எங்கள் ஊரில் மிகப் பெரிய பாடகர் ஒருவர் இருந்தார். ஊரில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் அவரின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். சினிமா பாடல்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரை வெளி நாட்டு பாடகர்கள் கூட ஒப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவர். இவர்கள் பரம்பரையே பாடல் பாடி புகழடைந்தவர்கள். பாடகரின் அப்பாவும் பாடகராக புகழ் பெற்றவர். இவர் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பாடுவதில் கில்லாடிகள். தற்போது டிவிக்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கூட பாடகரின் தகப்பனார் கலந்து கொள்வது உண்டு.
இப்படி புகழ் பெற்ற பாடகரிடம் இருக்கும் கெட்ட குணம் - பெண்கள். இவர் பெண்களை வேட்டையாடியது போல வேறு எவரும் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு மேடைக் கச்சேரியிலும் பாட்டுப் பாடிய பின்னர் அன்றைக்கே கச்சேரி கேட்க வந்த ஏதாவது ஒரு பெண்ணை ஒதுக்கி விடுவார். முதலில் கல்யாணமென்று தான் பேச்செடுப்பாராம். அவர் குரலுக்கு மயங்கிய அந்தப் பெண்ணும் விரைவில் அவரிடம் மயங்கி கிடப்பாள். அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்து காரியம் பார்ப்பதற்காக அடுத்த மேடைக் கச்சேரியில் நீதான் என்னுடன் பாட இருக்கிறாய் என்று சத்தியம் செய்வாராம். காரியம் முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாராம். மஞ்சள் கலர் என்றால் பாடகருக்கு ரொம்பவும் இஸ்டமாம். மஞ்சள் கலரில் எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது. உறிஞ்சி விடுவாராம். பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாடகிகளை பெட்ரூமில் பெண்டு நிமிர்த்தி விடுவாராம். சரியாக அந்த சமாச்சாரத்திற்கு ஒத்துழைக்காத பாடகிகளை சுருதி சரியில்லை தாளம் சரியில்லை என்று ஒத்திகையின் போதே மானத்தை கப்பலேற்றி விடுவாராம். வேறு வழியின்றி பாடகிகளும் அந்தச் சமாச்சாரத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்களாம். இப்படி இவரால் குத்திக் குதறப்பட்ட பாடகிகள் எத்தனையோ பேராம்.
ஏமாற்றி விட்டாய், அது இதுவென்று அழுது புரண்டு அழிச்சாட்டியம் செய்தால் அந்தப் பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டு சொல்லியும், ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் அந்தப் பெண்ணைப் பற்றிய பொய்யான புரளியை பரவ விட்டும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செய்து விடுவாராம். வேறு எங்குமே கச்சேரி கிடைக்க விடாமல் வேறு செய்து விடுவாராம். இப்படி அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுத்து சொல்ல முடியாதாம்.
இவரின் இந்த அழிச்சாட்டியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய கசிய, அவரின் மீதான க்ரேஸ் குறைந்து அவரை மேடைகளில் பாட அழைப்பது குறைந்தது. பார்த்தார். இனி இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று விவசாயத்தில் இறங்கினார். விவசாயத்தில் அவருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நிலையில் அவருக்கு முன்பே கலியாணமும் ஆகியிருந்தது. மூன்று பிள்ளைகள் வேறு. முதல் பிள்ளை பிறந்தவுடன் தான் அவருக்கு அதிர்ஷடம் அடித்ததாகச் அவரே சொல்வாராம். அந்தப் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்திருக்கிறது. எங்கெங்கோ சிகிச்சைகள் எடுத்தார்கள். பாடகர் தன் முதன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராம். இந்த மஞ்சள் காமாலையினை எவராலும் சரி செய்ய இயலாதாம். அதனால் பாடகரின் மகன் அற்ப ஆயுளில் உயிரை விட்டிருக்கிறார். ஆள் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாராம். நான் என்ன செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று அழுது புலம்புகிறாராம்.
பெண்களின் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுவும் மஞ்சள் கலர் பெண்கள் என்றால் பாடகருக்கு கொள்ளை ஆசையாம். இவரின் பையனுக்கு வந்த்தோ மஞ்சள் காமாலை நோய். விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா?
தர்மம் சூட்சுமமானது தானே ?????
குறிப்பு : இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதால் படிக்க சுவாரசியமாய் இருக்கும் பொருட்டு “உண்மை” என்ற பதம் தலைப்பில் சேர்க்கப்பட்டது.
Showing posts with label தர்மம் சூட்சுமமானது. Show all posts
Showing posts with label தர்மம் சூட்சுமமானது. Show all posts