குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Monday, March 23, 2026

செத்து நடித்தவர்கள் - காமத்தில் விளைந்த அரசியல் கட்சி (1)

1976களில் ஸ்னஃப் மூவி என்றொரு கான்செப்ட் உலகிற்கு தெரிய வந்தது. தனிப்பட்டவர்களின் இன்பத்திற்காக, மகிழ்ச்சிக்காக, அதிகாரத்துக்காக உண்மையில் கொலை செய்து அதை ரசிப்பதை ஸ்னஃப் என்கிறார்கள். அதீத மன நோய் கொண்டவர்களால் தான் இதைப் போன்று செய்ய முடியும்.

மன்னர்கள் ஆண்ட காலத்திலிருந்து இன்றைய நொடிப்பொழுது வரை இது வாடிக்கை. போரில் வெற்றி பெற்றவுடன் பொன்னுடன், பெண்ணையும் கொள்ளையடிப்பார்கள். அவர்கள் அடிமையாக்கப்பட்டு அனுபவிக்கப்பட்டார்கள் என்கிறது வரலாறு. போர்களில் பல பெண்களின் மார்புகள் அறுக்கப்பட்டு, யோனியில் கத்தி சொருகப்பட்டு இறந்திருக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இனவழிப்பின் போது நடத்தப்பட்ட கொலைகளின் புகைப்படங்கள் இன்றைக்கும் சான்றாக இணையத்தில் காணக் கிடைக்கிறது. இலங்கைத் தமிழச்சி இசைப்பிரியாவின் கொலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது மட்டுமல்ல இன்னும் பல அனேக வழிகளில் இந்த ஸ்னஃப் வகை குற்றங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

புராணக் கதையான மகாபாரதப் போரில் களப்பலி கொடுப்பார்கள். அந்தக் கதை உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? பீமனின் தம்பியை கொல்வார்கள். இந்தியாவில் 2001லிருந்து ஒவ்வொரு தேர்தல் போருக்கும் முன்பு களப்பலி கொடுக்கப்பட்டு வருகிறதே அது பற்றி யாரேனும் அறிந்திருக்கின்றீர்களா? ஒவ்வொரு ஜனநாயகப்போருக்கும் முன்பு உயிர்பலி - அது களப்பலி. அதைத் தமிழ் நாட்டில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். 

அப்பாவி ரசிகனின் காம உணர்வைத் தந்திரமாகத் தூண்டி விட்டு தன்னை ஹீரோவாக நயவஞ்சமாக நிலை நிறுத்திக் கொண்ட ஒருவன் - தன் காதலியின் நலனுக்காக - தன் காதலியின் ஆசைக்காக - அரியாசனத்தை கேட்டு - அப்பாவி மக்களை களப்பலியாக்கிய கொடுமையை தமிழ்நாடு பார்த்தது.

ஒரு நாடகக்காரிக்காக சென்னையின் பிரபல ஹோட்டிலின் அறைகள் வாரக்கடைசியில் நிரம்பி வழியுமாம். அவளுடன் உறவு கொள்ள அதிகார வர்க்கத்தின் அத்தனை ஆண்களும் தவமிருந்தார்கள். ஒரு பிரபல நகர கிராமத்தின் சொத்துக்கள் அனைத்தையும் அந்த நாடகக்காரிக்கு எழுதி வைக்கப்பட்டன. சினிமாக் கொட்டைகளில் அவளின் ஆட்டத்தைக் காண கூட்டம் முண்டியடித்தது. ஒரு காம நடனக்காரி - இந்த ஆட்டத்தைப் பார்த்தால் பெரும்பான்மையான ஆண்களின் கைரேகை அழிந்து விடும் என. போங்கக்கா? என்று சிரித்தாளாம் அந்த சதைகாட்டி நடிகை. சதை இல்லையென்றால் ஒரு சினிமா ஓடாது. கோடானு கோடிகளில் பணமும் புரளாது. 

சதையை - கலையாக்கி, காமமாக்கி, பாட்டுகள் போடப்பட்டு, நடனமாக்கி காம வெறியைக் கிளப்பி விட்டு அதைக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நல்ல படமெடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இன்று முகவரி அற்றுப் போய் விட்டது. காரணம் அவர்களும் சதையை கலையாக்கி விற்றார்கள்.

இன்றைக்கும் கிழட்டு ஹீரோக்களுடன் இள வயது நடன சுந்தரிகள் தொடைகளை காட்டிக் கொண்டு, பின்புறத்தை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான படங்களை எடுப்பவர்களை இயக்குனர்கள் என்கிறார்கள். இயக்குனர்கள் எதை இயக்குகிறார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். பிஸ்டன் நினைவுக்கு வந்து விடக்கூடாது உங்களுக்கு.

கையளவு சதைப்பகுதி - இதை வெகு தந்திரமாக வியாபாரப் பொருளாய் மாற்றிய பெருமை சினிமாவுக்கும், நாடகத்துக்கும் உண்டு.

ஒவ்வொரு மானிடருக்குள்ளும் புதைந்து கிடைக்கும் ரகசிய காமத்தை தூண்டி விட்டு, அதில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் ஹீரோக்களை - தலைவர்கள் என நம்பும் அப்பாவி ரசிகன் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

உண்மையில் உலகெங்கும் நீதிமன்றமும், சட்டமும் எப்போதும் ஏழைகளுக்காக வேலையே செய்யாது. ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் - அதிகாரத்தின் முன்பு தன்னை மறைத்துக் கொள்ளும்.  41 பேரைப் படுபாதகமாக கொலை செய்தவர்கள் அனைவரும் இன்றும் நாட்டைக் காக்கும் பாதுகாவலர்கள் என அரசியல் பேசுகிறார்கள். அவர்களின் பின்னால் நிற்கிறது ஒரு சுய நல வெறி பிடித்தவர்களின் கூட்டம். அவனை விட இவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். அவ்வளவும் சுய நலம். யாரோ ஒருவனின் புகழில் குளிர் காய நினைக்கும் நயவஞ்சகர்களின் கூட்டம் இது.  இந்தக் காலத்தில் அப்படி ஒரு அப்பாவி ரசிகன் என ஒருவனும் இல்லை.

தொடரும்...!