குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 30, 2022

3570 கிலோ மீட்டர் நடை பயணம் - யாருக்காக நடக்கிறார் ராகுல் காந்தி?

உலகில் வேறெந்த தலைவராலும் முடியாத ஒரு நடை பயணம் - ராகுல் காந்தி - ஒப்பற்ற தலைமைப் பண்புள்ள தலைவராக - இந்திய மக்களின் ஒற்றுமைக்காக - நடக்கிறார்.

ஏன்?

பதவி வேண்டுமா? 

பணம் வேண்டுமா?

என்ன வேண்டும் இவருக்கு?  ஏன் இத்தனை கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார்?

என்ன இல்லை அவரிடம்? ஏன் நடக்க வேண்டும் இவ்வளவு தூரம்?

அவர் என்ன கொடுக்கவில்லை இந்தியாவுக்கு?

அவர் தாத்தா இந்தியாவிற்கு கொடுத்தது - நாடாளுமன்றம். 

ஒன்பதாண்டு காலம் நேரு சுதந்திரத்துக்காக சிறையில் கிடந்தார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார்கள்.

இன்னும் எவ்வளவோ? 

இந்தியாவின் இன்றைய கட்டமைப்பை உருவாக்கியது காங்கிரஸ்.

காங்கிரஸ் போட்ட சாலையில் பயணம் செய்யும் நவீன கால போலிகள் - உயர் ஜாதிய ஆக்கிரமிப்பு - மத அரசியல் - பொருளாதார சீரழிவினை எட்டு ஆண்டுகளாய் நாசமானாலும் பரவாயில்லை. ஆனால் இந்திய மக்களிடம் மத வெறுப்பின்மையை - உணவால், உடையால், மொழியால், ஜாதியால் உருவாக்கி உள்ளார்கள் இந்த எட்டு ஆண்டுகளில்.

இந்தியாவின் ஆன்மாவான சத்யாகிரகத்தின் தந்தை மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலைகள் வைக்கிறார்கள்.

மதம் பேசுபவன் - அயோக்கியன், ஜாதி பேசுபவன் - கலவரக்காரன் - மக்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத நயவஞ்கக் கூட்டத்தின் நாசகார திட்டத்தினால் - இந்தியா முழுமையும் கலவரம் செய்கிறார்கள். கூலிக்கு வேலை செய்யும் குறை மதியாளர்களின் கூட்டம் கொக்கரிக்கிறது. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படும் எச்சையர்களின் கூட்டம் பொய்களால் மக்களைக் குழப்புகிறார்கள். ஆடுகள் கூப்பாடு போடுகின்றன. ஆட்டு மந்தைக் கூட்டங்கள் முட்டிக் கொள்கின்றன. பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ஏழைகள் அழிக்கப்படுகிறார்கள். 

இந்தியர்கள் ஒற்றுமையுடன் இந்தக் களவாணிகளை வேரறுக்க வேண்டும்.

காங்கிரஸ் - இந்தியா - இந்திய மக்களுக்கானது. 

மீண்டும் இந்தியா சுதந்திரப்போருக்கு முன்பு இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது கண்டு, மக்களை ஒன்று சேர்க்க தியாகத்தினால் உருவான ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கிறார் இந்திய மக்களின் ஒற்றுமைக்காக.

வரும் கால இந்தியா - அமைதியாய், ஆனந்தமாய், முன்னேற்றமடைய வேண்டுமெனில் நாட்டு மக்கள் மீது அன்பு கொண்ட தலைவரால் தான் முடியும்.

அவர் - நம் ராகுல் காந்தி

ஒன்பதாயிரம் கோடி வாகனம் இவரிடத்தில் இல்லை.

இந்தியாவெங்கும் நடக்கும் ஒப்பற்ற தலைவர்.

ஒன்று சேர்வோம் இந்தியர்களாக. மதவெறி கூட்டத்தை - ஜாதி வெறியர்களை மண்ணோடு மண்ணாக்கி - எதிர்கால இந்தியாவை வரும் கால சந்ததியினருக்கு உருவாக்கித் தருவோம்.

இணையுங்கள் நடைபயணத்தில். காப்பாற்றுவோம் இந்தியாவை.

வாழ்க இந்தியா - இந்தியர்கள்.
நாம் இப்போது வாழும் இந்தியாவை நிர்மானித்தது காங்கிரஸ் கட்சி. நன்றி மறந்தவர்களால் தான் இன்றைய அத்தனை சீரழிவும். போதும் போலிகளிடம், பொய்யர்களிடம், ஜாதிய அடிமைகளிடம், மத வெறியர்களிடம் ஏமாந்தது.

நாம் நன்றியுணர்ச்சி உடையவர்களாய் இருப்போம். 

ராகுல்காந்தி என்ற ஒப்பற்ற தலைவரின் வழியாக நம் இந்தியாவை மதச்சார்பற்ற - ஜீவகாருண்ய நாடாக்குவோம்.

2 comments:

Ijajahamed said...

சிறந்த தலைவர்

Ijajahamed said...

தலைசிறந்த ஆளுமை

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.