குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 19, 2020

லட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்?

அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவக்கல்லூரியில் கோடிக் கணக்கில் சீட் வழங்க துட்டு வாங்கப்படுகிறது என்றுக் காரணம் சொல்லி, நீட் வந்தது.

அரசியல்வாதிகளுக்கு பணம் எப்படி வந்தது என்று கண்டுபிடித்தால் அவர்கள் எப்படி கல்லூரி திறப்பார்கள்? அதை எவரும் எந்த உத்தமரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.

ஆனால் மக்கள் பரிட்சை எழுதி பாஸ் செய்ய வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு எதுக்கு பரிட்சை வைக்கணும்? நேரடியாக நீட் எழுதலாமே? 

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதன் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம்போக்கு கிழட்டு மூதி டெல்லியில் லோக் ஆயுக்தா வேண்டுமென்று போராடியது. அது இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை. அப்பட்டமான அயோக்கியத்தனத்தைச் செய்து இந்திய மக்களை ஏமாற்றினான் அந்தக் கிழட்டு பச்சோந்தி. யோக்கிய உத்தமர் இவரே என்று சொல்லாமல் சொல்லிச் சென்றான் அவன். ஜி.டி.பி. மைனஸ் 23 சதவீதத்திற்கும் கீழ் சென்று விட்டது. 

ஏழை எளியவர்களுக்கு கிடைத்த படிக்கும் வாய்ப்பினை ஏன் பறிக்கிறது மத்திய அரசு? இதிலும் அரசியல் இருக்கிறது.

ஐடியில் கோலோச்சியவர்களுக்கு இனி அது சரிப்படாது என்று தெரிந்து விட்டது. ஆகவே இந்தக் குறுக்கு வழி. இனி ஆட்சிப்பணி, மருத்துவப் பணி எல்லாவற்றிலும் வேறொரு இனத்தினர் கோலோச்ச வழி வகைகள் செய்யப்பட்டு விட்டன.

அடுத்து எய்ம்ஸ் பிஜி கோர்ஸுக்கும் டெஸ்ட்.

டிமாண்டிசேஷன் போது சேகர் ரெட்டிக்கு கிடைத்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி இன்றைக்கு வாய் திறக்காதவர்கள் இன்று கணக்குக் காட்டப்பட்டு விட்டதாக சொல்லுகின்றார்கள்.

சட்டசபையில் பதினோறு எம்.எல்.ஏக்கள் கட்சி விரோதமாக ஓட்டளிக்கின்றார்கள். இன்றைக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. ஆனால் உலக பொய்யன் அர்னாப் கோஸ்வாமிக்கு உடனடியாக ஜாமின் விசாரணை நடத்தப்பட்டு ஜாமின் அளிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினை கேள்வி கேட்டால் வழக்குப் போடுகின்றார்கள்.

அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. பொய்யும் புரட்டும் செய்திகளாகி வெளியாகின்றன. 

டிமாண்டிசேசனில் ஏகப்பட்ட ஊழல் நடத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். அதற்கு கட்டியம் கூறுகிறதா இந்தச் செய்தியைப் படித்த போது கேள்வி எழுகிறது.

இந்திய நாட்டினருக்குச் சொந்தமான ஒரு வங்கியை எதற்கு அடிமாட்டு விலைக்கு இன்னொரு வெளி நாட்டு வங்கிக்கு விற்க ஆர்.பி.ஐ அனுமதிக்க வேண்டும்? ஏன் இப்படித்துடிக்கிறது ஆர்.பி.ஐ என்று கேட்கிறார்கள் செய்தியாளர்களும், முதலீட்டாளர்களும். மிகக் குறைந்த ஆஃபர் செய்யும் வெளி நாட்டு வங்கியுடன் ஏன் எல்.வி.பிஐ இணைக்கத் துடிக்கிறது ஆர்.பி.ஐ? காரணம் என்ன?

ஏனென்றால் வெளியேறிய கருப்பு பணம் இப்படி உள் நுழைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பதில் சொல்வார் யாருமில்லை. இதோ அந்தச் செய்தி. 

இதில் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அரசு எப்படி இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது மட்டும் தான். மக்கள் நலன் என்கிற போர்வையில் பிடிக்காத பிரைவேட் நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார்கள். 

அதாவது ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்ட வங்கியை அவர்கள் அழிக்கத் துடிக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அடுத்து கரூர் வைசியா வங்கி என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஏன் அவ்வாறு நடக்கிறது? பிறர் எவரும் தொழிலதிபராக வரக்கூடாது, பெரியவர்களாக வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் தவிர வேறு என்னவாக இருக்க இயலும்? 

இந்தியா மீண்டும் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தப்படுகிறது என்பது கண்கூடு.

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. துரோகிகள் கூட்டம் மதம் பேசித் திரிபவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நாம் என்றைக்கும் ஒரு துரோகியை மன்னித்ததே இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். பெண்களிடம் வீரம் காட்டும் உலக மகா யோக்கிய சிகாமணிகள் உலவும் நாடு இது. வெட்கம் கெட்டவர்கள். பணத்தின் முன்னால் வெட்கமாவது ஒன்றாவது. 

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதையும் வெளிக்காட்ட வேண்டியதில்லை. நேரம் வரும் போது நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டும்.

நன்றி செய்தி உதவி : பிசினஸ் ஸ்டாண்டர்ட்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.