குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 23, 2022

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி - பிஜேபி ஊழல் ஆட்சி செய்கிறதா?

காங்கிரஸ் ஆட்சியின் போது குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முதல்வர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பேசிய காணொளியைக் காணுங்கள். பிரதமர் இந்த வீடியோவில் பேசிய போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.98 வாக இருந்தது.

இந்த வீடியோவின் டிஸ்கிரிப்சனில் இப்படி இருக்கிறது.

Depreciating Value of Indian Rupee In International Markets Is Just Because Of The Corrupt Governance Of UPA at The Centre, Which Is Creating Adverse Efects On Industrial Growth, Import, Export.


நன்றி : www.narendaramodi.in

22.09.2022 தேதி அதாவது நேற்று, இந்திய ரூபாயின்  மதிப்பு ரூ.80.82. இதை நான் சொல்லவில்லை, பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

இதோ செய்தி ( நன்றி : பிசினஸ் ஸ்டாண்டர்ட்)

பிரதமர் மோடி அவர்கள் பேசிய வீடியோ மேலே இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். 

பிரதமர் அவர்கள் தனது ஆட்சியில் ஊழல் நடக்கிறது என்று ஒத்துக் கொண்டார் என நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? அன்றைக்கு அவர் பேசியது உண்மை எனில், இன்றைக்கும் அதுவாகத்தானே இருக்க முடியும்? அன்றைக்கு அவர் சொன்னதை நம்பி நானும் அவருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதைக் கவனத்தில் கொள்க.

அவர் பேசிய கருத்தின்படி, இந்தியாவில் பிஜேபி மாபெரும் ஊழல்களைச் செய்து வருகிறது அல்லவா? 

இந்தியாவின் ரூபாய் மட்டும் வீழ்ச்சி அடையவில்லை. நடுத்தர வர்க்க மக்கள் ஏழைகளாக வீழ்ந்தார்கள். ஏழைகள் பஞ்சைப் பறாரிகளாக வீழ்ந்தார்கள். வேலை வாய்ப்பு கிடைக்காமல் இளைஞர்கள் பொய்களால் வீழ்ந்தார்கள். ஆனாலும் இந்தியா வளர்கிறது. 

எப்படி?

வெறும் ஆறு கோடி மக்கள் வசிக்கும் பிரிட்டனில் இந்த ஆண்டின் காலாண்டு, உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 814 பில்லியன் டாலர். ஆனால் 140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் இதே காலகட்டத்தில் 854.7 பில்லியன் டாலர்கள் என்கிறது ஐ.எம்.எஃப் (IMF) ஆய்வறிக்கை.

அதாவது பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி விட்டது இந்தியா? அங்குள்ள மக்கள் தொகை எவ்வளவு? வெறும் ஆறு கோடி. 

இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை எவ்வளவு? 140 கோடி.

இந்தியா எப்படி முன்னேறுகிறது பாருங்கள். இதை நாம் நம்ப வேண்டும். நம்பிக் கெடுபவர்கள் நாம் என்கிறது வரலாறு.

இதை நான் சொல்லவில்லை என்று இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.