குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, January 11, 2023

1927 - மதுரை மங்கம்மாள் சத்திரத்திலே சூத்திரன், பஞ்சமன் போர்டுகள்

அன்பு நண்பர்களே,

மனிதர்களில் உயர்வு தாழ்வு பார்க்கும் தன்மை இன்றும் குறைந்தபாடில்லை. கீழ் சாதி, மேல் சாதி பாகுபாட்டில் மனிதர்களை தங்களுக்குள் அடித்துக் கொள்ள வைத்து ரத்தம் குடிக்கும் நயவஞ்சகத்தின் ஓநாய்கள் பற்றிய செய்தி கீழே இருக்கிறது.

1200 ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் மனிதர்களை முட்டாளாக்கி வைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளிடமிருந்து எப்போது வெளியே வரப்போகிறார்கள் மனிதர்கள் என்று தெரியவில்லை.

1927ல் சத்திரங்களில் கூட சூத்திரன் என போர்டு வைத்திருந்தார்களாம். தமிழ்நாடு எந்தளவுக்கு நரித்தந்திர கூட்டத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக வாழ்ந்தார்கள் என்பதை தந்தை பெரியார் குடியரசு பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்.

ஆளுநர் ரவி ஏன் தந்தை பெரியார் பெயரைக் கூட உச்சரிக்க மறுக்கிறார் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். அந்தளவுக்கு வெறி பிடித்து அலைகிறார். ஆளுநர் சாதி எனும் போரை தமிழர்களின் மீது தொடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு பூரண ஆசி பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவு. 

டெல்லியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியை மேயர் தேர்தலில் ஜெயிக்க விடாமல் செய்யும் நரித் தந்திரங்களை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். அரசியல் சட்டங்களுக்கு எதிராக கட்சிகளை நடத்துபவர்களைத் தான் தேச பக்தர்கள் என்பார்களா? எவ்வளவு நயவஞ்சகம்?

சதிகார ஓநாய் கூட்டம் - தமிழினத்தையும், தமிழர்களையும் மீண்டும் அடிமைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. கவனமாய் இருங்கள்.
0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.