குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 11, 2009

வாழ்க்கை என்பது.... !

இதுவரை எத்தனையோ பிளாக்குகள் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதையும் மீறி என் மனதுக்குள் புகுந்து கொண்ட பிளாக் இது. இந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதாமை என்னை நெருப்புக்குள் தள்ளுவது போல இருக்கிறது. எனது வேண்டுகோளை ஏற்பாரா ?

பிளாக்கின் முகவரி : இரு கண்கள் போதாது !
http://raasaiya.wordpress.com

அவரின் பிளாக்கில் இருந்து சில கவிதைகள் கீழே.. அனுமதித்தே ஆக வேண்டும் திரு ராசய்யா அவர்களே... தவறிருந்தால் மன்னித்து அருளவும். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் வெளிச்சம் காட்டுவதில் தவறேதும் இல்லையே ராசய்யா...
நன்றி : ராசய்யா.

என் அப்பாவிற்கு : எழுதியவர் திரு. ராசய்யா
--------------------------------------------------
கரிசலாய் இருக்கும் எனை
விதை நிலமென நினைத்து
விட்டுப்போன என் அப்பாவிற்கு,

ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து
ஆனந்தப்பட்டீர்கள்
ஒவ்வொரு காலையும்
என் காலனிகளை
பளபளப்பாக்கி
பரவசப்பட்டீர்கள்

பட்டம் வாங்கியபோது என்
பரம்பரையில் முதல்
பட்டதாரி என் மகனென
பார்த்தவரிடமெலாம்
சொல்லித்திரிந்தீர்கள்

வேலை தேடி
சென்னை சென்ற போது
சீமைக்கே அனுப்பியதாய்
சிலாகித்துக் கொண்டீர்கள்

வேலைக்கு சேர்ந்தும் என்
வீட்டுச் செலவிற்கு
பணம் அனுப்பினீர்கள்

இன்று,
நல்ல வேலை
நல்ல சம்பளம்
சொன்ன போதே
பிறவிப்பயனையடைந்தேன் என்றீர்கள்

நடக்கத்தானே கற்றுக்கொண்டேன்
வாழத் தெரிந்து கொண்டேன்
என நினைத்து விட்டுப்போனீர்களா?


மேலும் கவிதைகளையும் அவரது பிளாக்கினையும் படிக்க இவ்விடத்தில் சொடுக்கவும்

2 comments:

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையாக எழுதியுள்ளார்.

இவரைப் போன்றவர்கள் பதிவுலகை விட்டுப் போவது மிகப் பெரிய இழப்புத்தான்.

ராசய்யா அவர்களே திரும்ப வாருங்கள்.

Joe said...

அற்புதம்!

என்ன வழக்கம் போலத் தானே இருக்கிறது என்று நினைக்கும்போது, கடைசி வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டன!

எனது பதிவில் உங்கள் கருத்தை சொல்லவும்.
http://joeanand.blogspot.com/2009/03/1_11.html

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.