குரு வாழ்க ! குருவே துணை !!

For Property Consultation (All Work) ::::: Phone : 9600577755 ::::: Email :covaimthangavel@gmail.com

Tuesday, March 13, 2012

இது பேச்சுலர்ஸ் மேட்டர்


தினத்தந்தியில் ஒரு பத்தியைப் படித்தேன். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் மாப்பிள்ளையின் அக்கா, அப்பா, அம்மா மூவரும் சர்க்கரை இல்லாமல் காஃபி கேட்டதற்காக தன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்றுச் சொல்லி இருக்கிறார் ஒரு தகப்பன். இவ்வளவுக்கும் என் பையனுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றுச் சொல்லியும் பெண் வீட்டார் மறுத்து விட்டாராம். எய்ட்ஸ் செக்கிங் ரிப்போர்ட் கேட்டுத்தான் திருமணம் செய்வோம் என்கிறார்கள் இக்காலப் பெண்கள். இனி ஃபுல் பாடி செக்கப் ரிப்போர்ட் அதுவும் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் செய்து தர வேண்டும் என்று கண்டிஷன் விரைவில் போடுவார்கள். 

ஆண்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தெருக்கள் தோறும் “டாஸ்மாக்” வைத்துக் கொண்டு, சினிமா தோறும் குடும்பத்தோடு குடிப்பதை நியாப்படுத்தும் காட்சிகளை வைத்துக் கொண்டும் சமுதாயத்தை நோயுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வரும் காலங்களில் ஆரோக்கியமானவர்களைப் பார்ப்பதே அரிதாகி விடும் போலத் தெரிகின்றது. எவருக்கும் தன் ஆரோக்கியத்தின் மீதான அக்கரை எள்ளளவும் இல்லை. அதே போல உணவுப் பொருட்களை விற்போரிடமும் வாடிக்கையாளர் நலன்களைப் பற்றிய அக்கரை சுத்தமாக இல்லை. அரசு சுகாதார அலுவலர்களுக்கு கடமை உணர்ச்சியும் துளிக்கூட இல்லை என்றே சொல்லலாம்.

ஆரோக்கியமற்றவர்களுக்கு இனி பெரும்பான்மை சமுதாயத்தில் பெண் கூட கொடுக்கமாட்டார்கள். பல பேர் “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்” போல சயிண்டிஸ்ட்டாக அலைய வேண்டியதுதான் பாக்கி.

திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது முக்கியமான ஒன்றாகும். 

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

8 comments:

துளசி கோபால் said...

உண்மை.

அக்கரை = அக்கறை

இது டீச்சர்'ஸ் மேட்டர்:-)

சாந்தி மாரியப்பன் said...

//திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது முக்கியமான ஒன்றாகும்.//

ரொம்பவே சரியா சொல்லியிருக்கீங்க. அதே சமயம் கல்யாணந்தான் ஆகிடுச்சே இனிமே யார் தடுக்க முடியும்ன்னு ஆரோக்கியத்துல விளையாடாம இருந்தா நல்லது.

இளங்கோ said...

:)

Covai M Thangavel said...

ஊக்கத்திற்கு நன்றி

Anonymous said...

உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோருக்கும் தேவையான மேட்டர் !

Anonymous said...

ஆரோக்கிய குறைபாட்டால் மணமாகதவர்களுக்கு அப்துல் கலாம் உதாரணம் ஏன்? உறுத்துகிறது நண்பரே.

Covai M Thangavel said...

அப்துல் கலாமா யார் அவர்? அவர் என்ன செய்தார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிப் பாருங்கள், விடை உங்களுக்கே தெரியும்.

Post a Comment