குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, February 9, 2012

புத்தக இடுக்கினுள் மறைந்து கிடக்கும் மயிலிறகுகளும் ஒன்பது மணி நேர மின்வெட்டும்



கோவையில் இதுவரையிலும் காணாத மின்வெட்டு. காலையில் மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம், இரவில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்து அடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்கிறார்கள், இதுவும் போதாது என்று விடிகாலையில் ஒரு மணி நேரம் என்று மின்வெட்டினை அமல்படுத்துகின்றார்கள் மின்சார வாரியத்தார். மொத்தமாய் ஒன்பது மணி நேர மின்வெட்டு.

எங்கள் பகுதியில் காலை ஒன்பது மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. ஆன்லைனில் வேலை பார்க்கும் என்னைப் போன்றோரின் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கஸ்டமருடன் தொடர்பு கொள்ள முடியவே இல்லை. இரவிலோ தொடரும் அசாதாரண மின்வெட்டினை நினைத்தாலே “டென்ஷன்” ஏறுகிறது. விடிகாலையில் மின்வெட்டு வேறு. பேசாமல் வீட்டினை சென்னைக்கு மாற்றி விடுங்கள், இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்றார் நண்பர்.

நடக்கக்கூடிய காரியமா இது? ஏன் இப்படியானது தமிழகம்? தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய சூழ் நிலைகள் ஒவ்வொன்றாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லையென்றால் மனிதன் எப்படித்தான் வாழ்வது? ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்றார்களே, என்ன ஆயிற்று? யாரிடம் கேட்பது இப்பிரச்சினை பற்றி? விரைவில் சரிசெய்கிறோம் என்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது.

கேபிள் டிவிக்கு 70 ரூபாய் கட்டணம் என்கிறது அரசு, ஆனால் எங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர் 100 ரூபாய் வாங்குகிறார். ஒளிபரப்பும் சரியில்லை. ஏன் என்று கேட்டால் அங்கிருந்து அப்படித்தான் வருகிறது என்கிறார்கள். இதுபற்றி யாரிடம் முறையிடுவது? எங்கே கம்ப்ளைண்ட் செய்வது என்றே புரியவில்லை. அரசு போடும் உத்தரவை கேபிள் ஆபரேட்டர் கூட மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.

உறவுகளால், நண்பர்களால் பிரச்சினை வரும். துன்பம் வரும், துயரங்கள் வரக்கூடும். ஆனால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அரசே உருவாக்குகிறது என்பது கொடிய விஷயம்.

தலைப்பிற்கும் இப்பதிவிற்குமான சம்பந்தம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

மேலே இருப்பது புலம்பல்கள். எழுதியாவது மன ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதியதால் மனவெழுச்சி கொஞ்சம் குறைந்திருக்கிறது.

மதத்திற்கு மனிதன் தேவையா? இல்லை மனிதனுக்கு மதம் தேவையா? என்பது பற்றிய முகத்தில் அறையும் அப்பட்டமான உண்மை பற்றிய பதிவினைத்தான் எழுத நினைத்தேன். ஆனால் ஆளும் அரசால் படும் வேதனை முன்னே வந்து நின்று கொண்டு மூளையை வேலை செய்ய விடமாட்டேன் என்கிறது. ஆகவே மின்சாரம் இருக்கும் போது, நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன். அதுவரை

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா ஊரிலும் இதே புலம்பல் + வேதனை தான் சார் !

Thangavel Manickadevar said...

நேற்று பாருங்கள், மதியம் பனிரெண்டு மணிக்கு பவர் வந்து விடும் என்று காத்துக் கொண்டிருக்கும் போது, லைன் மேன் கரண்ட் வந்த அடுத்த நிமிடம் ஆஃப் செய்து விட்டு ஏதோ வேலை செய்யப் போய் விட்டார். கொடுமையிலும் ஒரு கொடுமை.

கோவை நேரம் said...

நாம கற்கால மனிதர்கள் ...இதையும் சமாளிப்போம்....வேற என்னத்த சொல்றது

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.