லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே!
18-03-2016ம் தேதியன்று ஜீ டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற உங்களின் நிகழ்ச்சியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. ஆச்சரியம் அடைந்தேன். டிவியில் ஆங்கராக இருப்பதால் எல்லாமும் தெரியும் என்பது போல நீங்கள் பேசுவது சரியில்லை என்று நினைத்தேன். அதற்காகத் தான் இந்தக் கடிதம்.
அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஒரு சாமியாரைக் கூட்டி வந்து அவர் தவறான சிகிக்சை அளிப்பதாய் அவரிடம் சொல்லி குற்றம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றீர்கள். இந்த அதிகாரத்தை அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா? இது கட்டப்பஞ்சாயத்து செய்யும் முறையாகும். அரசிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்கின்றீர்களா என்பது தெரியவில்லை.
சரி அலோபதி மருத்துவம் மட்டுமே மிகவும் சிறந்தது போன்ற உங்களின் பேச்சு எனக்கு உங்களின் மீது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.
அலோபதி மருத்துவத்தில் இருக்கும் யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து நீங்கள் தவறான சிகிக்சை அளித்துள்ளீர்கள், அது குற்றம் என்று உங்களால் குற்றம் சாட்ட முடியுமா? அதற்கு உங்களுக்கும் உங்கள் டிவிக்கும் தைரியம் இருக்கிறதா?
அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மருந்துகளின் தாக்கத்திலும், பின் விளைவுகளில் உயிரழப்போர் கோடிக்கணக்கானவர்கள் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. அலோபதி மருந்துகள் பின் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்றுச் சொல்லி அரசுகள் அம்மருந்துகளைத் தயாரிக்கத் தடை விதிக்கின்றன. தடை விதிப்பதற்கு முன்பு அம்மருந்தைச் சாப்பிட்டவர்களின் கதி என்ன என்று யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை.
அலோபதி என்கிற நவீன மருத்துவத்தில் அனைவரும் பிழைத்து விடுகின்றார்களா? என்று உங்களால் 100 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியுமா? முழு உடலுக்கும் வைத்தியம் பார்க்காமல் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு உடலைக்கூறு போட்டு வைத்தியம் பார்க்கும் அலோபதி மருத்துவத்தின் கொடுமைகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
எந்த விதப் புற்று நோய்க்கும் மிகச் சரியான முறையில் உணவும், மருந்தும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். உணவே மருந்து என்ற முறையில் வாழ்வியல் நெறி கொண்டது தமிழர் பண்பாடு.
எந்த ஒரு மருத்துவரும் அது அலோபதி மருத்துவராக இருந்தாலும் சரி, நோயாளியிடம் அவரின் உணவு பழக்கம், இன்ன பிற பழக்கங்கள் பற்றி விசாரிப்பர். அடுத்து அவரொரு முடிவிற்கு வந்து மருந்துகளை கொடுப்பர். இதுதான் அனைத்து மருத்துவரும் செய்யும் சிகிக்சை முறை.
நீங்கள் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவரும் அதைத்தான் செய்தார். உடனே நீங்கள் ஏன் அவர்களின் உணவுப் பழக்கங்களை விசாரிக்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். நாடி பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டியதுதானே என்று கேள்வி வேறு கேட்டீர்கள். இதெல்லாம் என்ன? நாடியில் பிழை இருப்பது தெரியும். ஆனால் அது என்ன பிழை என்பதை அவர்களின் உணவுப் பழக்கத்தை வைத்துத்தான் ஓரளவு நிதானிக்க முடியும். அப்படிச் செய்வது தவறு என்கின்றீர்கள். அது குற்றம் என்கின்றீர்கள். இதையே அலோபதி மருத்துவரிடம் பேசிப்பாருங்கள். உங்களின் நிலமை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஏழைகளை அழைத்து வந்து மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து டிவியில் ஒளிபரப்பிக் காசு பார்க்கும் திறமையே திறமைதான். வேறு யாருக்கு வரும் இப்படி ஒரு திறமை.
உங்களுக்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக்குச் சளி பிடித்து விடும். கண்கள் சிவந்து, மூக்கு சிவந்து பெரும் கொடுமையாக இருக்கும். தலைவலி வேறு வந்து விடும். உடனே அலோபதி மருத்துவரை நாடுவேன். மருந்து கொடுப்பார். நான்கு நாட்களுக்கு மருந்தைச் சாப்பிடுவேன். உடம்பு அசதியாக இருக்கும். சளி கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கி விடும். அடுத்த நாளில் மூக்கிற்குள் நாற்றமெடுக்கும். சளி கட்டி விடும். அதைக் கரைக்க அடுத்த மருந்து. இப்படி மருத்துவருக்கும் மருந்துக்கும் என 1000 ரூபாய் செலவாகி விடும். அதுமட்டுமல்ல உடம்பு சொல்லொண்ணா துயரத்தைத் தரும். இந்த மருத்துவ முறையினைத்தான் நான் கிட்டத்தட்ட் 30 ஆண்டுகள் பயன்படுத்தினேன். எனது குழந்தைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
ஆனால் இப்போது அப்படி அல்ல மேடம். எனது மனையாள் தொடு வர்ம சிகிக்சையளிக்க முறையான வர்ம மருத்துவரிடம் பயிற்சி பெற்றார். சளி வந்தால் அவரது விரலால் சிறிய அழுத்தம் தருகிறார். இரவில் உணவினைத் தவிர்க்கச் சொல்கிறார். நீராகாராம் தருகிறார். அடுத்த நாளே சளி இருக்குமிடம் தெரிவதில்லை.
அலோபதி மருத்துவத்தில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது மேடம்.
சர்க்கரை சர்க்கரை என்று இந்த உலகம் அலறுகின்றதே அது ஏன் தெரியுமா மேடம். WHO நிறுவனத்தின் சர்க்கரை கட்டுப்பாட்டு அளவீடு மாறியதால் ஒரே நாளில் உலகமெங்கும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள். இரத்தக் கொதிப்பு அளவீடும் இதே கதிதான்.
தொடு வர்மத்தில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்றால் சர்க்கரை நோய் இருக்குமிடம் தெரியாது. சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவையில்லை மேடம்.
மருத்துவ உலகத்தில் இன்னும் பல்வேறு மிக முக்கியமான நிலைகள் இருக்கின்றன. நாடி பிடித்துப் பார்ப்பதிலும் காலம் உண்டு. ஒரு சில கத்துக் குட்டி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளை, என்னவோ அனைவரும் செய்வது போன்ற காட்சியினை நீங்கள் மக்கள் வெளியில் உருவாக்க முனைகின்றீர்கள்.
முற்றிலும் தெரியாத விந்தை உலகமான மருத்துவத்தை நீங்கள் ஒரு சார்பாகக் கிண்டலடிப்பதும், கீழ்தரமானது என்று பிறர் நினைக்கும் படி செய்வதும் சரியல்ல மேடம்.
ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பெற்று வாழ்ந்ததை, சமூகத்திற்கே திரும்பவும் கொடுத்து விட்டுச் செல்வதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை.
காசு பணம் புகழ் என்பதெல்லாம் எதுவும் தந்து விடப்போவதில்லை மேடம்.
சேலம் பைபாஸ் சாலையில் நானும் ஒரு சில நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் ஏற்காடு சென்றிருந்தோம். நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்தது.
”டயர் வெடித்து விட்டது பிரேக் போடுங்க” என்றுச் சொன்னேன். நண்பர் காரை நிறுத்தி இடது பக்கமாக ஓரம் கட்டினார். யாருக்கும் எந்த காயமும் இல்லை. கார் கவிழவும் இல்லை. இது சாத்தியமா என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
நண்பருக்கு ஆச்சரியம்.
”என்னால் நம்பவே முடியவில்லை, கார் உருண்டு விடும் என்று நினைத்தேன்” என்றார்.
”நீங்கள் பதட்டமே கொள்ளாமல் இருக்கின்றீர்களே?”என்று கேட்டார்.
”யாருக்கும் எவருக்கும் எந்தக் கெடுதலையும் நீங்களும் நானும் செய்வதில்லை. ஆகவே எதுவுமே நடக்காது, ஸ்டெப்னியை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம்” என்றேன்.
என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
உங்களின் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மனித குலத்துக்கு நன்மை செய்கிறது என்றால் மகிழ்ச்சியே.
மருத்துவத்தில் அலோபதி ஒரு சில நோய்களுக்கு மிகச் சரியான தீர்வைத் தரும். சித்த, ஆயுர்வேதம், வர்மம் போன்றவை பல நோய்களுக்கு நல்ல தீர்வைத் தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
பல அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்தினைக் கொடுப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். பல நோய்கள் அலோபதியில் சரி செய்யப்படுவதும் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.
எழுத வேண்டுமா என நினைத்தேன். வேறு வழி இல்லை என்பதால் எழுதி விட்டேன். மனது வருத்தமேற்பட்டால் மன்னித்து விடவும். உங்களைச் சங்கடப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமில்லை. உண்மையறியாமல் பேசுகின்றீர்களே என்ற நினைப்புத்தான் எனக்கு.
மிக்க நன்றி !
- கோவை எம். தங்கவேல்
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.