இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என இந்தியா மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் சேர்மன் மமிடாலா ஜகதீஷ் குமார் - ராவ் ஒரு நயவஞ்சகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
படிக்க மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கனவுகளுக்கும், வாழ்விற்கும் வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக என்று எல்லோருக்கும் தெரியும்.
ஏழை மாணவர்கள் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து விடக்கூடாது என்ற கொள்கைக்காக, கீழ்சாதி என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் மனம் மகிழும் வண்ணம், ஏழைகளான இந்திய மக்களின் புதல்வர்களின் கல்வியை தடுப்பதற்காக, நரித்தனமாக நுழைவுத் தேர்வுகளை தகுதி என உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
பல மொழி, பல வகையான நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒன்றிய மாநிலங்களின் கல்வியில் தலையிட்டு மாணவர்கள் பலரைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதா ஒரு எடுத்துக்காட்டு.
கல்லூரியில் புரபஸராக தகுதி உயர்ந்த முன்பு இருந்த பி.ஹெச்.டி படிப்பு என்ற தகுதி தேவையில்லை என்கிறார் ஜகதீஷ் குமார் சேர்மன்.
மாஸ்டர் டிகிரி படித்தாலே போதும், புரபஸர். பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லையாம்.
மாணவர்கள் படிக்க நுழைவுத் தேர்வு தகுதி எனில் கல்லூரி புரபசர்களுக்கு தகுதி தேவையில்லையா?
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.