குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, November 26, 2022

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது - மனிதாபிமானம் அற்ற சிந்தனை

உலகின் மக்கள் தொகை 800 கோடியாம். அதில் 799 கோடி தீயவர்களிடமிருந்து ஒரே ஒரு கோடி கூட இல்லாத நல்லவர்கள் என்ற சிறுபான்மையினரைக் காக்க மீதமுள்ள 799 கோடி தீய எண்ணமுடையவர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம். இக்கருத்து தவறு என எவரால் மறுக்க முடியும்?

எத்தனையோ கடவுள் இருக்கின்றனர். எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. இருந்தும் மனிதன் திருந்தி விட்டானா? இன்றைக்கும் அதிகாரத்துக்கும், பேராசைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும், தனக்கென தனி சட்டம் வைத்திருக்கின்றானே? இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?

கேரளாவில் முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் அதிகமாயிருப்பதன் காரணமென்ன என்ற எனது பதிவினைக் கீழே படியுங்கள். 

கேரளாவில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள்

படித்து விட்டீர்களா?

தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் செல்லக்கூடாது, மார்புக்கும் மேலே உடையும் உடுத்தக் கூடாது, செருப்பு போடக்கூடாது, குளத்தில் குளிக்க கூடாது இப்படி மேல் சாதி என்றுச் சொல்லிச் சொல்லி மக்களை தன்மானத்துடன் வாழ விடாமல் அதிகாரத்துடன் சேர்ந்து கொண்டு அக்கிரமங்கள் செய்த காலத்தில், முஸ்லிம் மதத்திலோ, கிறிஸ்தவ மதத்திலோ சேர்ந்தாலாவது நம்மை மதிப்பார்கள் என்ற நோக்குடன் மதம் மாறியவர்களுக்கு, படிக்க வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்றுச் சொல்வது எவ்வளவு கொடூரம்? 

பார் புகழும் (??) பிரதமர் மோடி அரசு இப்படித்தான் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறது.

தன்மானத்துடன் வாழவும் விடமாட்டோம், மானங்கெட்ட வாழ்க்கையைத்தான் வாழ விடுவோம், வேறு வழி இல்லையென்று மதம் மாறினாலும் முன்னேற விடமாட்டோம் என்றுச் சொல்லும் அரசின் பதில் மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ஒரு பொய்யனால் தினமணியில் ஆ.ராசா என்பவர் முன்னேறி விட்டாராம். ஆகையால் அவர்களுக்கு இட ஓதுக்கீடு கூடாதாம் என்று எழுதப்பட்ட கட்டுரையினைப் படித்த போது, உயர் சாதியினரின் வன்மன் எத்தகையது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. 

பார்ப்பனியத்தின் மாயையினால் கீழ் சாதியினர் என்று அவர்களால் விழிக்கப்படும் சூத்திரர்கள் மதிகெட்டு, அறிவழிந்து, தன்னிலை அற்று, அடிமைகள் போல அவர்களின் பொய்களுக்குக் கட்டுப்பட்டு சேவகம் செய்து வரும் கொடுமைகள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நடக்குமோ தெரியவில்லை.

உயர் ஜாதியினரால் நிர்வகிக்கப்படும், உலகத்தின் ஒப்புயர்வற்ற தலைவரைக் கொன்றதாக வரலாறு சொல்லும் இயக்கத்தின் சார்பு கொண்டு ஒன்றிய அரசின் இந்த வகையிலான பதில்கள், சமீபத்தில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட மனித உரிமை கூட்டத்திற்கு எதிரானது அல்லவா?

சமூக வேறுபாடுகளை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தி, தன் அரசியலுக்குப் பயன்படுத்துவர்களை சட்டம் மன்னிக்காது என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகிறார்கள் பார்ப்பனீய உயர் சாதி பத்திரிக்கைகள்.

சமூக வேறுபாடுகளை அரசிடம் கொண்டு சேர்க்க போராடாமல் என்ன தான் செய்வதாம்? அவ்வாறு செய்தால் சட்டம் மன்னிக்காதாம் இப்படியெல்லாம் போராடுபவர்களை ஒடுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார்கள் உயர் சாதியினர்.

இன்றைக்கும் சாதிய வேறுபாடுகளால் தன் மானம் இழந்தவர்கள் மட்டுமே, மதம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்காத சட்டம், சமூக வேறுபாடுகளைப் பற்றிப் பேசுகிறது என்பது காலத்தின் கொடுமை.

தன் மானத்துடன் வாழவும் விடமாட்டோம், சாகவும் விடமாட்டோம் என்கிறார்களா ஒன்றிய அரசினர்? அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றனவா?

உயர் ஜாதி எனச் சொல்லிக் கொள்ளும் திருடர்களின் வசம் சிக்கி இருக்கும் இந்தியாவை இனி மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்திதான் மீட்க வேண்டும். அதுவரை இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பார்கள். இதோ கீழே இருக்கும் ஒரு செய்தியே சான்று. 

இந்தியாவின் ஜன நாயக அமைப்பான தேர்தல் கமிஷன், இன்று உச்ச நீதிமன்றத்தால் கேலிக்கைப் பொருளாகி நிற்கிறது. ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை, “வாயை மூடி இருக்கவும்” என்றுச் சொல்கிறது. ஆதாரம் கீழே. இந்தியாவின் ஒவ்வொரு அமைப்பும் அழிக்கப்படுகிறது என்பது  செய்திகள் சொல்லும் உண்மை.


தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலில் மோசடிகள் பற்றிய செய்தி. ஏன் இந்த மோசடி என்று யோசித்தீர்கள் என்றால், தேர்தல் கமிஷன் தேர்தலை ஒரு மா நிலத்தில் கூட நான்கு ஐந்து தேதிகளில் நடத்துகிறது அல்லவா? ஒவ்வொரு நாளிலும் கள்ள ஓட்டுப் போடவைக்க இப்படி ஒரு திட்டம். தேர்தல் கமிஷன் ஏன் ஒரே மாநில தேர்தலுக்கு பல தேதிகளை வெளியிடுகிறது என்று புரிகிறதா? விஷயம் ஓட்டு மெஷினிலும் வாக்காளர் பட்டியலிலும் இருக்கின்றன. ஆகவே இதர கட்சிகள் வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது அவசியம். 

உச்ச நீதிமன்றத்தை வாயை மூடிக் கொண்டிரு  என மிரட்டும் செய்தி

ஆதாரமின்றி எதையும் எழுதுவதுமில்லை, பேசுவதும் இல்லை. மேலே இருக்கும் செய்திகளை தொடர்புடைய இணையதளங்களில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள். 

மூழ்கப் போகிறதா இந்தியாவின் பொருளாதாரம்?

உலகப் பொருளாதாரத்தில் இன்றைக்கும் முதலிடத்தில் இருப்பது சீனாவும், ஜப்பானும். ஏனெனில் அவர்களின் பொருளாதாரக் கான்செப்ட் வித்தியாசமானது. ஆனால் அதுதான் சரியானதும் கூட என்னைப் பொறுத்தவரை.

ஒவ்வொரு ஆண்டு ஜி.டி.பிக்கு ஏற்ப பணம் உருவாக்கி வெளியில் விடும், ஒன்றிய அரசுக்கு மீண்டும் அப்பணம் திரும்பி வந்து விட்டால், அந்த பணத்தின் மதிப்பு சுழியம் அதாவது ஜீரோ என்பது பொருளாதாரத்தில் ஊறிய புலிகளுக்குத் தெரியும்.

நமது ஒன்றியத்தின் பிரதமர், இந்தியாவின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டுமென்று சொல்லி இருக்கிறார். 

ஏன்? அதனால் என்ன பயன்? வரலாறை ஏன் மாற்றி எழுத வேண்டும்? அப்படி எழுதினால் மக்களுக்கு ஏதும் நன்மை வருமா? நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெருமா? ஏழைகள் பணக்காரர்கள் ஆவார்களா? பணக்காரர்கள் உலகப் பணக்காரர்கள் ஆவார்களா?

இப்படி எதுவுவே நடக்காது. பின்னர் வரலாற்றை ஏன் மாற்ற வேண்டும்? 18ம் நூற்றாண்டில் இந்தியாவே இல்லை. நாடு பிடிக்கும் மன்னர்கள் இருந்த காலத்தின் வரலாற்றை மாற்றி எழுதி என்ன ஆகப் போகுது?  மொகலாயர்களுக்கு எதிராகப் போராடினார்களாம்? அவர்களை வரலாற்றில் எழுதவில்லையாம். ஆமாம் போராடி இருப்பார்கள் தான். மொகலாயர்கள் நாடு பிடிக்க வந்தவர்கள். இங்கிருந்தவர்கள் போராடி இருப்பார்கள். அதில் என்ன அதிசயம் இருக்கிறது?

ஆனால் நயவஞ்சகமாக ஆங்கிலேயர்கள் அல்லவா இந்தியாவை ஆக்கிரமித்து, இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கியவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை பிரதமர். அவர் மொகலாயர்களைப் பற்றிப் பேசுகிறார். ஏன்? உலகையே தன் ஆளுமைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் மொகலாயர்களை விட கொடுங்கோலாட்சி நடத்தியவர்கள். ஒரு வார்த்தை இல்லை. ஏனோ?

வேறென்னவாக இருக்க முடியும்? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

இதோ பிரதமர் பேசிய செய்தி கீழே...!


”சுதந்திரத்திற்குப் பிறகு நம்மை அடிமைப்படுத்திய அன்னியர்கள்” என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னால், இந்தியர்கள் தான் இந்தியாவினை ஆண்டனர். அன்னியர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

”நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து நமது தேசம் ஞானிகளாலும், துறவிகளாலும் வழி நடத்தப்படுகிறது” என்கிறார் பிரதமர். இன்றைய இந்தியதேசம் ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது. 

எந்த துறவியும், ஞானியும் அரசியலுக்கு வரவே இல்லை. அவரவர் கடமைகளைச் செய்தனர். காவி போர்த்திக் கொண்டு கொலைகள் செய்தவர்கள் வாழும் இந்த நாள் போல அந்தக் கால ஞானிகள் இருந்ததில்லை என்பது வரலாறு சொல்கிறது.

சரி, பிரதமர் பேசினால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். அவர் நம் பிரதமர். ஆகவே கேட்டுக் கொள்வோம். ஆனாலும் மனதுக்குள் எழக்கூடிய கேள்விகளை கேட்கத்தான் செய்ய வேண்டும். ஒரு பக்கம் இருக்கட்டும்.

கீழே இருக்கும் செய்தியைப் படியுங்கள். இனி வடையின் விலை ரூ.200 ஆகும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் துடைத்து விடுங்கள். காதில் தேன் வந்து பாயட்டும். வயிற்றில் அணையா பசி நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். 

இந்தியர்கள் மீண்டும் ஒரு கொரனாவை விட கொடிய தாக்குதலுக்கு தயாராக வேண்டும். உலகெங்கும் ஐ.டி கம்பெனிகள் வரப்போகும் சீரழிவை எதிர்கொள்ள வேலை ஆட்களைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன என்பது நமக்கான அலாரம். 

அவ்வளவுதான் விஷயம். நாட்டை முன்னேற்ற நல்ல திட்டங்களும், துல்லியமான பொருளாதாரக் கொள்கைகளும் தான் தேவை. வரலாற்றினை மாற்றி எழுவதால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை.

ஆகவே இந்தியர்கள் இனி வரக்கூடிய காலத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது அவசியம்.

மேலதிக தகவல்களுக்கு மூடிஸ் இணையதளத்தினைப் பார்க்கவும். நன்றி காலைமணி.காம்.


Thursday, November 3, 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர் சொத்து

சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பது தமிழ் நாட்டில். பராமரிப்பதும், பக்தர்களும் தமிழ் நாடு. ஆனால் கோவிலில் தமிழில் இறைவனுக்கு வழிபாடு செய்யக்கூடாது. தமிழுக்கு தமிழ் நாட்டில் இடமில்லையாம். நிர்வகிக்க அரசுக்கு அனுமதியில்லையாம். இப்படி ஒரு அக்கிரமம் எங்கேனும் இந்த உலகில் நடக்குமா? நடந்திடத்தான் முடியுமா? ஆனாலும் தமிழர்கள் இன்னும் அமைதிகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழில் இறை வழிபாடு செய்யமுடியாது என்றொரு கோவில். அதுவும் தமிழர்களின் சொத்தில் இருக்கிறது. என்ன ஒரு கொடுமை இது?

மக்கள் ஒன்று திரண்டால், ஒரே நாளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர்களின் நிர்வாகத்துக்குள் வந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு குலைந்து விடக்கூடாது என்பதற்காக, சட்டத்தை மதிக்க வேண்டுமென்பதற்காக தமிழர்கள் அமைதி காத்து வருகிறார்கள். ஊழல்ராணி ஜெயலலிதா இந்த நிகழ்வு நடக்கும் போது அமைதியாக இருந்தார். அதன் காரணமாக தீட்சிதர்கள் சிறு பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் அளவுக்கு, குற்றச்செயல்கள் செய்திருக்கின்றனர். 

தமிழக அரசு எடுத்திருக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக மற்றும் இதர கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர் சொத்து. தமிழர்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் முதல்வருக்கும் - அரசுக்கும்.