குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, May 9, 2022

தமிழர் நல துக்ளக் விழாவில் நிர்மலா சீதாராமன் கேள்விகள்

இந்தியாவின் மதிப்பிற்குரிய உயர் ஜாதி ஏழைகளான பிராமண இனத்தில் பிறந்து இந்திய வரலாற்றில் முதன் முதலாக நிதியமைச்சராக பொறுபேற்ற முதல் பெண்மணி என்று பெயர் பெற்றவரும், தங்களுக்கென தெரு, மொழி, உடை, பேச்சு மொழி, உணவு, சூத்திர அடிமைகளின் அரசர்கள் என்று அந்தக் காலம் முதல் சமுதாயத்தில் மரபாக ஜாதிய அடையாளங்களுடன் இன்றும் பாரம்பரியம் மாறாமல் வாழும் பிராமணர்கள் வரலாற்றில் இடம் பெற்ற முதல் பெண் நிதியமைச்சர் என்ற புகழ் பெற்ற பெண்மணியான மதிப்பிற்குரிய நிர்மலா சீத்தாராமன் அவர்கள், தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் ஈடு இணையற்ற சேவை செய்து வரும் மஹா அனுபூதி மகா கனம் பொருந்திய குரு மூர்த்தி அவர்களின் சீரிய ஆசிரிய திறமையால் உலகெங்கிலும் இருக்கும் தமிழ் பத்திரிக்கைகளில் முன்னணி வகிக்கும் துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்து கொண்டு பேசிய பொன் மொழிகளும் அதற்கான விரிவுரையினையும் பார்க்கலாம். அடியேனும் பிராமணர்களின் சூத்திர அடிமை என்ற பெறற்கரிய புகழுக்கு உரியவன் என்பதில் எனக்கெப்போதும் ஒரு மகிழ்ச்சி உண்டு.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு அம்மையாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர தமிழக நிதியமைச்சர் ஒப்புக் கொண்டால் ஜி.எஸ்.டி கவுன்சிலில் விவாதிக்கலாம். ஜி.எஸ்.டி வரிப்பகிர்வாக 78 ஆயிரம் கோடி தான் தர வேண்டி உள்ளது. அதனை விரைவில் தந்து விடுவோம். உண்மை இது என்றாலும் தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்வதாக சொல்வது பிரிவினை வாதம். மருத்துவக் கட்டமைப்புக்கும், பதினோறு மருத்துவக் கல்லூரிகளையும், ஏராளமான மின் திட்டங்களையும் மோடி அரசு தான் தந்தது. ஹிந்தியைத் திணிக்கக் கூடாது என்பவர்கள் ஹிந்தியை கற்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக நிதி அமைச்சர் அனுமதிக்க வேண்டுமாம். தமிழக நிதியமைச்சர் சொல்லித்தான் ஜி.எஸ்.டியை கொண்டு வந்ததா மோடி அரசு? என்று தெரியவில்லை. மர்மமாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு என்பது தமிழர்கள் கட்டிய வரியில் சுமார் ஒரு ரூபாயில் அறுபத்தைந்து பைசா எடுத்துக் கொண்டு விட்டு மீதம் உள்ள முப்பதைந்து பைசாவைத் திரும்பத் தருவது ஆகும். ஒன்றிய அரசு வேற்று மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஒரு பைசா கூட தரவில்லை. தமிழகத்தில் இருந்து பிடுங்கி, பாஜக ஆளும் மா நிலங்களுக்கு தமிழர்களின் வரியைக் கொண்டு போய் கொட்டுகிறது மோடி அரசு என்று பல விபரங்கள் இணையத்தில் கிடக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசு தானே சம்பாதித்து தருகிறது என்று பொருள்படும்படி பேசி இருப்பதால் மாநிலங்கள் எதுவும் வரி செலுத்துவதில்லை என்று அறிய நேரிடுகிறது. இத்தனை நாளும் மா நிலங்கள் மூலமாகத்தான் வரி ஒன்றிய அரசுக்கு செல்கிறது என்ற அறியாமையால் பீடிக்கப்பட்டிருந்ததை நினைத்து வருத்தமேற்படுகிறது.

மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவ கல்லூரிகள், மின்சார திட்டங்களெல்லாம் தமிழர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படுபவை. பிரதமர் மோடியும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் தனிப்பட்ட முறையில் சம்பாதித்துக் கொடுத்தது அல்ல இவைகள் என்று பலர் எழுதி வருகிறார்கள். தூங்க நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் நிதியமைச்சரும், பிரதமரையும் இழிவு படுத்தும் வகையில் பலர் எழுதி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஐந்து மொழிகளால் உருவான, ஆறேழு மாநிலங்களில் பேசும் மொழியினை தாங்கள் ஆட்சியிலிருக்கிறோம் என்ற காரணத்தால் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒன்றிய இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தியைக் கொண்டு வர நினைப்பது சட்ட விரோதம். உலகிற்கே மூத்த மொழி தமிழை ஆட்சி மொழியாக தமிழால் வயிறு வளர்த்து வரும் பிராமண ஜாதியைச் சேர்ந்த பிடுங்கப்பட்ட துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், அதே இனத்தைச் சேர்ந்த நிதியமைச்சரும் ஏன் முயலவில்லை? உலகெங்கிலும் தமிழர்கள் இல்லா இடமே இல்லை எனும் போதும் செம்மொழியாம் தமிழ் என்கிற தகுதி இருக்கும் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்று சூளுரைக்கும் நிதியமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலர். அதெப்படி சரியாக வரும். பிரதமர் மோடிக்கு என்ன பிடித்ததோ அதைதான் இந்தியர்கள் செய்ய வேண்டும். அதுதானே நாட்டுப்பற்று?  அவ்வாறு செய்யவில்லை என்றால் அது தேசத்துரோகம் அல்லவா? 

சிலிண்டரின் விலையை 1015 ரூபாய்க்கு உயர்த்தி வருவதைக் காண்கிற போது ஏழைப் பெண்கள் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. எழுபது ரூபாய் விற்ற பருப்பின் விலை இன்றும் 180 ரூபாய் விற்கும் போது விவசாயிகள் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று அறிய முடிகிறது. பெட்ரோல் விலை 110 ரூபாய் விற்கும் போது இந்தியாவில் ஏழைகளே இல்லை என்ற நிலையை பிஜேபி ஆட்சியும், உலகின் ஆகச் சிறந்த பிரதமர் மோடியின் ஆட்சித் திறனையும் எண்ணி வியப்பேற்படுகிறது. என்னே ஆட்சி? என்னே ஒரு திறன்?

வரியைக் கேட்டால் பிரிவினை வாதம் தான் அது என்ற பொருளை நான் அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறதே என்று எண்ணி எண்ணி நெஞ்சமெல்லாம் மகிழ்வில் நிரம்பி இருக்கிறது.

வாழ்க பிஜேபி. வாழ்க பிரதமர்  மோடி.

நன்றி : தினமணி0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.