குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 30, 2022

மக்கள் சேவைகள் எவை எவை

இன்றைய நாளிதழில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பேசியதாக ஒரு செய்தி.  மக்கள் சேவையே பாஜகவின் நோக்கம். இந்தியாவை முன்னேற்ற இதுவரை பாஜக செய்து வரும் மக்கள் பணிகள் என்னென்ன என்று குழப்பம் வந்து விடக்கூடாது.

எவையெல்லாம் மக்கள் சேவை?

 • 2014ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.58.80 பைசா
 • 2022ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80.81 பைசா
 • சுங்க வரி கட்டணம் உயர்வு
 • நிறுவனங்களின் வாராக்கடன் 12 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி
 • சமையல் எரிவாயு விலை ரூ.1100
 • உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரிப்பு
 • வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
 • பணவீக்க விகிதம் 7 சதவீதத்துக்கும் மேல்
 • பாஜக ஆளாத மா நிலத்தில் கவர்னர்களை வைத்து சட்டசபையை முடக்கி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த விடாமை
 • அரசியல் எதிரிகள் மீது பலமுனைத் தாக்குதல்
 • ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் பார்ப்பனியர் ஆதிக்கம்
 • நீதித்துறையில் அரசு தலையீடு - (நான்கு ஜட்சுகள் புகார் ஆதாரம்)
 • ஜி.எஸ்.டியில் 28 சதவீதம் வரை வரி - அதாவது 100 ரூபாய்க்கு 28 ரூபாய் வரி
 • மதத்தின் பெயரால் அரசியல் பொய் புரட்டுகள் கலவரங்கள்
 • ஷேர் மார்க்கெட்டில் 5 லட்சம் கோடிக்கும் மேல் முறைகேடு - வழக்கு நிலுவை - லட்சுமி 
இவைகள் மக்கள் நலனுக்கானவை. இந்தியாவின் கட்டமைப்புக்காக, வளர்ச்சிக்காக.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.