குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 26, 2011

ரிலையன்ஸின் திமிரும் கண்டுகொள்ளாத மத்திய தொலைத்தொடர்பு துறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தாரின் இணையத் தொடர்பை பயன்படுத்தி வரும் பலருக்கும் யூடியூப் மற்றும் சில ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை பயன்படுத்த முடியாது. காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளியான “டான் டூ” என்ற திரைப்படம் வெளியான பிறகு ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை தடை செய்தால் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியாது என்பதால் இச்செயலைச் செய்திருக்கின்றார்கள். 

வெப்சைட்டை தடை செய்ய இந்திய அரசு மட்டுமே உத்தரவிட முடியும் என்கிற போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் “வாடிக்கையாளருக்கான் துரோகம்” ஆகும். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவரை ஏதும் செய்யவில்லை. இந்திய அரசின் வேலையை ரிலையன்ஸ் செய்து கொண்டிருக்கிறது. பேசாமல் காங்கிரஸ் அரசுக்கு ரிலையன்ஸ் அரசு என்று பெயர் சூட்டி விடலாம். நேற்று, கஸ்டமர் கேரில் கேட்ட போது, கம்ப்ளைண்ட் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இது பற்றிய செய்திகளை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள்.


இது பற்றி சிலரின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்


இந்தியா கார்ப்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் கை விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ரிலையன்ஸின் போக்கு.

- அன்புடன் 
கோவை எம் தங்கவேல்

1 comments:

ராம்ஜி_யாஹூ said...

நீங்கள் சொல்வது/பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகள் எந்த அளவு Logicaly சரி என்று தெரிய வில்லை.

ஒருவர் வீட்டில் ரிலையன்ஸ் இணையம் பயன்படுத்தினாலும்,
அலுவலகத்திலோ, நண்பர்கள் வீடுகளிலோ, இணைய மையங்களிலோ சென்று Youtube கண்டு களிக்கலாமே.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.