குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label Lease financing. Show all posts
Showing posts with label Lease financing. Show all posts

Sunday, June 23, 2024

கடனில் சிக்கி உள்ளீர்களா? மீட்க என்ன செய்யலாம் - பொருளாதாரம்

2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் பல பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. பல மீடியம் சைஸ் நிறுவனங்களும், சிறிய நிறுவனங்களும் பல்வேறு காரணங்களால் கடனில் சிக்கி சிதைந்து வருகின்றன. மோடி அரசு கடனுக்காக மாதத் தொகை கட்டண நாட்களை 60 நாட்களாக குறைத்து விட்டது.

இதன் காரணமாக நல்ல முறையில் இயங்கி வந்து கொண்டிருந்த பல நிறுவனங்களை வங்கிகள் என்.பி.ஏ (NPA) கடனாளி என வரையறுத்து விடுகின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல திடீர் கடனில் சிக்கி தத்தளித்து வருகின்றன. 

இதற்கிடையில் நிறுவனங்களின் சொத்துக்கள் மீது கண் வைக்கும் ஒரு சில பேராசை பிடித்த வங்கி ஆட்களால் அந்த நிறுவனம் சூரையாடப்படுகிறது.

ஒரு வங்கியில் கடன் நிலுவையில் இருந்தால் பிற வங்கிகளில் உள்ள கடன்களும் சிக்கலுக்கு உள்ளாகின்றன. இந்தச் சூழலில் பலர் தங்கள் நிறுவனம் முடக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் ஏலத்தில் செல்வதை தடுக்க முடியாமல் வேதனையுடன் விரக்தியில் வாழ்கின்றனர். SARFASI  சட்டத்தினை பல புத்திசாலி கிரிமினல் வங்கி ஆட்கள் பயன்படுத்தி - ரியல் எஸ்டேட் ஆட்களுடன் கூட்டிணைந்து நிறுவனச் சொத்துக்களை விற்பனை செய்து, அதில் லாபம் ஈட்டி வருகின்றனர் எனப் பலர் சொல்வதைக் கேட்டு வருகிறோம்.

இதில் ஒரு சில நிறுவனங்கள் வங்கிக் கடன்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும், கடுமையான உழைப்பால் உயர்வடைந்த நிறுவனங்களில் உள்ளே நடக்கும் பல சதிச் செயல்களினால், பல நிறுவனங்கள் பல சிக்கல்களில் சிக்கி விடுகின்றன.

இவர்களுக்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பலரும் பல ஆலோசனைகளை வழங்கினாலும், தீர்வு கிடைத்தபாடில்லை. 

ஒரு நிறுவனத்தை நல்ல முறையில் நடத்திட பல வகையான நிர்வாக முறைகள் தேவைப்படுகின்றன. நிர்வாகம், நிதி, செயல்பாடுகள், விற்பனை, எதிர்கால திட்டமிடல், போட்டியாளர்களுடன் போட்டியிடுதல், விற்பனைப் பெருக்கம் என பல முறைகளை துல்லியமாகப் பயன்படுத்தினால் தான் நிறுவனத்தினை லாபகரமாக நடத்தி உயர்வடைய முடியும்.

ஆனால் பல நிறுவனங்களில் பல முறைகள் பல காரணிகளால், ரகசியமாக சிதைக்கப்பட்டு விடுவதை கண்டு வருகிறோம். அக்காரணிகள் எதுவென அறியும் திறனுள்ளவர்களுடன் தொடர்பில்லாத நிறுவனங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கும் ஏஜென்சிகள் உள்ளன என்று செய்திகள் படிக்க கிடைக்கிறது. 

நாங்கள் இது போன்ற சிக்கல்களுக்கு உட்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு மிகத் தெளிவான முறையில் கடனில் இருந்து மீண்டு, நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வழிகளை அளிக்கிறோம்.

எங்களது சேவைகளை கீழே பார்க்கவும்.

  • Growth Capital through Structured Lending (Private Credit, Invoice Financing, Revenue-based Financing, Lease Financing)
  • Distressed Assets & NCLT/IBC Handling
  • Sell-side advisory of firms with Assets & Future revenues
  • Bridge/Mezzanine Financing
கடனில் இருக்கிறோம் எனக் கவலைப்பட வேண்டாம். கவலையை விடுங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு உண்டு என நம்புங்கள். நாங்கள் நிறுவனத்தின் கடன்களுக்கான சேவைகளை மட்டுமே தற்போது தருகிறோம்.  

எதிர்காலத்தில் தனி நபர்களின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வினையும் அளிக்கவிருக்கிறோம்.  

இதுபற்றிய மேலதிக தகவல்கள் தேவைப்படுபவர்கள் vsjinfra@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தங்களின் தேவை என்ன என்பது பற்றி எழுதவும்.  

சரியான துல்லியமான தீர்வினை எங்களால் தர இயலும் என உறுதியளிக்கிறேன்.

வளமுடன் வாழ்க...!