எகிப்திய பிரமிடுகள், இந்துக் கோவில்கள் போன்ற மர்மங்கள் நிறைந்து கிடக்கும் இடங்கள் இவ்வுலகில் பல உண்டு. இந்த மர்மங்களுக்குச் சாட்சியமாய் இருந்த மனிதர்கள் கால ஓட்டத்தில் ஒரு நாள் காணாமலே போய் விடுகின்றார்கள். அவர்களூடே அவர்கள் சம்மந்தப்பட்ட மர்மங்களும், ரகசியங்களும் மறைந்து போய் மேலும் மேலும் புதிராய், வரலாற்றுச் சுவடாய் நின்று கொண்டிருக்கின்றன. அந்த ரகசியங்கள் வெளிப்பட்டிருந்தால் மனிதனுக்கு உதவியாக இருந்திருக்கும்.
நான் அப்படி இருக்கப் போவதில்லை. எனக்குள் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ரகசியங்களை நான் எழுதத் துணிந்து விட்டேன். நானொரு வீடு என்று உங்களுக்குத் தெரியும். வீடு கதை சொல்லுமா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள்.
பாலு மகேந்திராவின் வீடு படம் பார்த்திருக்கின்றீர்கள் தானே. அந்த வீடு சொல்லும் கதையைப் பார்த்திருக்கின்றீர்கள் தானே? அதைப் போலத்தான் நானும் உங்களிடம் கதைச் சொல்லப் போகின்றேன். நான் பிறந்த தேதி எனக்குத் தெரியும். என் வாழ் நாள் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் மனிதனைப் போலத்தான்.
நான் சொல்லும் கதையைக் படிக்க விரும்பியவர்கள் படிக்கலாம்.
-
தொடரும்
6 comments:
தொடருங்கள்...,
தொடர்கிறோம்...,
iam waiting sir
தொடருங்கள்
சின்னத்துரை, ராஜிக்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன். பத்திரிக்கை வேலை, தொழில் என்று நேரம் சரியாக இருக்கிறது. வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பதிவு செய்ய இருக்கிறேன்.
Am also .....eagerly waiting sir
Am also .....eagerly waiting sir
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.