குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, April 3, 2009

என்னைக் காப்பாற்றுங்கள் : ஆசைத்தம்பியின் வேண்டுகோள் !
சலூனுக்குச் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். அழகான பையன் ஒருவனும், முடி திருத்துபவர் ஒருவரும் இருந்தனர். அப்போது தான் அந்தப் பையன் பையன் பார்சலைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். யார் என்று கேட்டேன். அவர் சொன்னது. இரண்டாவதாகப் பிறந்தவன். பெயர் ஆசைத்தம்பியாம். பத்தாவது வரை படித்திருக்கிறான். முதல் பையன் திருமணம் முடிந்த பிறகு அவனது திருமணத்திற்கு வாங்கி வைத்த கடனையும் தந்தையின் தலையில் சுமத்தி விட்டு மாமியார் வீட்டுடன் சேர்ந்து விட்டான்.

கடன் கட்டவும், சாப்பாட்டுக்கும் தினமும் திண்டாடி வருகிறேன். கடை வாடகை, இவனுக்கு செலவு என்பதால் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.

ஆசைத்தம்பியை வேலைக்கு அனுப்பலாம் அல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர் இவன் காயம் பட்டால் ரத்தம் நிற்காமல் கொட்டும் நோயுடன் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறான். ஊசி போட 4000 ரூபாய் செலவாகிறது. அவ்வப்போது யாராவது உதவி செய்கிறார்கள் என்று சொல்லி வருந்தினார். என்ன நோய் என்று விசாரித்தேன். அதன் விபரம் கீழே..

MAJOR BLEED - USE FACTOR.
HEMOPHILIA A FACTOR DEFICIENCY 8% < 1%

இவனது பிளட் க்ரூப் : ஓ பாசிடிவ். அதாவது ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு. அதன் விளைவாக ஜாயிண்ட் எல்லாம் வீக்கமும் வலியும் ஏற்படுமாம்.

இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது ஆசைத்தம்பியின் நோய்க்கு நிரந்தர தீர்வை வழங்கும் மருத்துவ உதவியினையோ அல்லது அவனது நோய்க்கான மருந்துச் செலவையோ செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்னாலியன்ற உதவிகளை அந்தப் பையனுக்கு அவ்வப்போது செய்து வருகிறேன்.. இந்த நோய் நிரந்தரமாக அவனை விட்டு செல்ல ஏதாவது மருத்துவ சிகிச்சை இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்.

அவனது முகவரி :
ஆசைத்தம்பி. எஸ்
/பெ : சண்முகம். எஸ்
97/60, செல்வபுரம், பாப்பம்பட்டி பிரிவு, சிந்தாமணிப்புதூர் அஞ்சல்,
இருகூர் வழி, கோயம்புத்தூர் - 641103
தமிழ் நாடு, இந்தியா.
ஆசைத்தம்பியின் மொபைல் நம்பர் : +91 9788613690

HIS BANK DETAILS :
CORPORATION BANK, 1093, SINGANALLUR,
COIMBATORE
ACCOUNT NUMBER : SB01001449
(1093/SB/01/001449)
ACCOUNT NAME : S. AASAITHAMBI
RTGS IFSC CODE : CORP0001093

ஆசைத்தம்பியின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்களேன். ப்ளீஸ்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.