குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திருமலை. Show all posts
Showing posts with label திருமலை. Show all posts

Sunday, September 22, 2024

திருப்பதி லட்டு - மோசடி வைணவ பார்ப்பனர்கள்

திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து உள்ளது என குஜராத் சோதனைச்சாலையில் சோதனை செய்த ரிப்போர்ட்டில் இருப்பதாக இணையதளமெங்கும் பரவியது. 

அவ்வளவுதான்.

பார்ப்பனர்களும், பிஜேபியினரும் பொங்கி புரட்சிக் கருத்துக்களைக் கக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் நாட்டுக் கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஆரம்பித்திருக்கிறார்கள். திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்புக் கலந்தால் தமிழ் நாட்டு இந்து அற நிலையத்துறையை கலைக்க வேண்டுமென்கிறார்கள். 

பல பார்ப்பன அடிவருடிகளும், போலி ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் அல்லுசில்லுகள் என பரபரவென பற்றிக் கொண்டது சோஷியல் மீடியாக்கள். 

தினமலரில் வீடியோக்கள் பரபரப்பாகின. இதோ ஒரு சில ஸ்கிரீன் ஷாட்டுகள் உங்களுக்காக.






ஒன்றிய அரசிடமிருந்து திண்டுக்கல்லுக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்தில் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. அமுல் நிறுவனம் எங்களுக்கும், திருப்பதி கோவில் லட்டுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என அறிக்கை விட்டது. மேலே இருக்கும் ஸ்கீரீன் ஷாட்டுகள் மட்டுமல்ல, யூடியூப் வீடியோக்களில் இது ஒரு சதி எனவும், இதற்கெல்லாம் காரணம் ஆந்திராவை ஆண்ட முன்னாள் முதல்வர் ஜெகன் என அவர் மீது குற்றத்தைச் சுமத்தினார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் ஒரு காலத்தில் தினமலரில் வெளியான ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் பரம்பரை பரம்பரையாக வைஷ்ணவ பார்ப்பனர்களால் மட்டுமே லட்டு தயாரிக்க முடியும், அவர்கள் தான் லட்டுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து - லட்டுவைப் பிடிக்கிறார்கள் என்று வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.


வீடியோ இணைப்பை இந்த இணைப்பில் பார்த்துக் கொள்ளவும். 

https://x.com/athipann/status/1837552398677823509

தினமலர் பார்ப்பனரால் - திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் - திக, திமுக, அதிமுக, தேமுதிக, விசிக போன்ற கட்சிகளை விமர்சித்து எழுதும் - சனாதனத்தை ஆணி வேராக கொண்ட பத்திரிக்கை. இப்பத்திரிக்கை நடத்தும் வீடியோ சானலில் வெகு தெளிவாக லட்டுப் பிடிப்பது, லட்டுக்கான உணவுப்பொருட்களை தேர்ந்தெடுப்பது எல்லாமும் வைஷ்ணவப் பார்ப்பனர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இங்கே என்ன சொல்கிறார்கள்?

ஜெகன் தான் கோவிலுக்குள் புகுந்து லட்டுவில் மாட்டுக் கொழுப்பைச் சேர்த்து விட்டார் எனவும், கிறிஸ்தவ மிஷனரிகளின் சனாதனத்துக்கு எதிரான வேலை எனவும், ஒரு துணை முதலமைச்சர் விரதம் இருக்க போகிறதாகவும் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த லட்டு தயாரிக்கும் வேலைக்கு வைஷ்ணவ பார்ப்பனர்கள் தவிர வேறு எவருக்கும் பணி இல்லை. மேலும் லட்டு தயாரிக்க தேவைப்படும் உணவுப்பொருட்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுத்து - அதனை ஆய்வுக்கு உட்படுத்திதான் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுக்கிறது.

இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபட்ட திருப்பதி தேவஸ்தான போர்டுகளில் உயர்ஜாதியினர் தான் இருக்கின்றனர். லட்டுவைத் தயாரிப்பது வைஷ்ணவ பார்ப்பனர்கள். 

எந்த வகையிலும் வேறு எந்த சாதி, இனத்தினைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முறையிலும் தொடர்பில்லாத நிலையில் பிறர் மீது குற்றம் சுமத்துபவர்களின் மன நிலையை சோதிக்க வேண்டும்.

இந்தக் குற்றத்தினைச் செய்தவர்கள் வைஷ்ணவ பார்ப்பனர்களும், திருப்பதி தேவஸ்தானம் போர்டு உறுப்பினர்கள் மட்டுமே. இவர்கள் செய்த தவற்றை வேறு நபர்கள் மீது திருப்பி விடும் போலிச் செய்திகளை இணையத்திலும் மீடியாக்களிலும் பரப்புகிறார்கள். 

ஆய்வுக்கு உட்படுத்திய நெய்யில் எப்படி மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெயும் வரும்? யாரை ஏமாற்ற பொய் சொல்லுகிறார்கள் இவர்கள்?

இது போதாது என்று ஒரு கழிசடை பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கிறார்கள் என பேட்டிக் கொடுத்திருக்கின்றான்.

தினமலரில் இன்றைய செய்திதாள் விளம்பரத்தைப் பாருங்கள். தமிழ் நாட்டில் எப்படி ஒரு செய்தி திட்டமிடப்பட்டு - தமிழர்களை அசிங்கப்படுத்தும் விதமாக பார்ப்பனர்களுக்கு அடிவருடி சேவை செய்யும் நபர்களாலும், பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிக்கையாலும் பரப்பப்படுகின்றன எனப் பாருங்கள்.

தமிழ்நாட்டிற்கும் திருப்பதி லட்டுக்கும் என்ன தொடர்பு? தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் நெய் சப்ளை செய்தது என்கிறார்கள். 

இனி இந்த நிறுவனத்துக்கும் திமுகவினருக்கும் தொடர்பு இருப்பதாக யாரோ ஒருவர் பேட்டி கொடுப்பார். ஒரு சிலர் இந்த நிறுவனத்தில் கிறிஸ்தவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்று பேச ஆரம்பிப்பார்கள்.

நெய் சரியில்லை எனில் நிராகரிக்க வேண்டிய பணி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அல்லவா இருக்கிறது? அதை ஏன் கேள்வி கேட்கவில்லை எவரும்? தினமலர் தேவஸ்தான உறுப்பினர்களை கேள்வி கேட்க வேண்டுமே? ஏன் கேட்கவில்லை? கேட்க மாட்டார் தினமலர் நிர்வாகி. 

ஒவ்வொரு உணவுப் பொருளும் ஆய்வுக்கு உட்படுத்திதான் திருப்பதி தேவஸ்தானம் போர்டு உள்ளே அனுமதிக்கும். அந்த ஆய்வறிக்கை எங்கே? திருப்பதி தேவஸ்தானம் அதை வெளியிடுமா?

இப்போது தீட்டு எனச் சொல்லி, வருடம் 5000 கோடி வருமானம் வரும் திருப்பதி தேவஸ்தானம் தீட்டுக்கழிக்க செலவு செய்யப் போகிறார்கள். 

தீட்டினை உண்டாக்கிய தேவஸ்தான போர்டு உறுப்பினர்களுக்கும், லட்டுப் பிடித்த வைஷ்ணவ பார்ப்பனர்களுக்கும் என்ன தண்டனை? 

தலையில் தண்ணீர் தெளித்து தீட்டினைக் கழித்து விடுமா தேவஸ்தானம் போர்டு?

லட்டுவைத் தின்ற என்னைப் போன்ற சுத்த சைவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். 11200 கிலோ தங்கமும், 5000 கோடி வருமானம் வரும் திருப்பதி தேவஸ்தானம் போர்டை சாமானியன் ஒருவனால் கோர்ட்டில் சந்திக்க முடியுமா? இரண்டு நாட்களாக செம கடுப்பில் இருக்கிறேன். மாட்டுக் கொழுப்பையா தின்றேன் என என்னால் இன்றும் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு நெய் கொள்முதலுக்கு தற்போது வெளியிட்டிருக்கும் டெண்டரைப் பாருங்கள். இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும் போது - லட்டுவில் மாட்டுக் கொழுப்பு யாரால், எப்படி சேர்க்கப்பட்டது? உண்மையை எவரும் சொல்ல மாட்டார்கள் என தெரியும். 

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்ப் பழி தீர்க்க வேண்டும். அரசியல்வியாதிகளுக்கு தமிழ்நாட்டு திண்டுக்கல் நிறுவனத்தின் மீது பழி போட வேண்டும். பழனி கோவிலில் கொழுப்பு என பரப்ப வேண்டும். ஒரு சிலர் இதைப் பயன்படுத்தி நிறுவனத்திடமிருந்து கறந்து விட வேலை செய்வார்கள்.

ஆனால் லட்டுவில் மாட்டுக் கொழுப்பைக் கலந்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். அவர்களை எவரும் தீண்டக்கூட முடியாது. ஏனெனில் அது அவாள்...!



ஏன் எல்லோரும் லட்டுவில் மாட்டுக் கொழுப்புப் பிரச்சினையை திசை திருப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள் என மேலே இருக்கும் செய்திகள் உங்களுக்கு உணர்த்தும். 

லட்டு மூலம் 500 கோடி வருமானம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்து பக்தர்கள் கொடுத்தது 5000 கோடி ரூபாய். கோவில்கள் என்றால் என்ன என்பது பற்றிய உண்மைகளை உணருங்கள். உங்கள் யாருக்கும் தோன்றவில்லையா? கருவறையில் ஒரு சிலரைத் தவிர பூசை செய்ய முடியவில்லை என? 






இந்தச் செய்திக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சும்மாவானும் படித்து வையுங்கள். 

பாலக்காடு அருகில் இருக்கும் கல்பாத்தியில் இருக்கும் டேஸ்ட் ஆஃப் கல்பாத்தியில் அடியேன் டிபனுக்கு, காஃபிக்கும், வத்தல், வடாகம், மதிய உணவுக்கும் செல்வதுண்டு. கல்பாத்தியில் அருமையான அக்ரஹாரம் உள்ளதுஞானும். டேஸ்ட் ஆஃப் கல்பாத்தி ஹோட்டல் - அப்படியே தஞ்சாவூர் சமையல் டேஸ்ட் தெரியுமோல்லியா உங்களுக்கு? தெரிஞ்சுக்கோங்க.

அம்புட்டுதான். இனி உங்க பாடு, லட்டு பாடு. இனி திருப்பதி லட்டு என்றாலே மாட்டுக் கொழுப்பு நினைவுக்கு வந்து தொலைக்கும். அதுவேறு காய்ந்து பசபசவென இருக்குமா? லட்டுவைப் பார்த்தாலே வாந்தி வரும் இனி.

அய்யகோ... பெருமாளின் பிரசாதத்திற்கு இப்படி ஒரு அபச்சாரமா? பெருமாளே.. ! பெருமாளே...! லட்டுவில் கொழுப்பைக் கலந்த துஷ்டனை சும்மா விடாதீரும். 

அவ்வளவுதான் என்னால் முடியும்.