குரு வாழ்க ! குருவே துணை !!

SatGuru Gnani Vellingiri Swamy Charitable Trust

(சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்)
 

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமி சாரிட்டபிள் டிரஸ்ட்  அரசின் பதிவு பெற்றது. எம் குரு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவசமாதி கோவில் இந்த டிரஸ்டின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஸ்வாமியின் சீடர் காலம் சென்ற திரு நாகராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அவரின் மகள் செல்வி ராஜேஸ்வரி மற்றும் திரு.ஜோதி ஸ்வாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சற்குருவின் ஜீவசமாதி வழிபாட்டுக்கு ஒரே ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் செல்ல வேண்டும். ஜீவசமாதி வழிபாட்டுக்குச் செல்லும் போது ஆண்கள் திறந்த மார்புடன் செல்வது ஆரோக்கியத்துக்கும், மன அமைதி பெறவும் உதவிடும் என முன்னோர்கள் வழிகாட்டி இருக்கின்றார்கள். அதன் பிறகு குருவின் சொற்களைப் பின்பற்ற வேண்டும்.

”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”

இங்கு சனி, ஞாயிறு மற்றும் சிறப்பு நாட்களில் சுமார்  இருநூறு பேருக்கும் மேலும், சாதாரண நாட்களில் நூறு நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் மற்றும் டிரஸ்ட்டுக்கு வழங்கும் நன்கொடை ஆகியவற்றால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமைகளில் ஜோதி சுவாமி அவர்களால், வாசியோகப் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வழி காட்டி வரப்படுகிறது.

ஆஸ்ரமம் வழிபாட்டுக்கு காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அனுமதி உண்டு. சிறப்பு நாட்கள் தவிர இதர நாட்களில் இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை.

இந்த டிரஸ்ட் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, 80G மற்றும் 12AA பெறப்பட்டு நன்கொடையாளர்களுக்கு ரசீதும்,  பான் நெம்பர் வழங்கப்பட்டு வருமானத்திலிருந்து வரி விலக்கு பெற உதவி செய்யப்படுகிறது. 

வருடம் தோறும் டிரஸ்டின் கணக்கு வழக்குகள் முறைப்படி தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. டிரஸ்டின் மூலம் பெறக்கூடிய நன்கொடைகள் ஆசிரமத்திற்கு தேவைப்படும் பொருட்களுக்கும், அன்னதானத்துக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி சாரிட்டபிள் டிரஸ்டுக்கு நன்கொடை அளிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட வங்கியில் தங்களின் நன்கொடையினை அளிக்கலாம். ரசீது மற்றும் பான் நெம்பர் விபரங்களுக்கு  நன்கொடை அளித்த விபரத்துடன் எனது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் ரசீது அனுப்பி வைக்கப்படும்.

Name : SATGURU GNANI VELLINGIRI SWAMY CHARITABLE TRUST
Account Number : 500101011738858
Bank Name : CITY UNION BANK
Branch : PERUR BRANCH
IFSC CODE : CIUB0000521

CONTACT : 9894815954 // 9080222657

For getting Receipt and PAN Details of Trust after pay the Donation, contact below email.

EMAIL : covaimthangavel@gmail.com

இங்கனம்

கோவை தங்கவேல்

சுவாமியின் பக்தர்களில் ஒருவன்