்.பீளமேட்டில் பிரியாணி நன்றாக இருக்காது..போட்டி, வஞ்சிரம் மட்டுமே நன்றாக இருக்கும்.

Thangavel Manickam said...

பீளமேடு ஹரிபவன். வஞ்சிரம் குழம்பு சாப்பிட்டேன். குழம்பு சரியில்லை. தேங்காய் அரைத்து விட்டிருந்தார்கள். வஞ்சிரம் சுவையற்ற மீன். மசாலாதான் சுவை கூட்டும். நல்ல சைவ ஹோட்டலாக எழுதுங்கள். உபயோகமாய் இருக்கும்

கோவை நேரம் said...

என்னங்க...இப்படி சொல்லிடீங்க...வஞ்சிரம் சுவையற்ற மீனா...>?வஞ்சிரம் மீன்ல குழம்பு வைக்க மாட்டாங்களே..ஜூனியர் குப்பண்ணா விலும், ராயப்பாஸ் ஹோட்டல் லிலும் வஞ்சிரம் பிரை நன்றாக இருக்கும்.என்னவோ போங்க..நீங்க போன நேரம் சரியில்லை..

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.