குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, September 27, 2022

ஜக்கி வாசுதேவ் - அசாமில் அனுமதியற்ற இரவு நேரத்தில் காண்டாமிருக வனத்துக்குள் சவாரி

ஒரு சிலருக்கு எல்லாமும் கிடைத்து விட்டால், மமதை ஏறிவிடும். ஒரு சிலருக்கு அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைத்து விட்டால் உலகமே ஒன்றுமில்லை என்று ஆகிவிடும். 

ஜக்கி வாசுதேவ் தன்னை சத்குரு என்று அழைக்கச் சொல்கிறார். முல்லா என்கிறீர்கள், ஃபாதர் என்கிறீர்கள், என்னை சத்குரு என்று அழையுங்கள் என்கிறார். 

பெயரில் என்ன இருக்கிறது. காலத்தின் முன்னாள் என்றோ ஒரு  நாள் விதி முடிந்த நாளன்று, பிணமாகப் போகும் பிண்டம் தானே சத்குருவும். 

ஒன்பதாயிரம் கோடி வாகனத்தில் பயணம் செய்தாலும் வயது ஏற ஏற கிழட்டுப் பருவம் வரத்தானே செய்யும். ஒன்பதாயிரம் கோடிப்பு - வயது ஏறாதப்பு என்றுப் பெருமை பேசிக் கொள்ளலாம்.

இணையதளத்தில் ஜக்கியைப் பற்றி விமர்சித்தால் அவர் கோடானு கோடி மக்களால் பின் தொடரப்படும் மகான். அவரை விமர்சிக்க எவருக்கும் தகுதி இல்லை என்று திட்டுவார்கள். 

விமர்சன கமெண்ட் போட்டால் 200 ரூபாய் உ.பியா என்பார்கள். ஜக்கிக்கு தூக்கிப் பிடிக்கும் இவர்கள் 200 ரூபாய்க்கு கூட தகுதியில்லா தற்குறிகள் என்பதை மறந்து போகிறார்கள்.

அதென்னவோ தெரியவில்லை - ஜக்கிக்கு விலங்குகள் என்றால் பிடிக்காது போலும். 

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து விட்டு, இல்லவே இல்லை என்கிறார்.  ஜக்கி மையம் வைத்திருக்கும் இடத்தில் பெரிய பிரச்சினை இருக்கிறது. அது தற்போதைய ரெவின்யூ ஆட்களுக்குத் தெரிவதில்லை.

ஜக்கி சும்மாச்சுக்கும் காட்டுக்குள் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கமாட்டார். உட்காரணம் என்ன? 

சிவரகசியம்.

உலகிற்கே தெரியும் - ஈஷா யோக மையம் - யானை வழித்தடத்தில் உள்ளது என்பது. ஆனால் இன்றும் ஜக்கி யானை வழித்தடத்தில் இல்லை என்று பொய் பேசிக் கொண்டிருக்கிறார். இணையவசதி இருக்கிறவர்கள் ஜக்கியின் ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் பகுதியை கூகிள் மேப்பில் பாருங்கள். ஆக்கிரமித்திருக்கிறாரா இல்லையா என்பதை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.


அசாமில் உள்ள காசிரங்கா வனப்பகுதியில் இரவில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்தா மல்லா பருவா ஆகிய இருவரும் கூட இருக்க, இரவில் தானே காரை ஓட்டிக் கொண்டு காண்டாமிருகம் வசிக்கும் காட்டுப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட நேரத்தில் உலா சென்றிருக்கிறார் ஜக்கி. 

பேட்டியைப் பாருங்கள்.

இதை எதிர்த்து இரண்டு சமூக செயல்பாட்டாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்ததும், வழக்கம் போல அரசியல், “ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என முதலமைச்சர் திருவாய் அருளியிருக்கிறார்.

மேலே இருக்கும் வீடியோயில் வெகு தெளிவாக இரவு மூவரும் சட்டத்தை மீறி காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மக்களுக்கு நான்கு மணி வரை மட்டுமே அனுமதி. 

ஆனால் ஜக்கிக்கோ கார் ஓட்ட அனுமதி? 

யாரிந்த ஜக்கி? ஒரு சாதாரண யோகா மாஸ்டர் தானே? எதற்கு இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் விசாரித்துப் பாருங்கள். பெரும் பூதம் இருந்தாலும் இருக்கலாம்.

ஏதோ ரகசியம் இருக்கிறது. தண்ணீருக்குள் விடப்பட்ட அபான வாயு, வெளியில் குபுக்கென வருமாம். வரும் போது தெரிந்து கொள்வோம்.

செய்தியை தமிழ் விபச்சார மீடியாக்கள் வெளியிடாது என்பதால் பிளாக்கில் எழுதி இருக்கிறேன்.

செய்தி ஆதாரம் : https://www.tribuneindia.com/news/nation/row-over-assam-chief-minister-sadhgurus-kaziranga-park-night-jeep-safari-435465

செய்தியில் ஒரு பகுதி கீழே

Videos circulated on social media and local channels showed Vasudev driving an open safari SUV along with Sarma and Baruah.

"There is no violation. According to wildlife law, the warden can give permission to enter a protected area even at night. No law stops people from entering at night. Yesterday, we had the formal opening of the park for this season and now Sadhguru and Sri Sri Ravi Shankar have arrived. Since they have lakhs of followers, this time we expect the tourist season will be very good for Kaziranga," Sarma told reporters on Sunday night. (ஜக்கியின் வியாபார தந்திரம் - பாலோயர்ஸ்)

Sarma and Vasudev on Saturday inaugurated the three-day Chintan Shivir at Kaziranga.

Later, Chief Minister Sarma unveiled three rhino statues at Mihimukh in Kaziranga along with Vasudev.

These rhino statues have been created using the ashes collected from burning rhino horns. It may be noted that on September 22, last year, the Assam government made history when a stockpile of 2479 rhino horns were consigned to flames to send across a strong message to the poachers and illegal horn traders that rhino horns have no medicinal value.

The rhino statues thus created are an attempt to immortalize the efforts and dedication of those who selflessly protect Assam's pride, the great one-horned rhinoceros.

On Saturday, the Assam Chief Minister along with Sadhguru Vasudev also opened the Kaziranga National Park for tourists for this season.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.