சமீபத்தில் நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தடையால் நீண்டகாலம் கிடப்பில் கிடப்பதாகவும், இதன் காரணமாக பெரிய நஷ்டத்தையும், துன்பத்தையும் அடைவதாகச் சொல்லி வருந்தினார்.
வக்கீல் என்ன சொல்கிறார்? என்று கேட்ட போது, தடையை நீக்க மனு போட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று புலம்பினார். வக்கீல் ஃபீஸ் வேறு. வருமானமே முடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது என்றுப் புரியவில்லை எனப் புலம்பினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். நீதிமன்றத் தடை ஆணைகளுக்கு கால வரம்பு இருப்பதாக படித்த நினைவு வந்தது. அனைவருக்கும் உபயோகப்படுமே என்பதால் இந்த வழக்கு பற்றிய விபரங்கள் கீழே. நீதிமன்றத் தடை உத்தரவு ஆறு மாத காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவனமாகப் படித்து, நீதிமன்ற தடையாணையால் சிக்கலுக்கு உள்ளாகி இருப்போர் பயன்படுத்திக் கொள்ளவும்.
டெல்லி முனிசிபாலிட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான (கிரிமினல் அப்பீல் வழக்கு எண் CRIMINAL APPEAL 1375-1376/2013) வழக்கு இது. வழக்கு விபரம் தேவையில்லை. தேவை ஏற்பட்டால் ஒழிய தொடர்புடைய நீதிமன்றங்களின் ஆணைகளின் அடிப்படையில் தடை ஆணைக்கான காலத்தை நீட்டிப்புச் செய்யலாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பு மொத்தம் 72 பக்கங்கள். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு இது. கவனமாகப் படித்துக் கொள்ளவும்.
கீழே இருக்கும் படங்களைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அடியேனின் உதவியால் நண்பரின் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்ட உதவி, வழக்கின் போக்கு, வழக்குகள் போடும் முன்பு ஆலோசனை போன்றவைகள் தேவைப்படின் என்னை அழைக்கவும். வி.எஸ்.ஜே சட்ட ஆலோசனைக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் ஆகும். ஃபைனான்ஸ் தொடர்பான ஆலோசனைகளும், கடன்கள், கடன் உதவி, கடனை மீட்டு மீள் கடன் ஆகியவைகளைச் செய்து வருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பினைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.
JUDGEMENT OF CRIMINAL APPEAL NOS : 1375-1376 OF 2013 - SUPREME COURT